பால் குடித்துக்கொண்டிருக்கும் குழந்தைக்கு உணவை அறிமுகப்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும். குழந்தைக்கு வயிறு ஒத்துக்கொள்ளாது. அலர்ஜி போன்ற தொல்லைகள் வரலாம்.
காய்கறிகளில் காரட், காலிப்ளவர், உருளை , சர்க்கரை வள்ளி கிழங்கு ஆகியவற்றை வேக வைத்து நன்றாக மசித்து சிறிது சிறிதாக கொடுக்கலாம் . இதை சூப் மாதிரி திரவ வடிவில் கொடுப்பது நல்லது.
ஐந்து மாத குழந்தைக்கு தினமும் இருவேளை உணவு தரலாம். காலையில் குழைந்த சாதம், மாலையில் காய்கறிகள் அல்லது பழம் ஆகியவற்றை தரலாம் . திராட்சையை உரித்து தரலாம், மாம்பழம் தரலாம். முட்டை அல்லது தானியங்கள் தர கூடாது.
ஆறு மாத குழந்தைக்கு இறைச்சியை வேகவைத்து நன்றாக மசித்து தரலாம். உப்பு, பூண்டு, வாசனை பொருட்கள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் . இந்த குழந்தைகளுக்கு உணவு கொஞ்சம் திடமாக இருக்கலாம். குழந்தை தவழ ஆரம்பிக்கும்போது விருப்பம் போல உணவூட்டலாம்.