இந்த உலகிலேயே மிகவும் உறுதியான பிணைப்பு என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? ஒரு தாய், தன்னுடைய குழந்தைகளிடம் காட்டும் அன்பு தான். அவள் உங்களிடம் எதிர்பார்ப்பதெல்லாம் சிறிதளவு அன்பை அவளுக்கு காட்ட வேண்டும் என்பதை மட்டுமே. ஏனெனில், அதை மட்டும் தான் உங்களால் போதும் என்று சொல்ல முடியாது.
டாப் 15 அழகான பாலிவுட் அன்னையர்கள்!!!
உலகமே உங்களுக்கு எதிராக நின்றாலும் கூட, உங்களுடன் கரம் கோர்த்து நிற்பவள் தாய் மட்டுமே. இதோ தாயிற் சிறந்த கோவிலுமில்லை என்ற வார்த்தையை உன்னதமாக்கும் 19 காரணங்களை அடுக்குகிறோம். படித்துப் பாருங்கள்…
காரணம்: 1
நீங்கள் எப்பொழுதெல்லாம் ஏதாவது தவறு செய்கிறீர்களோ, அப்பொழுதெல்லாம் உங்களுக்காக தந்தையிடம் திட்டு வாங்குபவர் தான் அன்னை.
காரணம்: 2
நீங்கள் குழந்தையாக இருந்த நேரங்களில், உங்களை கவனித்துக் கொள்வதற்காக அவள் கண் விழித்த நாட்களை கணக்கில் சொல்ல முடியாது. நீங்கள் விழித்தெழுவதற்கு வெகுநேரம் முன்னதாகவே அவள் எழுந்திடவும் மற்றும் நீங்கள் நன்றாக உறங்குவதை உறுதி செய்த பின்னர் தூங்குவதும் தான் அவளுடைய வழக்கம். இதையெல்லாம் அவள் ஒருபொழுதும் குறையாக நினைப்பதில்லை? இன்றும் கூட, உங்களுக்கு ஒன்று என்றால், அவளால் நிம்மதியாக உறங்க முடியாது.
காரணம்: 3
இந்த பூமியிலேயே மிகவும் அதிகமாக மன்னிக்கும் கடவுள் தாய் தான். சில நேரங்களில் நீங்கள் அவரிடம் மிகவும் கொடுமையாக நடந்து கொண்டிருந்தாலும் கூட, அவள் உங்களை மன்னித்திருப்பாள். உலகிலுள்ள மற்றவர்களை விடவும் அவள் உங்களை மிகவும் நேசித்திருப்பாள்.
காரணம்: 4
நீங்கள் எடுக்கும் முடிவுகளை அவள் தவறென்று சொல்லமாட்டாள். முதலில் அவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் கூட, நீங்கள் என்ன செய்தாலும் தாய் உங்களுடக்கு ஆதரவாக இருப்பாள் என்பது தெரியும். அவளுக்கே பிடிக்கவில்லையென்றாலும் கூட, உங்களுக்காக முடிவுகளை ஏற்றுக் கொள்வாள்.
காரணம்: 5
தாயானவள் எளிமையான இதயத்தைக் கொண்டிருக்கும் எளிமையான பெண்ணாவாள். இந்த அன்பை மட்டுமே அவள் உங்களிடம் எதிர்பார்ப்பாள். அன்புடன் அவளை அரவணைத்தால் போதும், உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான பெண்ணாக அவள் இருப்பாள்.
காரணம்: 6
தாயானவள் மனதளவில் மிகவும் சுத்தமான ஆன்மாவைக் கொண்டிருப்பாள். ஒவ்வொருமுறை உங்களைத் திட்டி விட்டு, சத்தமில்லாமல் தனியே சென்று அதை நினைத்து அவள் அழுது கொண்டிருப்தை கவனித்திருக்கிறீர்களா?
காரணம்: 7
உடனடி பண தேவையா அல்லது நண்பர்களுடன் டூர் செல்ல வேண்டுமா – என எதுவாக இருந்தாலும் உங்களுடைய ஆசைக்கு தாய் முன்னுரிமை கொடுத்து, ஆதரவு தருவாள். ‘முடியாது’ என்று அவள் சொல்லமாட்டாள் என்பது உங்களுக்குத் தெரியும்…
காரணம்: 8
உங்கள் மேல் எவ்வளவு கோபமிருந்தாலும், அதையெல்லாம் ஒதுக்கி வைத்திடுவாள் தாய். கோபமாக இருந்தாலும் நீங்கள் சாப்பிட்டு விட்டீர்களா என்பதையும், தூங்கும் போது உங்களுடைய போர்வை சரியாக உள்ளதா என்பதையும் பார்த்து சரி செய்வாள்.
காரணம்: 9
நாட்கள் செல்லச் செல்ல உங்கள் மேல் வைத்திருக்கும் அன்பையும் வளர்த்துக் கொண்டு செல்லும் ஒரே மனிதர் உங்களுடைய தாயார் தான். அதுவும் நீங்கள் எவ்வளவு தொலைவில் இருந்தாலும்.
காரணம்: 10
அவளுக்கு மாயங்கள் தெரியும். எந்த பிரச்சனையாக இருந்தாலும், அவளுடைய மடியில் உங்களால் நிம்மதியாக துயில முடியும். இது உண்மை தான்.
காரணம்: 11
எத்தனை முறை நீங்கள் அவளை உதாசீனப்படுத்தி இருந்தாலும், அவற்றை கணக்கில் கொள்ள மாட்டாள். இன்னும் உங்களிடமுள்ள நல்ல விஷயங்களைப் பற்றி மட்டுமே பேசுவாள். தன்னைப் பற்றி குறை சொல்பவர்களை இல்லாமல் செய்யும் இந்த உலகத்தில், தாயைப் போல பொறுத்தருள்பவர் யாரும் உளரோ?
காரணம்: 12
ஏற்றுக் கொள்: தாயை விட சிறப்பாக சமையல் செய்பவர் யாரும் இல்லை. “அம்மா, எனக்கு பசிக்குது, சாப்பாடு கொண்டு வா” என்று நீங்கள் உரிமையுடன் கேட்டதெல்லாம் அவளிடம் மட்டுமே. இதை ஏற்றுக் கொள்ளுங்கள். ஊரை விட்டு வெளியில் செல்லும் போது, அவளுடைய அற்புதமான சமையலை ‘மிஸ்’ பண்ணுவதை ஏற்றுக் கொள்ளுங்கள்.
காரணம்: 13
ஒரே சமயத்தில் பல்வேறு வேலைகளைச் செய்ய கற்றுக் கொள்ள வேண்டுமா? உங்களுடைய தாய் தான் இதற்கு சிறந்த ஆசான். உங்களுடைய சொந்த வேலை மட்டுமல்லாமல், வீட்டு வேலைகளையும், அப்பாவையும், சகோதர-சகோதரிகளையும் அவள் சிறப்பாக கவனித்துக் கொள்வாள் – ஒரே நேரத்தில்.
காரணம்: 14
உங்களுக்காக உலகை தியாகம் செய்யத் தயாரானவள் அவள். நீங்கள் வயிறார சாப்பிட வேண்டுமென்பதற்காக, பட்டினி கிடந்திடுவாள். போதுமான வசதிகள் இல்லாமல் வீட்டு நிலைமை இருந்தாலும் கூட, அந்த சூழல் உங்களை பாதிக்கக் கூடாது என அவள் முயற்சி செய்திடுவாள். இவற்றை நீங்களும் பார்த்திருப்பீர்கள்.
காரணம்: 15
பள்ளிக்குச் செல்லும் போது உங்கள் சட்டைப் பொத்தானை தைத்து கொடுப்பதையும், நோய்வாய்ப்பட்டு இருக்கும் நேரத்தில் உங்களுக்காக மருந்துகள் வாங்கி வருவதையும் மனதார செய்பவள் தாய் மட்டுமே. பிரச்னைகள் வரும் நேரத்தில் சூப்பர் ஹீரோக்களாக செயல்படுபவர்கள் தாயார்கள் தான்.
காரணம்: 16
ஒவ்வொரு நாளும் பல பிரச்சனைகளை தாய் எதிர்கொண்டாலும், அவளுடைய முகத்தில் புன்னகை மட்டும் குறைந்திருக்காது. மனநிறைவு மற்றும் உறுதியை வெளிப்படுத்தும் ஒரு புன்னகை போதும், நீங்கள் சரியாகி விடுவீர்கள்.
காரணம்: 17
அவளுடைய தொடர்ச்சியான முயற்சிகள் மட்டும் இல்லாவிட்டால், உங்களுடைய குடும்பம் இன்றளவில் இவ்வளவு உறுதியாக இருந்திராது. அவளுடைய நல்ல எண்ணம் மற்றும் செயல்களால் தான் நீங்கள் இன்று வளர்ந்திருக்கிறீர்கள். உங்களுடைய குடும்பத்தை தாங்கிக் கொண்டிருக்கும் தூண் போன்றிருப்பவள் தாய்.
காரணம்: 18
எப்பொழுதும் சரியானதையே அவள் செய்வாள். எந்தவிதமான கட்டுப்பாடுகளை அவள் உங்களுக்கு விதித்திருந்தாலும், பின்நாளில் ஒரு நல்ல மனிதனாக உங்களை மாற்றியதற்காக அவளுக்கு நன்றி சொல்லுங்கள்.
காரணம்: 19
நம்முடைய பிரச்சனைகள் பலவற்றால் நாம் வேதனையுடன் இருப்போம். இதைப் பற்றி யோசிக்கும் போது தான், உங்களுடைய தாய் சாதாரணமானவள் அல்ல என்பதை உணர முடியும். அவளும் உங்களைப் போல ஒருவர் தானே. ஆனால், அவளுடைய பிரச்சனைகளை நீங்கள் எப்பொழுதாவது பார்த்திருக்கிறீர்களா? அதுதான் அம்மா! தாய் தான் அனுபவிக்கும் வலியை, நீங்கள் உணரக் கூடாது என்பதை எப்பொழுதும் பின்பற்றுவாள். நீங்கள் எதைச் செய்தாலும், அதில் துன்பம் இருக்கக் கூடாது என்பதை அவள் விரும்புவாள். அதற்காக எதையும் செய்வாள்.