26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
weak hair 1
தலைமுடி சிகிச்சை

உங்க தலைமுடி பலவீனமா இருக்கா? உங்களுக்குதான் இந்த விஷயம்

ஒருவருக்கு சரும ஆரோக்கியத்தைப் போலவே தலைமுடியின் ஆரோக்கியமும் மிகவும் முக்கியமாகும். தலைமுடி ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் இருந்தால் தான் முடி உதிரும் பிரச்சனையை சந்திக்க வேண்டிய அவசியம் இருக்காது. ஆனால் தற்போதைய மோசமான உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை, கெமிக்கல் கலந்த தலைமுடி பராமரிப்பு பொருட்கள், மன அழுத்தம் ஆகியவற்றால் தலைமுடியானது பலவீனமாகி, தலையில் கையை வைத்தாலே கொத்தாக முடியை கையில் பெற நேரிடுகிறது.

மேலும் பலவீனமான முடி பல தலைமுடி பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும். நீங்கள் உங்களின் தலைமுடியை வலிமையாக்க நினைக்கிறீர்களா? அதுவும் இயற்கை முறையில் தலைமுடியை வலிமையாக்க வேண்டுமா? அப்படியானால் இக்கட்டுரை உங்களுக்கானது. ஏனெனில் கீழே பலவீனமான தலைமுடியை பலப்படுத்தும் சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றினால் நிச்சயம் முடியை விரைவில் வலுவாக்கலாம்.

தேங்காய் எண்ணெய் மசாஜ்

நாம் அனைவருமே தலைமுடிக்கு பயன்படுத்தும் ஓர் பொதுவான பொருள் தான் தேங்காய் எண்ணெய். இந்த தேங்காய் எண்ணெயில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. இவை தலைமுடிக்கு ஊட்டமளித்து, பலவீனமாக இருக்கும் முடியை பலப்படுத்தும். அதுவும் தேங்காய் எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்வது சேதமடைந்த மயிர்கால்களை சரிசெய்து, முடியை மென்மையாகவும், வலிமையாகவும் ஆக்கும்.

அதற்கு 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, அதை ஈரமான தலைமுடியில் தடவி சிறிது நேரம் மென்மையாக மசாஜ் செய்து, பின் ஷவர் கேப்பை தலையில் அணிந்து 30 நிமிடம் ஊற வைத்து, பின்பு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.

அத்தியாவசிய நறுமண எண்ணெய் மசாஜ்

அத்தியாவசிய நறுமண எண்ணெய்கள் மருத்துவ குணங்கள் நிறைந்தவை மற்றும் இவை மயிர்கால்களை வலிமையாக்கவும், சேதமடைந்த மயிர்கால்களை சரிசெய்யவும் உதவுகிறது. நீங்கள் உங்கள் முடியை அடர்த்தியாக்கும் இயற்கை வழியை தேடிக் கொண்டிருந்தால், நறுமண எண்ணெயால் தலைமுடிக்கு பராமரிப்பு கொடுங்கள். இதனால் முடியின் வளர்ச்சியும் தூண்டப்படும்.

அதற்கு 4 டீஸ்பூன் கிரேப்சீட் எண்ணெய், 2 துளிகள் தைம் அத்தியாவசிய நறுமண எண்ணெய், 2 துளிகள் சீடர்வுட் அத்தியாவசிய நறுமண எண்ணெய், 1/2 டீஸ்பூன் ஜொஜோபா எண்ணெய், 3 துளிகள் லாவெண்டர் அத்தியாவசிய நறுமண எண்ணெய் மற்றும் 3 துளிகள் ரோஸ்மேரி எண்ணெயை ஒன்றாக கலந்து, அந்த எண்ணெய் கலவையால் தலைக்கு மசாஜ் செய்து, சுடுநீரில் நனைத்து பிழிந்த துண்டால், தலைமுடியைச் சுற்றி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.

முட்டை

முட்டையில் புரோட்டீன் அதிகம் உள்ளது. இது முடிக்கு தேவையான மிகவும் முக்கியமான ஊட்டச்சத்தாகும். இச்சத்து போதுமான அளவு கிடைத்தால், தலைமுடி வலிமையாக இருக்கும். அதற்கு ஒன்று அல்லது இரண்டு முட்டைகளை எடுத்து, ஒரு பௌலில் உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின் அதை தலையில் தடவி 2 மணிநேரம் ஊற வைத்து, பின் தலைமுடியை மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், விரைவில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

ஹேர் டானிக்

ஒரு பாத்திரத்தில் 2 கப் நீரை ஊற்றி, அதில் 2 டேபிள் ஸ்பூன் பார்ஸ்லி விதைகள் மற்றும் 1/2 கப் ரோஸ்மேரியை சேர்த்து 20-25 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, தலைக்கு குளித்த பின்னர் அதை தலையில் ஊற்றி அலசி, ஒரு சுடுநீரில் நனைத்த துணியால் ஒரு மணிநேரம் கட்டி வைத்து, பின் தலைமுடியை உலர்த்த வேண்டும். இப்படி செய்தால் தலைமுடி மென்மையாகவும், வலிமையாகவும் இருக்கும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், முடி வலிமையாக மற்றும் ஆரோக்கியமாக இருக்கும்.

பால்

பாலிலும் புரோட்டீன் உள்ளது. இந்த பாலை ஈரமான தலையில் தடவி குறைந்தது 2-3 மணிநேரம் ஊற வைத்து, பின் தலைமுடியை மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு இரண்டு முறை பாலை தலைக்கு பயன்படுத்தி வந்தால், உடனடி பலனைக் காணலாம்.

வெங்காய சாறு
வெங்காய சாறு
வெங்காயத்திற்கு தலைமுடி உதிர்வை சரிசெய்து, தலைமுடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் திறன் உள்ளது. நீங்கள் அதிக தலைமுடி உதிர்வால் அவதிப்பட்டு வந்தால், வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து, அதை தலையில் ஸ்கால்ப்பில் படும் படி தடவி, 30-45 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இதனால் தலை முடி வலிமையாவதோடு, முடி உதிரம் பிரச்சனையும் தடுக்கப்படும். முக்கியமாக இந்த முறையை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்துங்கள்.

Related posts

தெரிஞ்சிக்கங்க… நீங்களே அறியாமல் உங்கள் முடிக்குச் செய்யும் தவறுகள் என்ன தெரியுமா?

nathan

பெண்களே நரைமுடியால் அவதிப்படுகிறீர்களா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

கூந்தல் வளர்க்கும் ரகசியங்கள்!

nathan

கூந்தல் உதிர்வில் சீப்பின் பங்கு

nathan

சிம்பிள் டிப்ஸ்..! முடி உதிர்வா கவலை வேண்டாம்.!

nathan

இப்படி இருக்கிற தலையில அடர்த்தியா முடி வளரணுமா ? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

உங்களுக்கு சுருட்டை முடியா? இந்த மாஸ்க் போடுங்க…

nathan

ஆண்களே! முடி அதிகமா கொட்டுதா? அப்ப இதெல்லாம் செய்யாதீங்க…

nathan

சூப்பர் டிப்ஸ்! வழுக்கை விழுந்த இடத்தில் முடி வளர வைக்க வாரத்திற்கு 2 முறை இத தடவினாலே போதும்!

nathan