29.3 C
Chennai
Monday, Dec 30, 2024
24 1429851465 8 pregnant2
கர்ப்பிணி பெண்களுக்கு

கர்ப்பம் பற்றி யாரும் கூறாத விந்தையான சில தகவல்கள்!!!

நீங்கள் இதுவரை கர்ப்பமாகாத பெண்ணா? அல்லது தாயாக போகும் பெண் கடந்து செல்லும் பாதையைப் பற்றி விரிவாக புரிந்து கொள்ள விரும்பும் ஆணா நீங்கள்? அப்படியானால் கர்ப்பிணி பெண்களுக்கு நடக்கும் விந்தையான 10 விஷயங்களைப் பற்றி பார்க்கலாமா?

கர்ப்ப காலத்தில் நடக்கும் விந்தையான விஷயங்களைப் பற்றி பொதுவாக யாரும் வெளியே கூற மாட்டார்கள். அவைகள் என்னென்ன என்பதைப் பற்றிப் பார்க்கலாமா?

ஒரு வருடத்திற்கு மேலாக நீங்கள் கர்ப்பமாக இருத்தல்

பெரும்பாலான கர்ப்பங்கள் 9 மாதங்கள் வரை தான் நீடிக்கும். ஒரு வேளை இந்த காலம் கடக்கையில் பிரசவ வலியை தூண்டி விடுவார் மருத்துவர். ஆனால் முழு வருடம் கூட கர்ப்பம் நீடித்திருக்கிறது. உலகத்தின் நீளமான கர்ப்பம் 375 நாட்கள் நீடித்துள்ளது. ஆனால் அந்த பிரசவத்தில் பிறந்த குழந்தை 3 கிலோ அளவில் தான் இருந்துள்ளது. இப்படி காலம் தாழ்த்தி பிரசவம் நடப்பது புதிதாக உள்ளதா?

ஆண் சிசுவிற்கு கருவில் விறைப்பு ஏற்படலாம்

பெரும்பாலான தாய்களுக்கு தங்களின் மகன்களுக்கு ஆணுறுப்பில் ஏற்படும் விறைப்பை எண்ணுவதற்கு கூட பிடிப்பதில்லை, அதுவும் அவர்கள் விடலை பருவத்தை அடைந்த போதிலும் கூட. ஆனால் ஒரு உண்மை தெரியுமா உங்களுக்கு? ஆண் குழந்தை கருவில் இருக்கும் போதே அதற்கு ஆணுறுப்பில் விறைப்பு ஏற்படும். சொல்லப்போனால் ஆண் மற்றும் பெண் என இரு பாலினத்தை சேர்ந்த சிசுக்களும் கருவில் சுய இன்பம் காண்பார்கலாம். ஆனால் இப்படிப்பட்ட சூழலில் ஸ்கேன் மூலமாக அகப்பட்டு கொள்வது ஆண் சிசுக்களே. கர்ப்ப காலத்தில் உடலுறவில் ஈடுபடும் போது இதற்கு முன் என்ன நினைத்தீர்கள் என தெரியவில்லை; ஆனால் இனி நம் குழந்தை என்ன செய்து கொண்டிருக்கும் என கண்டிப்பாக ஒரு எண்ணம் உங்களுக்கு தோன்றும்.

பிரசவத்திற்கு பின் போட வேண்டிய தையல்கள்

பத்தில் ஒன்பது பெண்களுக்கு பிரசவத்திற்கு பின்பு பெண்ணுறுப்பில் கிழிசல் ஏற்படும். ஆனால் இந்த கிழிசல் எந்த அளவிற்கு ஏற்படும் என்பதை சொல்ல முடியாது. சில கிழிசல்களுக்கு சிறிய பராமரிப்பு அல்லது லேசான தையலே போதுமானது. ஆனால் சில கிழிசல்கள் ஆசன வாய் வரை நீளமாக கூட இருக்கலாம். சில கிழிசல்கள் அதையும் தாண்டி தசைகள் வரை பாதிப்பை ஏற்படுத்தும். ஆசனவாய் வரை ஏற்படும் கிழிசல் அரிதான ஒன்றே. நூற்றில் ஒருவருக்கு மட்டுமே இந்த நிலை ஏற்படும். பிரசவத்திற்கு முன்பு அந்த இடத்தை மசாஜ் செய்து வந்தால் கிழிசலை குறைக்கலாம். ஆனாலும் கூட இந்த கிழிசல் முழுமையாக நின்று விடாது.

வாசம் பிடிக்கும் திறன் அதிகரிக்கும்

கர்ப்ப காலத்தின் போது, வாசம் பிடிக்கும் திறன் அதிகரிக்கும். அதே போல் தான் சுவை திறனும் அதிகரிக்கும். பெரியவர்களுக்கு ஆபத்தை தரவில்லை என்றாலும் கூட சிசுவிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் சிறிய அளவிலான நஞ்சை தாய் உண்ணுவதை தவிர்க்கவே இந்த திறன் அதிகரிக்கிறது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். குறிப்பாக புகைப்பிடித்தல், மதுபானம் பருகுதல் மற்றும் காப்பி பருகுதல் போன்றவைகளை கர்ப்பிணி பெண்களிடையே நாம் காண நேரிடலாம். அதனால் இது உண்மையாகவே கருதப்படுகிறது.

பிரசவத்திற்கு பின்பு சுருக்கங்கள் நிற்காது

பிரசவத்திற்கு பின்னான முதல் சில நாட்களுக்கு தாய்மார்களுக்கு சுருக்கங்கள் ஏற்படும். அவர்களின் உடலில் ஏற்படும் அளவுக்கு அதிகமான இரத்த கசிவை நிறுத்த, அவர்களின் உடல் தசைகள் அப்படி இறுக்குகிறது. உங்கள் பிரசவம் மருத்துவமனையில் நடந்திருந்தால், உங்களுக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டிருக்கும். அதனால் உங்களால் இதை கவனிக்க முடியாமல் கூட போயிருக்கலாம்.

இரண்டு உயிர்களுக்கு என சேர்த்து வைத்து நீங்கள் உண்ணத் தேவையில்லை ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க கர்ப்பிணி பெண்கள் தங்களால் முடிந்த வரை அதிகமாக சாப்பிட்டு உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என பரவலாக கூறப்படுகிறது. ஆனால் இந்த கட்டுக்கதையையும் மீறிய உண்மை என்னவென்று தெரியுமா? கர்ப்பிணி பெண்களுக்கு ஒரு நாளைக்கு 300 கலோரிகள் அதிகமாக இருந்தாலே போதுமானது. இது கிட்டத்தட்ட 1 கப் தயிர் மற்றும் அரை பன்னுக்கு சமமாகும். தங்களின் கர்ப்ப காலம் முழுவதும் மொத்தமாகவே கிட்டத்த 11.25 கிலோ எடை கூடினாலே போதுமானது. ஆனால் ஒரு விருந்திற்கு செல்கிறீர்கள் என்றால் அங்கே காணப்படும் இனிப்பு பதார்த்தங்களை சுவைக்காமல் இருக்க முடியாது தான். பரவாயில்லை, கொஞ்சம் சாப்பிட்டுக் கொள்ளுங்கள்.

ஒரு முழு ஷூவின் அளவிற்கு உங்கள் பாதம் வளரலாம்

நீங்கள் 11.25 கிலோ வரை உடல் எடை அதிகரிக்கும் போது உங்கள் பாதம் ஏன் பெரிதாகிறது என நீங்கள் வியந்துள்ளீர்களா? அதற்கு காரணம் உங்கள் பாதத்தில் ஏற்பட்டுள்ள அதிகப்படியான அழுத்தம் உடலில் உள்ள அமைதியான தசைநார்களுடன் கைக்கோர்க்கும். பிரசவ காலம் நெருங்க நெருங்க உங்கள் உடலில் உள்ள தசைநார்களின் இறுக்கம் வலுவிழக்கும். இது பிரசவத்திற்கு உதவியாக இருக்கும். துரதிஷ்டவசமாக உங்கள் பாதங்களும் இரண்டு பக்கங்களிலும் நீட்சி அடையும். இப்படி பாதம் விரிவடைவது தற்காலிகம் தான் என்றாலும் கூட அது அதிகமாக விரிவடையும் போது, இந்த மாற்றம் நிரந்தரமாகி விடும். இப்படி பாதம் பெரிதாகும் போது புது ஷூக்கள் மற்றும் செருப்புகள் வாங்குவதை தவிர வேறு வழி இருக்கிறதா என்ன?

கர்ப்பத்திற்கான அறிகுறிகளை தந்தை காண்பிக்கலாம்

தந்தையாக போகிறவரின் உடல் எடை அதிகரிக்கலாம், குமட்டல் ஏற்படலாம், ஏன் அடி வயிற்றில் pidippu கூட ஏற்படலாம். இதனை சிம்பதெட்டிக் கர்ப்பம் அல்லது கௌவேட் சிண்ட்ரோம் என அழைக்கின்றனர். இது "கௌவீ" என்ற பிரெஞ்ச் வார்த்தையில் இருந்து எடுக்கப்பட்டவை. அதற்கு "குஞ்சு பொரிக்கின்றன" என அர்த்தமாகும்.

24 1429851465 8 pregnant2

Related posts

குழந்தையின் முதல் வளர்ச்சி தாயின் வயிற்றில்

nathan

தாயின் கருவில் இருந்து இதயம் எப்படி உருவாகிறது?

nathan

கர்ப்ப காலத்தில் முட்டை, ஈரலை தவிர்ப்பது நல்லது

nathan

கர்ப்ப காலத்தில் களைப்பு ஏற்படுவதன் காரணம் இதுதானாம்…!

nathan

உங்களுக்கு குழந்தை அறிவா பிறக்கனும்னா கர்ப்பமா இருக்கும் போது இதை முயன்று பாருங்கள்!

nathan

கர்ப்பிணிகளின் வயிற்றில் வளரும் கருவை பாதிக்கும் ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள்

nathan

வயிற்றில் வளரும் குழந்தை ஆரோக்கியமான எடையுடன் இருக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்!

nathan

தாய்ப்பால் கொடுப்பது குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள்!!!

nathan

கர்ப்பிணி பெண்கள் கவனத்திற்கு…

nathan