29.3 C
Chennai
Monday, Dec 30, 2024
25 1458880137 6
கர்ப்பிணி பெண்களுக்கு

கர்ப்ப காலத்தில் அதிக உடல் எடை – உடல்நல விளைவுகள்!

உடல் ஆரோக்கியம் என்பது நம்முடைய கைகளில் உள்ளது. சரியான உணவு வகைகள், சீரான உடற்பயிற்சி போன்றவற்றின் மூலம், நாம் நம் உடல் ஆரோக்கியத்தை பேணிக்காக்கலாம். உங்களுடைய உடல் எடையானது, உங்களுடைய ஆரோக்கியத்தை தெள்ளத் தெளிவாக காட்டும் கண்ணாடி போன்றது. எனவே, உங்களுடைய அதிக எடை, உங்களுக்கு எண்ணற்ற சிக்கல்களைத் தரும்.

அதிலும் மிக முக்கியமாக பெண்களூக்கு அதிக எடை மிகவும் ஆபத்தானது. பெண்களின் கர்ப்ப காலத்தில் அதிக எடை இருப்பது அவர்களுக்கும், ஏன் அவர்களுடைய குழந்தைக்கும் சிக்கல்கள்களை ஏற்படுத்தலாம். ஒரு ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க, கர்ப காலத்திலும், அதற்கு முன்னரும் பின்பற்ற வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் உள்ளன.

கர்ப்ப காலத்தில் அதிக உடல் எடை

கர்ப்ப காலத்தில் உங்களுடைய எடை எவ்வளவு அதிகரிக்கும் என்பதைப் பற்றி உங்களுடைய மருத்துவரிடம் ஆலோசனை மேற்கொள்ளுங்கள். எப்போதும் கர்ப்ப காலத்தில் எடையை குறைக்க முயற்சி செய்ய வேண்டாம். கர்ப்பத்திற்கு முன் நீங்கள் அதிக எடையுடன் இருந்தால், உங்கள் உடல் நிறை குறியீட்டெண் (பிஎம்ஐ) 25.0 முதல் 29.9 வரை இருக்கும். அதுவே நீங்கள் மிகவும் அதிக எடையுடன் இருந்தால், 30.0 அல்லது அதற்கு அதிகமாக இருக்கும்.

முன்சூல்வலிப்புகள் நீங்கள் கர்ப்பம் தரித்த இருபதாம் வாரம் அல்லது கர்பம் தரித்த உடனே ஏற்படாலாம் என்று ஒரு கூற்று உள்ளது. மேலும், உடல் எடை அதிகம் உடைய பெண்கள், ஒரு ஆரோக்கியமான எடையை கொண்டிருக்கும் பெண்களை விட, குழந்தை பிறந்த பிறகு மருத்துவமனையில் அதிக நாட்கள் தங்க நேரிடும்.

ஒரு குழந்தை கர்ப்பகாலத்தில் 20 வாரங்களுக்கு முன் கருப்பையில் இறந்து போனால் கருச்சிதைவு நடக்கிறது. ஒரு குழந்தை கர்ப்காலத்தில் 20 வாரங்களுக்கு பிறகு கருப்பையில் இறந்து போனால் குழந்தை இறந்து பிறத்தல் நடக்கின்றது.

உங்களுடைய குழந்தை அளவுக்கு அதிகமான எடையுடன் இருந்தால், அல்ட்ராசவுண்ட் போன்ற நவீன கருவியினால் கூட கர்ப்ப காலத்தில் பிறப்பு சம்பந்தமான குறைபாடுகள் கண்டறிய முடியாது. எனவே அதிக எடையானது, உங்களுடைய மருத்துவருக்கும் சிக்கலைத் தரும். மேலும், அதிக எடையின் காரணமாக குழந்தை பிறப்பின் பொழுது பல்வேறு சிக்கல்கள் ஏற்படலாம், அல்லது குழந்தை பிறப்பின் பொழுது குழந்தைக்கு காயம் கூட ஏற்படலாம்.

பெற்றோர் ரீதியான பாதுகாப்பு என்பது உங்களுக்கு கர்ப்ப காலத்தில் கிடைக்கும் சுகாதார பாதுகாப்பே ஆகும். உங்களுடைய மருத்துவர் உங்களுடைய கர்பகாலத்தில், தாய்மை ரீதியான மதிப்பீடுகளை, உங்களுக்கான நீரிழிவு சோதனை, மற்றும் கருப்பையில் உள்ள உங்களுடைய குழந்தையின் உருவத்தை அல்ட்ராசவுண்ட் போன்ற கருவியினால் காண்பது போன்றவற்றைக் கொண்டே மதிப்பிடுகின்றார்.

உங்களுடைய எடை அதிகமாக இருந்தால், நீங்கள் உங்களுடைய கர்ப்ப காலத்தில், உங்கள் உடல் எடையை 7 முதல் 9 கிலோ வரை குறைக்க வேண்டும். உங்களுக்கு இந்த கட்டுரை பயனுள்ளதாக இருந்தால் இதற்கு கீழே உங்களுடைய கருத்துக்களை பதிவிடுங்கள்.
25 1458880137 6

Related posts

பெற்றோரின் இரத்த வகை குழந்தை பிறப்பில் ஏற்படுத்தும் பாதிப்புகள்

nathan

கோடை காலங்களில் பிரசவம் ஆன தாய்மார்கள் கவனிக்க வேண்டியது :

sangika

குழந்தைப்பேறுக்கு இயற்கை மருத்துவ குறிப்புகள்

nathan

பெண்குலத்துக்கென்றே இயற்கை அளித்திருக்கும் இணையற்றவரம் தாய்மை!

nathan

கர்ப்பிணி பெண்கள் தூக்கமின்றி அவதிப்படுவதற்கான காரணங்கள் என்ன?

nathan

கர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவது சிசுவுக்கு நல்லது

nathan

கர்ப்பிணிகள் எதிரில் பேச கூடாத வார்த்தைகள்

nathan

பிறந்த குழந்தைகளுக்கு வரப்பிரசாதம் தாய்ப்பால்

nathan

தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் கட்டாயம் இத படிங்க!…

sangika