பொதுவாக சிகரெட் பிடிப்பவர்கள், அதிக அளவில் மது குடிப்பவர்களுக்கு இருதய நோய்கள் உருவாகி அதன் மூலம் மாரடைப்பு ஏற்படுகிறது. ஆனால் கடுமையான கோபம் அடைபவர்களும் மாரடைப்பு நோய்க்கு ஆளாவது புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவின் ஹார்வார்டு பள்ளியின் பொது சுகாதார நிபுணர்கள் சமீபத் தில் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர். சுமார் 10 ஆயிரம் பேரிடம் இது நடத்தப்பட்டது.
அவர்களில் மாதத்தில் ஒருமுறை கடுமையாக கோபம் அடைபவர்களுக்கு சிறிய அளவில் மாரடைப்பு ஏற்படும் அபாயம் இருப்பது தெரிய வந்தது. அதே நேரத்தில் மாதத்துக்கு 4 தடவைக்கு மேல் கோபப்படுபவர்களுக்கு கடுமையான மாரடைப்பு ஏற்படும் என கண்டறியப்பட்டது.
கோபப்படும் 2 மணி நேரத்தில் மாரடைப்பு உருவாகுவதற்கான சூழ்நிலை உருவாகும். அதன் மூலம் இருதயத்தில் 5 தடவை சுருக்கம் ஏற்படும் வலிப்பு போன்ற பாதிப்பு உண்டாகும். இதுவே நாளடைவில் மாரடைப்பாக மாறுகிறது.
எனவே கோபம் மற்றும் மனஅழுத்தத்தை தடுக்க யோகா மிகவும் அவசியம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
– See more at: http://www.tamilula.com/lifestyle/59/article/hot-tempered-465#sthash.I2UpdIST.dpuf