அசைவ வகைகள்

உருளைக்கிழங்கு மீன் குழம்பு,

 

tamil samayal asaivam

மீன் குழம்பு அனைவருக்கும் பிடிக்கும் அதில்  உருளைக்கிழங்கு சேர்த்து பாருங்கள் அதன் ருசி பலமடங்காகும், உருளைக்கிழங்கு மீன் குழம்பு செய்து தான் பாருங்கள்  அதன் சுவைக்கு நீங்கள் அடிமை ஆவது உறுதி உங்கள் வீட்டில் பாராட்டு கிடைப்பதும் நிச்சயம்.

தேவையான பொருட்கள்

 

  •  மீன் – 1 கிலோ (உங்களுக்கு பிடித்த மீன்)
  • உருளைக்கிழங்கு – 1/2  கிலோ
  • சின்ன வெங்காயம்     –  200  கிராம்
  • பூண்டு   –  10 பல்
  • தக்காளி    –  4
  • பச்சைமிளகாய் – 8
  • மஞ்சள்தூள்  –   1/2   ஸ்பூன்
  • மிளகாய்த்தூள்  –  3 ஸ்பூன்
  • மல்லித்தூள்    –  4 ஸ்பூன்
  • புளி    –  எலுமிச்சைபழம் அளவு
  • வெந்தயம்  – 1/2 ஸ்பூன்
  • சீரகம்   – 1/2  ஸ்பூன்
  • சோம்பு  – 1/2  ஸ்பூன்
  • எண்ணெய் –  தேவைக்கு
  • உப்பு    – தேவைக்கு
  • கறிவேப்பிலை,கொத்தமல்லி – சிறிது

செய்முறை

  •  மீனை சுத்தம் செய்து அதில் மஞ்சள்தூள் தடவி வைக்கவும். உருளைக்கிழங்கை தோலுரித்து நறுக்கிக் கொள்ளவும்.

  •  ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெந்தயம், சீரகம், சோம்பு போட்டு தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு மூன்றையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
  •  வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கி உருளைக்கிழங்கையும் போட்டு வதக்கி அத்துடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
  •  பிறகு புளிக் கரைசலை ( குழம்புக்கு தேவையான தண்ணிரை புளித்தண்ணியுடன் சேர்த்து ஊற்றவும் ) ஊற்றி தேவையான உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
  •  உருளைக்கிழங்கு வெந்து குழம்பு பக்குவத்திற்கு வந்தவுடன் மீனை போட்டு  ஒரு கொதி வந்தவுடன் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

Related posts

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் வான்கோழி பிரியாணி

nathan

தம் பிரியாணி சமைப்பது எப்படி ?

nathan

மசாலா முட்டை ரோஸ்ட்

nathan

சிக்கன் லெக் பீஸ் வறுவல் | Leg Piece Chicken Fry

nathan

சுவையான இறால் பிரியாணி

nathan

நண்டு மசாலா

nathan

கிராமத்து மொச்சை கருவாட்டு குழம்பு

nathan

பாதாம் சிக்கன்

nathan

ஆட்டிறச்சிக் குழம்பு

nathan