நன்கு வளர்ந்த மனிதனின் வாயில் மொத்தம் 32 பற்கள் உள்ளன. ஆனால் பல காரணங்களால் பற்களின் எண்ணிக்கை குறையக்கூடும். பண்டைய சாமுத்ரிகா சாஸ்திரத்தின் படி, ஒருவரின் செல்வ வளத்தை உடல் பண்புகளின் அடிப்படையில் கணிக்க முடியும். அந்த வகையில் ஒருவருக்கு இருக்கும் பற்களின் எண்ணிக்கையை வைத்தும், அவர் அதிர்ஷ்டசாலியா என்பதை அறியலாம்.
பலருக்கு 32 பற்கள் இருப்பதில்லை
ஏதோ ஒரு காரணத்தினாலோ அல்லது வேறு காரணத்தினாலோ, உலகில் உள்ள பலர் 32 பற்கள் இல்லாமல் இருக்கின்றனர். இப்படி முழு பற்களும் இல்லாத மக்களின் மனதில் பல்வேறு கேள்விகள் எழத் தொடங்குகின்றன. இப்போது நாம் பற்கள் தொடர்பான சில கேள்விகளுக்கான பதில்களைத் தான் காணப் போகிறோம்.
32 பற்கள் எதைக் குறிக்கிறது?
சாமுத்ரிகா சாஸ்திரத்தின் படி, 32 பற்களைக் கொண்டவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். இத்தகையவர்கள் உண்மையை நம்புபவர்கள் மற்றும் பொய்யில் இருந்து விலகி இருப்பார்கள். இதுமட்டுமல்லாமல், 32 பற்களைக் கொண்டவர்களின் வாயில் இருந்து வெளிவரும் விஷயங்கள், அது நல்லதோ அல்லது கெட்டதோ, அப்படியே நடக்கும் என்று கூறப்படுகிறது.
31 பற்கள்
32 பற்களைக் கொண்டவர்கள் அதிர்ஷ்டசாலிகளாக இருக்கலாம். ஆனால் 31 பற்களைக் கொண்டவர்கள், ஆடம்பரத்தைப் பொறுத்தவரை மிகவும் புத்திசாலிகள்.
30 பற்கள்
30 பற்களைக் கொண்டவர்களின் நிதி நிலைமை எப்போதும் நன்றாகவே இருக்கும். இவர்களிடம் பணப்புழக்கம் நன்றாக இருக்கும். மொத்தத்தில் இத்தகையவர்களுக்கு பண விஷயத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது.
29 மற்றும் 28 பற்கள்
29 பற்களை மட்டுமே கொண்டவர்கள் எப்போதும் தங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியற்றவர்களாக இருப்பார்கள். அதேப்போல் 28 பற்களைக் கொண்டவர்களுக்கு அதிர்ஷ்டம் சாதகமாக இருக்காது. அதாவது 28 பற்களைக் கொண்டிருப்பவர்களை அதிர்ஷ்டமற்றவர்கள் என்று கூறலாம்.
பற்களின் அளவு என்ன சொல்கிறது?
ஒருவரது அதிர்ஷ்ட விஷயத்தில் பற்களின் எண்ணிக்கை எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அறிந்தோம். இப்போது பற்களின் வடிவத்தைப் பற்றி அறிவோம். கழுதைகள், கரடிகள், குரங்குகள் அல்லது எலிகளைப் போன்ற பற்களைக் கொண்டவர்கள், மிகவும் செல்வந்தர்களாக இருப்பர் என்று கூறப்படுகிறது. இருப்பினும், இவர்களின் கெட்ட பழக்கங்கள் மற்றும் நடத்தை காரணமாக, செல்வந்தர்களாக இருந்தாலும், ஏழைகளைப் போன்ற வாழ்க்கையை வாழ்வார்கள்.