04 1438668811 1
ஆரோக்கிய உணவு

உடல்நலத்திற்கு நல்லது என்ற பெயரில் சீனாவில் ஆல்கஹாலில் வயகாராவை கலந்து மதுவிற்பனை!!!

சீனர்கள் என்றாலே உணவை தாறுமாறாக சமைப்பவர்கள், உண்பவர்கள். நாய்களை துடிக்க, துடிக்க அரக்கத்தனமான முறையில் அரை உயிரோடு சமைத்து உண்பதற்கு என்றே ஓர் திருவிழா வைத்து கொண்டாடுபவர்கள் சீனர்கள்.

இதுமட்டுமின்றி உயிரோட விலங்குகளையும், கடல்வாழ் உயிரினங்கள் போன்றவற்றை சமைக்கும் போட்டி ஒன்று கூட சீனாவில் மிக பிரபலம். சரி அப்படியும் உடலுக்கு நன்மை விளைவிக்கும் உணவுகளை இவர்கள் உட்கொள்கின்றனரா என்றால் அதுவும் இல்லை.

கடந்த ஜூலை மாதம் தான் சீனாவில் பல ஆண்டுகள் பழமையான ஒரு லட்சம் டன் இறைச்சிகளை சீனாவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக துறையினர் மடக்கிபிடித்தனர். இந்த செயல் உலகில் பலதரப்பட்ட மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இப்போது சமீபத்தில், ஆல்கஹாலில் வயாகராவை கலந்து உடல்நலத்திற்கு நல்லது என இரண்டு மதுபான விற்பனையாளர்கள் விற்றுள்ள செயல் மீண்டும் உலக மக்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது…..

அல்கஹாலில் வயாகரா உடல் நலத்தை அதிகரிக்கும் குணாதிசயங்கள் உள்ள பானம் என்ற பெயரில் சீனாவின் இரண்டு மதுபான தயாரிப்பாளர்கள் மது விற்று வந்துள்ளனர். அப்படி என்ன உடல்நலத்திற்கு நன்மை தருமளவு அந்த பானத்தில் உள்ளது என ஆராய்ந்து பார்த்ததில், ஆல்கஹாலில் வயாகராவை கலந்து விற்றுவந்துள்ளனர் என கண்டறியப்பட்டது என பி.பி.சி.-யின் அறிக்கை தெரிவிக்கிறது.

சீன உணவு மற்றும் மருந்து நிர்வாக துறையினர் நடவடிக்கை இதுபோன்று சீனாவின் உணவு மற்றும் மருந்து சட்டத்திற்கு எதிராக மதுபான விற்பனை நடப்பதை அறிந்த சீனாவின் உணவு மற்றும் மருந்து துறையினர் விரைந்து சென்று அங்கு தயார் நிலையில் இருந்த 5,300 பாட்டில் ஆல்கஹாலை பறிமுதல் செய்தனர்.

சீனாவின் பிரபல மதுபான தயாரிப்பு நிறுவனம் சீனாவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக துறையினர் செய்த ஆய்வில், தடைசெய்யப்பட்ட மருந்தான Sildenafil மற்றும் Tadalafil கலப்புடன் மதுபானம் விற்றுவந்தது தெரியவந்தது. பைஜியூ (Baijiu) எனும் சீனாவின் பிரபல மதுபான தயாரிப்பு நிறுவனத்தின் மதுபானங்கள் அவை என தெரியவந்துள்ளது.

1,13,000 டாலர்கள் மதிப்பு சீனாவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக துறையினர் பறிமுதல் செய்த அந்த மதுபானங்களின் விலைமதிப்பு ஏறத்தாழ 1,13,000 டாலர்கள் என கூறப்படுகிறது. இது சீனாவின் பண மதிப்பில் ஏழு லட்சன் யான்கள் (Yuan) ஆகும்.

விஷத்தன்மை கொண்ட பொருள் விற்பனை குற்றப்பிரிவு ஆல்கஹாலில் வயாகர கலந்து மதுபானம் விற்ற இரண்டு மது தயாரிப்பாளர்களும் விஷத்தன்மை கொண்ட பொருள்களை விற்றதற்கான குற்றப்பிரிவில் சீன போலிசாரால் கைது செய்பட்டுள்ளனர்.

பால் கலப்படம் இதற்கு முன்பு கடந்த 2008 ஆம் ஆண்டு பால் பொருளில் கலப்படம் செய்ததால் ஆறு குழந்தைகள் உயரிழந்த சம்பவம் சீனாவில் உணவு மற்றும் மருந்து நிர்வாக துறையினர் கண்டுபிடித்து கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

04 1438668811 1

Related posts

இறைச்சில் உள்ள ஈரல், குடல் போன்ற உறுப்புகளை யாரெல்லாம் சாப்பிடக் கூடாது

nathan

சுவையாக இருக்கும் கீரை குழம்பு

nathan

சுவையான திருநெல்வேலி சொதி

nathan

சத்து மாவு கஞ்சி

nathan

இதோ எளிய நிவாரணம்…வெந்தயத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

nathan

தினமும் இந்த 7 வகையான டீயில ஏதாவது ஒன்ன குடிச்சிட்டு வந்தா மூளை சுறுசுறுப்பாகும்..!

nathan

அன்னாசி பழத்தை அதிகமாக சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

தக்காளி சாலட்

nathan

வெயில் காலத்துல நீங்க தர்பூசணி ஜூஸ் குடிக்கலாமா?தெரிந்துகொள்வோமா?

nathan