26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
download 1
மருத்துவ குறிப்பு

உடல் வலியை போக்கும் இந்த பூவை பற்றி உங்களுக்கு தெரியுமா ? அப்ப உடனே இத படிங்க…

முறையற்ற மாதவிலக்கை சீர்செய்ய கூடியதும், காய்ச்சல் மற்றும் உடல் வலியை போக்கவல்லதும், வயிறு உப்புசத்தை சரிசெய்ய கூடியதுமான அன்னாசி பூவின் நன்மை குறித்து பார்க்கலாம்.

அன்னாசி பூ மணம் தரக்கூடியது. உணவாவது மட்டுமின்றி உன்னதமான மருந்தாக விளங்குகிறது. மாதவிலக்கு பிரச்னையை சரிசெய்கிறது. மாதவிலக்கை தூண்டி முறைப்படுத்துகிறது. தாய்ப்பாலை பெருக்க கூடிய அற்புத சக்தி உடையது. அதிக சத்துக்கள் உள்ள இது, புற்றுநோய்களை உண்டாக்கும் நச்சுகளை வெளியேற்றும். செரிமானத்தை தூண்டும். சளி, இருமல் காய்ச்சலை போக்கும் நல் மருந்தாகிறது.

அன்னாசி பூவை பயன்படுத்தி மாதவிலக்கு பிரச்னையை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: அன்னாசி பூ, பெருங்காயம், பனைவெல்லம்.செய்முறை: ஒரு பாத்திரத்தில் நீர் விடவும். இதனுடன், ஒரு ஸ்பூன் பனை வெல்லம் சேர்க்கவும். இளம் வறுப்பாக வறுத்து பொடி செய்த அன்னாசி பூ பொடி அரை ஸ்பூன் அளவுக்கு போடவும். கால் ஸ்பூன் பெருங்காயப் பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டவும். இதை தினமும் காலை வேளையில் எடுத்துவர தடைபட்ட மாதவிலக்கு பிரச்னை சரியாகும். மாதவிலக்கை சீர் செய்கிறது. இளம் தாய்மார்களுக்கு பால் பெருக்கியாக விளங்கிறது.

சீனா, நேபாளத்தில் வளரக்கூடிய சிறிய மரத்தில் இருந்து கிடைக்க கூடியது அன்னாசி பூ. இதை பயன்படுத்தி வைரஸ் தொற்றால் ஏற்படும் காய்ச்சல், சளி, உடல் வலியை குணப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: அன்னாசி பூ, இஞ்சி, சீரகம், பனங்கற்கண்டு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் நீர்விடவும். கால் ஸ்பூன் அன்னாசி பூ பொடி சேர்க்கவும். அரை ஸ்பூன் நசுக்கிய இஞ்சி, கால் ஸ்பூன் சீரகம், சிறிது பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்கவும். வடிகட்டி வைரஸ் காய்ச்சல் இருக்கும்போது காலை, மாலை வேளைகளில் குடித்துவர காய்ச்சல், சளி, உடல் வலி குணமாகும். பருவநிலை மாற்றத்தால் உண்டாகும் தொற்றுக்களை நீக்கும். வயிற்று புண்களை ஆற்றும். தொற்றுநோய் வாராத வண்ணம் தடுக்கிறது.

காய்ச்சலை குணப்படுத்தும் தன்மை கொண்ட அன்னாசி பூ, நுண்கிருமிகளை நீக்கும் நல்மருந்தாகிறது. இதை பயன்படுத்தி வயிறு உப்புசம், மாந்தத்துக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: அன்னாசி பூ, சுக்குப்பொடி, சீரகம், பனைவெல்லம்.

செய்முறை: அன்னாசி பூ 2 சிட்டிகை, சுக்குப்பொடி 2 சிட்டிகை, கால் ஸ்பூன் சீகரம், கால் ஸ்பூன் பனைவெல்லம் சேர்த்து கலந்து உணவுக்கு பின் மதிய வேளையில் எடுத்துவர வயிறு உப்புசம், மாந்தம் சரியாகும். அன்னாசி பூவை பொடித்து, நெய் கலந்து இரவில் சாப்பிட ஆண்தன்மை குறைபாடு சரியாகிறது.உடல் சோர்வை போக்கும் எளிய மருத்துவம் குறித்து பார்க்கலாம். 10 நெல்லி வற்றலை நீரில் சிறிது நேரம் ஊற வைத்து அந்த நீரை காய்ச்சி, பனங்கற்கண்டு சேர்த்து குடித்தால் உடல் சோர்வு நீங்கும்.download 1

Related posts

சிறுநீரின் நிறம் உங்கள் ஆரோக்கியத்தை சொல்லும்

nathan

தெரிஞ்சிக்கங்க…முதல் மாதவிடாய் குறித்து பெண்கள் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள்!

nathan

மாணவ-மாணவிகளுக்கு நற்பண்புகளே சிறந்த கல்வி

nathan

மாரடைப்பை தவிர்ப்பதற்கு நார்ச்சத்து உணவு ..அமெரிக்க விஞ்ஞானிகள்

nathan

கீழ்படியாமல் நடக்கும் குழந்தைகளைக் கையாளுவது எப்படி?

nathan

மாதவிடாய் பிரச்சனைகள்… உடல் எடை அதிகரிப்பும், காரணங்களும்!தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

பெற்ற பின் பெல்ட் அணிவது சரியா ?

nathan

சூப்பர் டிப்ஸ்.. தீராத மூட்டுவலியை உடனடியாக குணப்படுத்தும் ஆயுர்வேத வைத்தியங்கள்!!

nathan

உடல் உஷ்ணத்தை தணிக்கும் கோவைக்காய்

nathan