taste 13 1510560759
மருத்துவ குறிப்பு

உங்கள் நாக்கில் உலோகச் சுவை உணர்கிறீர்களா? இதெல்லாம்தான் காரணமாம்!!

சில சமயம் உங்கள் நாக்கில் உலோகச் சுவையை நீங்கள் உணர்ந்திருக்கலாம். இரும்பு சாமான்களை சுவைப்பது போல உணர்வீர்கள். பெரும்பாலும் காய்ச்சல், அல்லது உடல் நலம் சரியில்லாதபோது நாம் உணர்ந்திருக்கிறோம்.

இந்த உலோகச் சுவை எதற்கு வருகிறது என நாம் கண்டுகொள்வதில்லை. சில நாட்களில் அது மறைந்ததும், நாமும் மறந்துவிடுகிறோம். எதையும், நம்மைச் சுற்றியும் நடப்பதை நாம் கண்டுகொள்ளாமல் இருப்பது போல், நமக்குள் நடக்கும் சிறு மாற்றங்களையும் தெரிந்து வைத்துக் கொள்ளாமல் உதாசீனபப்டுத்துகிறோம்.

தெரிந்து வைத்துக் கொண்டால் தப்பில்லையே. அவை ஏதாவது நோயின் அறிகுறியாக இருக்கலாம் அல்லது நாம் சாப்பிட்ட உணவுகளின் பிரதிபலிப்பாக இருக்கலாம். என்னவென்றுதான் தெரிந்து கொள்ளலாமே. வாருங்கள்.

மாத்திரைகள் :
பாராசிட்டமால், அன்டிபயாடிக் மற்றும் சிறு நீரக பாதிப்பிற்காக எடுத்துக் கொள்ளும் சில மாத்திரைகளால் இவ்வாறான உலோகச் சுவை வருவதுண்டு. அவ்வாறு உங்களுக்கு ஏற்பட்டால் உடனே மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று வேறு கம்பனி அல்லது வேறு மாத்திரைகளை பரிசீலனைப் பெற்று வாங்குதல் அவசியம்.

மோசமான பற்களின் ஆரோக்கியம் : உங்கள் பற்கள் மோசமாக பாதிப்படைந்தால், ஈறு பிரச்சனைகள் ஏற்பட்டால் இந்த மாதிரி சுவையை உணர்வீர்கள். அதிகமான கிருமிகளின் தாக்குதலால் ஈறுகளில் இருக்கும் திசுக்கள் பாதிக்கப்பட்டு, இவ்வாறான சுவையை தரும். எதர்கும் ஈறு, பற்கள் பிரச்சனைகள் இருக்கா என சோதித்துக் கொள்ளுங்கள்.

கர்ப்பிணிகள் : முதம் மூன்று மாதத்தில் கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு இந்த மாதிரியான உலோசக் சுவை உண்டாகும். இதற்கு காரணம் அவர்களின் உடலில் உண்டாகும் ஹார்மோன் மாற்றங்களே ஆகும். முதல் மூன்று மாதங்கள் பிறகு இந்த பிரச்சனை மறைந்துவிடும்.

நரம்புக் கோளாறுகள் : நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டால், கட்டுப்படுத்தும் திறன் கொண்ட மூளை சுவையுணர்ச்சியை தாக்கும். இதனால் சுவையின் திறன் மட்டுப்படுத்தி, உலோகச் சுவை உணர்வீர்கள்.

உடலில் அதிக கனிமச் சத்துக்கள் : உடலில் அதிக அளவு செம்பு மற்றும் இரும்புச் சத்து இருந்தால் இவ்வாறான சுவை உணர்வீர்கள். உடலில் ஜிங்க் குறைபாடு இருந்தாலும் உலோகச் சுவை உண்டாகும். உங்கள் உடலில் இந்த சத்துக்களை அறிய இந்த அறிகுறியும் உதவும்.

உடலில் அதிக கனிமச் சத்துக்கள் : உடலில் அதிக அளவு செம்பு மற்றும் இரும்புச் சத்து இருந்தால் இவ்வாறான சுவை உணர்வீர்கள். உடலில் ஜிங்க் குறைபாடு இருந்தாலும் உலோகச் சுவை உண்டாகும். உங்கள் உடலில் இந்த சத்துக்களை அறிய இந்த அறிகுறியும் உதவும்.

ஃபுட் பாய்சன் : நீங்கள் சாப்பிட்ட உணவு நஞ்சானால் வயிற்று உபாதைகள் தவிர்த்து நாக்கிலும் உலோகச் சுவை உண்டாகும். சிலருக்கு வயிற்று வலியுடன் கூடிய உலோகச் சுவை ஏற்பட்டால் அது ஃபுட் பாய்சன் என இனம் கொள்ளலாம்.

காது பிரச்சனை : உங்கள் காதுகளில் இன்ஃபெக்ஷன் ஏற்பட்டிருந்தால் அதனால் கூட நாக்கில் உலோகச் சுவை ஏற்படுமாம். காது மட்டுமல்லாது, வாயிலும் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டிருந்தால் இந்த சுவை உண்டாகும்.

நுரையீரல் பாதிப்புகள் : சுவாசக் குழாய் கோளாறுகள், சைனஸ், ஆஸ்துமா போன்றவை ஏற்பட்டால் நாக்கில் உலோகச் சுவை அதிகரிக்கும்.

தலையில் அடி : அது போல் தலையில் அடிப்பட்டாலும் கூட சுவை நரம்புகள் பாதிக்கப்பட்டு உலோகச் சுவை உண்டாகும். ரேடியோ தெரபி , கீமோ தெரபி எடுத்துக் கொள்பவர்களுக்கும் கூட இவ்வாறான உலோகச் சுவை ஏற்படும்.

சிறு நீரகக் கோளாறுகள் : சிறு நீரக செயலிழப்பு ஏற்பட்டால், அதிகப்படியான யூரிக் அமிலம் ரத்தத்தில் கலக்கும்போது, யுரீமியா ஏற்படுகிறது. இதனால் வாய் துர் நாற்றம், உலோகச் சுவை, பசியின்மை போன்றவை உண்டாகும்.

குறைவான ரத்த குளுகோஸ் : உடலில் குளுகோஸின் அளவு குறைவாக இருந்தால் நாக்கில் உலோகச் சுவை ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். ஹைபோகிளசிமிக் எனப்படும் குறைந்த அளவு குளுகோஸ் உற்பத்தியினால் இந்த பிரச்சனை எழுவதுண்டு.

அதிக விட்டமின் டி : சூரியன் மற்றும் உணவுகளிலிருந்து பெறப்படும் விட்டமின் டி அளவுக்கு அதிகமாக உடலில் இருந்தால் உலோகச் சுவை ஏற்படும். அதிகளவு விட்டமின் டி நேரடியாக உலோகச் சுவையுடன் தொடர்பு பெற்றுள்ளது. ஆகவே விட்டமின் டி சத்தை சோதித்துக் கொள்ளலாம்.

நீர்ச் சத்து : உடலில் போதுமான நீர் இல்லையென்றால் முதலில் வெளிப்படுத்துவது உங்கள் நாக்கே. நாக்கு உலர்ந்து போய், உலோகச் சுவையும் சில சமயங்களில் உணர்ந்திருக்கிறீர்களா? அந்த மாதிரி சமயங்களில் உங்கள் உடலில் போதுமான நீர்ச்சத்து இல்லை என அறிந்து கொள்ளலாம்.

எவ்வாறு உலோகச் சுவையை கட்டுப்படுத்தலாம்? உப்பு நீர் கொப்பளித்தல் : பல் தொடர்பான பிரச்சனையென்றால் வெதுவெதுப்பான உப்பு நீரில் கொப்பளித்தால் நல்ல தீர்வு கிடைக்கும். இது உலோகச் சுவை வருவதற்கு காரணமன கிருமிகளை அழிக்கிறது.

சிட்ரஸ் பழங்கள் : சிட்ரஸ் பழங்கள் எச்சில் சுரப்பதை தூண்டுகிறது. இதனால் உலோகச் சுவை தடுக்கப்படுகிறது. ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை போன்றவை அருமையான பலன்களை தரும்.

நீர் அதிகம் குடித்தல் : உங்கள் உடம்பில் நீர்ச்சத்து குறைவாக இருந்தாலும் இந்த பிரச்சனை ஏற்படும் என்பதால் அதிகமாக நீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள், ஸ்மூத்தி போன்ரவை அடிகக்டி குடித்தால் ஓரிரு நாட்களில் மறைந்துவிடும்.

புதினா, ஏலக்காய் : புதினா, ஆரஞ்சு சுவையுள்ள இனிப்பு மிட்டாய்கள், ஏலக்காயை வெறும் வாயில் மெல்லுதல் போன்றவையும் நல்ல பலன்களை தரும்.

மருத்துவரை நாடுதல் : இதெல்லாம் செய்கிறோமே என மெத்தனமாக இருக்காமல் மருத்துவரை ஒரு தடவை பார்த்துவிட்டு வருவது நலம். இதனால் பல பாதிப்புகளை அடியோடு ஆரம்பத்திலேயே கிள்ளிவிடலாம் இல்லையா?

ஆரோக்கியம் : ஆரோக்கியம் மட்டுமே உங்கள் சொத்து. அதை வைத்தே நீங்கள் செல்வந்தரா ஏழையா என உண்மையாக தீர்மானிக்க முடியும். எல்லாம் இருந்தும் உடல் கோளாறுகளால் மன நிம்மதியின்றி இருப்பவர்கள் நாட்டில் ஏராளம். மன நிம்மதிதான் எல்லாவற்றையும் விட முக்கியம். அதற்கு ஆதாரமாக விளங்குவது உங்கள் உடல் . அந்த உடலுக்கு மிக அவசியமானது ஆரோக்கியம். ஆகவே எப்போதும் ஆரோக்கியமானதை மட்டுமே உண்ணுங்கள்.taste 13 1510560759

Related posts

சூப்பர் டிப்ஸ்! காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா..!!

nathan

உங்களுக்கு மலச்சிக்கல் இருக்கிறதா? அப்ப இத படிங்க!

nathan

உங்களுக்கு தெரியுமா கேன்சர் ஏன் வருகிறது? தடுக்க என்ன வழி?

nathan

காரணம் தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்!! பூவரச இலைக் கொழுக்கட்டை ஏன் சாப்பிடனும்?

nathan

இதய நோய்கள் வராமல் தடுக்கும் அதி சக்தி வாய்ந்த பழங்கள் என்னென்ன தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

மனித மூளைக்குள் நிகழும் அதிசயம்

nathan

இளம்பெண்கள் – இளைஞர்களை தாக்கும் கழுத்து வலி

nathan

பெற்றோர்களே ஆட்டிஸம் பாதித்த குழந்தை மீது அன்பு செலுத்துவது எப்படி

nathan

பெண்களே முன்னழகை சிக்கென வைத்து கொள்ள டிப்ஸ்

nathan