உணவில் அதிகளவு தேங்காய் சேர்ப்பது உடலுக்கு நல்லதா? கெட்டதா? என்ற எண்ணம் பலருக்கு உள்ளது. அதற்கான விளக்கத்தை கீழே விரிவாக பார்க்கலாம்.
உணவில் அதிகளவு தேங்காய் சேர்ப்பது உடலுக்கு நல்லதா? கெட்டதா?
பெண்களுக்கு சமையலில் பயன்படுத்த அரைத்த தேங்காய் அல்லது தேங்காய் பால் பயன்படுகிறது. மேலும் தலைக்கு தேய்க்க எண்ணெய் வடிவமாகவும் பயன்படுகிறது. இத்தனை விடயத்தில் இதனுடைய சேர்க்கை இருப்பதற்கு காரணம் இதன் மருத்துவ குணங்களே ஆகும்.
தேங்காய் எண்ணெயை போலவே, தேங்காயில் இருந்து எடுக்கப்படும் பாலிலும் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இப்போது அவைகளில் சிலவற்றை பார்க்கலாம்.
* உடலில் மாங்கனீசு குறைபாடு ஏற்பட்டால், நீரிழிவு நோய் வரும். ஆனால் தேங்காய் பாலில் வளமான அளவில் மாங்கனீசு நிறைந்துள்ளது. முழு தானியங்கள், அவரை மற்றும் பட்டாணிகள், நட்ஸ் போன்றவற்றிலும் அதிக அளவு மாங்கனீசு அடங்கியுள்ளது.
* தேங்காய் பாலில் போதுமான அளவு கால்சியம் இல்லாத போதிலும், பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. குறிப்பாக உடலில் உள்ள எலும்புகளை உறுதியாக்குவதற்கு பாஸ்பரஸ் முக்கிய ஊட்டச்சத்தாக விளங்குகிறது. அதிலும் பாஸ்பரஸை கால்சியத்துடன் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி செய்யும் போது, உடலில் பாஸ்பேட் கலப்பதால், எலும்பு உருக்குதலை அது தடுக்கும்.
* போதுமான இரும்புச்சத்து உடம்பில் இல்லாததால், உலகத்தில் உள்ள பலருக்கும் இரும்புச்சத்து குறைபாடு இருக்கிறது. இரும்புச் சத்து குறைபாடு இருப்பதால், உடலானது ஹீமோகுளோபின் அதிகரிப்பதை தடுத்து நிறுத்தும். இதனால் இரத்த அணுக்களில் போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்காமல் இரத்த சோகையை உண்டாக்கும்.
* ஒரு கப் தேங்காய் பாலில், உடம்புக்கு அன்றாடம் தேவைப்படும் இரும்புச்சத்தில் 25 சதவீதம் கிடைத்து விடுகிறது.
* எப்போதெல்லாம் தசை பிடிப்பு மற்றும் தசை வலி ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் கொஞ்சம் உணவோடு சேர்த்து தேங்காய் பாலை பருகினால் நல்ல பலன் கிடைக்கும். ஏனெனில் இதில் அதிக அளவு மக்னீசியம் இருப்பதால், தசை வலிகளுக்கு சிறந்த நிவாரணியாக விளங்குகிறது.
* மேலும் ஒவ்வொரு நரம்பு அணுக்களுக்கும் வலித் தடுப்பானாக விளங்குவது மக்னீசியத்தின் முக்கியமான அம்சமாகும். உடலில் மக்னீசியம் இல்லையென்றால், கால்சியம் நரம்புகளை ஊக்குவிக்கும். அதனால் நரம்பு அணுக்கள் சுறுசுறுப்பாக செயல்படும். அளவுக்கு அதிகமாக நரம்பு அணுக்கள் சுறுசுறுப்பாக இருப்பதால் தசைகள் அளவுக்கு அதிகமாக சுருங்குவதற்கு காரணமாக விளங்குகிறது.
* உடல் எடையை குறைக்க முற்படுபவர்களுக்கு, கண்டிப்பாக இது ஒரு நல்ல செய்தியாக இருக்கும். தேங்காய் பால் வெகு விரைவிலேயே பசியை அடங்கச் செய்யும். அதற்கு காரணம் தேங்காய் பாலில் அடங்கியுள்ள அதிகப்படியான நார்ச்சத்து தான்.
* செலினியம் என்பது ஒரு முக்கியமான ஆக்சிஜனேற்றத் தடுப்பான். இத்தகைய செலினியம் தேங்காய் பாலில் அதிகம் உள்ளது. ஆகவே கீல்வாதம் இருப்பவர்கள் இதனை சாப்பிட்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும். குறைந்த அளவு செலினியம் இருப்பவர்களுக்கு முடக்கு வாதம் ஏற்பட அதிகமான வாய்ப்புள்ளது.
* இரத்தக் கொதிப்பை எண்ணி கவலைப்படுபவர்கள் பொட்டாசியம் கலந்த உணவை உண்டால் இந்த பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம். ஏனெனில் பொட்டாசியம் உடம்பில் உள்ள இரத்தக் கொதிப்பின் அளவை குறைக்க உதவும். இத்தகைய பொட்டாசியம் தேங்காய் பாலில் அதிகம் உள்ளது.
* தேங்காய் பால், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு ஆற்றலை உறுதியாக வைத்திருப்பதால், அடிக்கடி ஏற்படும் சளி மற்றும் இருமலை விரட்டியடிக்க உதவி புரியும். மேலும் இதில் வைட்டமின் சி நிறைந்திருப்பதால், உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை வளப்படுத்தும்.
* உடம்பில் உள்ள புரோஸ்டேட் சுரப்பியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஜிங்க் முக்கிய பங்கு வகிக்கிறது. இது புற்றுநோய் அணுக்களின் செயல்பாடுகளை குறைக்கும் என்று ஒரு தொடக்க நிலை ஆய்வு ஒன்று கூறுகிறது.