கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம், இந்த கொய்யா பழத்தில் தேவையான அளவிற்கு மெக்னீசியம், இரும்பு சத்து மற்றும் கால்சியம் இருப்பதால் கர்ப்பிணிகள் கொய்யா பழம் சாப்பிட்டு வரலாம்.
கொய்யா பழத்தில் வைட்டமின் சி அதிகளவில் இருக்கிறது. அதனால், கர்ப்பிணிகளின் எதிர்ப்பு சக்தியை தருகிறது.
கொய்யா பழம் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க, இதனால் கருச்சிதைவு குறை பிரசவம் முதலியவை தவிர்க்கப்படுகிறது. கர்ப்பிணிகளுக்கு கர்ப்ப நீரிழிவு என்பது வழக்கமாக உண்டாகக்கூடியது தான். குறிப்பாக உங்களுடைய 24 ஆம் வாரத்தில் வரக்கூடியது. இதை தவிர்க்க கொய்யா பழம் சாப்பிடலாம்.
கர்ப்பிணிகளுக்கு ஹார்மோன் குறைவாக சுரக்க, இதனால் மலச்சிக்கல் மற்றும் மூல நோய் ஏற்படலாம். இதற்கு கொய்யா பழத்தில் பெரிதளவில் நார்சத்து இருப்பதால் பெரிதும் உதவும்