கசப்பான சுண்டைக்காயை தினமும் சாப்பிட்டால் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
நன்மைகள்
சுண்டைக்காய் உங்கள் பசியை தூண்டுவதில் சிறப்பாக செயலாற்றுகிறது. எனவே சுண்டைக்காயை வாரம் ஒரு முறையேனும் சமைத்து சாப்பிட வேண்டும்.
செரிமானமின்மை, வயிற்று மந்தம் , வயிற்றுக்கோளாறு போன்ற வயிற்றுத் தொந்தரவுகள் இருக்கின்றன எனில் அதற்கு சுண்டைக்காய் நல்ல மருத்துவ பலனாக இருக்கும்.
கால்சியம் சத்து சுண்டைக்காயில் அதிகமாக கிடைக்கிறது.
எலும்பு தேய்மானம், எலும்பின் உறுதித்தன்மையை இழக்காமல் இருக்க சுண்டைக்காயை சாப்பிடுங்கள்.
இது உங்களுக்கு எதிர்கலத்தில் எலும்பு தொடர்பான பிரச்சனைகளை தடுக்க உதவும்.
மலச்சிக்கல் பொதுவாக உடல் உஷ்ணம் காரணமாகவும் ஏற்படலாம். எனவே அதை சரி செய்ய உதவும் ரகசியம் சுண்டைக்காயில் இருக்கும்.
சுண்டைக்காய்க்கு சளியை போக்கும் தன்மை உள்ளது.
நெஞ்சு சளியை எடுக்கும் ஆற்றலும் சுண்டைக்காய்க்கு உண்டு. எனவே பிஞ்சு சுண்டைக்காய்களை குழம்பு அல்லது துவையல் வைத்து சாப்பிடுங்கள்