உலகில் மொத்தம் 3000 வாழை வகைகள் இருக்கின்றன. ஒவ்வொரு வாழைப்பழமும் ஒவ்வொரு நோயை குணமாக்கும் தன்மை கொண்டவை. அவற்றை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
பூவன் பழம்
அளவில் சிறியவை. ஒரு வாழைத்தாரில் 100 முதல் 150 பழங்கள் உண்டு. மூலநோய்களுக்கு உகந்தது.
ரஸ்தாளி –
மருத்துவ குணங்கள் குறைவெனினும், ருசியில் உயர்ந்தது. பழங்களைக் கொண்டு தயாரிக்கும் இனிப்புகள், சாலட்களில் சேர்த்துக்கொள்ளப்படுகிறது. உடல் வறட்சியைப் போக்கும்; காமாலையைத் தடுக்கும்.
மலை வாழைப்பழம் (பச்சைப் பழம்)
குழந்தைகளுக்கு மிகப்படித்தமான பழம். இரத்த விருத்தி செய்யும்.
நேந்திரம்பழம்
பச்சையாகவோ, அவித்தோ, சிப்ஸ் வடிவிலோ உண்ணப்படுகிறது. குடற்புழுக்கள் நீக்குகிறது. புரதம் அதிகம் உண்டு.
கற்பூரவள்ளி பழம்
வாழை ரகங்களிலிலேயே மிக இனிப்பானது. நீண்ட நாட்களுக்கு வைத்து உண்பது கடினம்; கனிந்து முற்றிவிடும்.
Red Banana
செவ்வாழை
நோய் எதிர்ப்பு சக்தி; உடலில் தாது பலமும் அதிகரிக்கும். கதளி மற்றும் எலச்சி கதளி ஆன்டி ஆக்சிடென்ட் தன்மை உள்ளதால் செல்களின் செயல்பாட்டை சீர்செய்கிறது.
எலைச்சி
சிறியவையாயினும் மிகச் சுவையானவை; மலச்சிக்கலுக்கு சிறந்தது.
பேயன் பழம்
வயிறு மற்றும் குடல் புண்கள் ஆறும். உடல்சூடு தணியும்.
Related posts
Click to comment