24.5 C
Chennai
Tuesday, Dec 17, 2024
sl4545
சைவம்

கப்பக்கறி

கேரளா மக்கள் செய்யும் சுவையான மீன் கறியை நாம் மரவள்ளிக்கிழங்கில் செய்யலாம்.

என்னென்ன தேவை?

மரவள்ளிக்கிழங்கு – 1/4 கிலோ,
தாளிக்க தேங்காய் எண்ணெய் – 4 டீஸ்பூன்,
கடுகு – 1/2 டீஸ்பூன்,
சோம்பு – 1/4 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – 2 ஆர்க்,
பூண்டு – 3 பல்,
பொடியாக நறுக்கிய இஞ்சி – 2 டீஸ்பூன்,
பெரிய வெங்காயம் – 1,
தக்காளி – 1,
பச்சைமிளகாய் – 2,
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்,
மிளகுத்தூள்- 1/2 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
தேங்காய்த் துருவல் – 1/2 கப்,
கொத்தமல்லித்தழை – சிறிது,
கொடம்புளி – 4.

எப்படிச் செய்வது?

கொடம்புளியை கழுவி தண்ணீரில் ஊற வைக்கவும். மரவள்ளிக்கிழங்கை தோல் சீவி பெரிய துண்டுகளாக கட் செய்து சிறிது உப்பு, மிளகாய் தூள், மிளகுத் தூள் சேர்த்து வேக வைக்கவும். ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு, சோம்பு தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். பின் மசாலா வகைகள், கொடம்புளி சேர்த்து வதக்கி, மசாலா வாசனை போனதும், வேகவைத்த கிழங்கை சேர்த்து நன்கு சுருள கிளறவும். சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். தேங்காய்த் துருவலை அரைத்து தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.

குறிப்பு: இதில் தேங்காய் எண்ணெயில் தாளிப்பதும் கொடம்புளி சேர்ப்பதும் மிக முக்கியம்.sl4545

Related posts

காய்கறி கதம்ப சாதம்

nathan

தேங்காய்ப்பால் குழம்பு,சமையல்,TamilCook, Indian Cooking Recipes in Tamil and English

nathan

வெந்தயக் குழம்பு/ vendhaya kuzhambu

nathan

வெந்தய சாதம்

nathan

சூப்பரான பாலக் வெஜிடபிள் கிரேவி

nathan

மீல் மேக்கர் குருமா செய்வது எப்படி என்பதை பார்ப்போம்…

nathan

முருங்கை பூ பொரியல்

nathan

சுண்டைக்காய் வறுவல்

nathan

முருங்கைப்பூ கூட்டு

nathan