நமக்கு விக்கல் ஏற்பட்டவுடன் உடனடியாக தண்ணீரை குடித்து சரி செய்வோம். சிலருக்கு ஏற்படும் விக்கலானது என்ன செய்தாலும் நிற்காமல் தொடர்ந்து ஏற்பட்டு கொண்டே இருக்கும்.
விக்கல் ஏற்பட்டால் அதனை உடனடியாக சரி செய்வது எப்படி என்பது குறித்து இனி காண்போம்.
நமக்கு விக்கல் எடுக்கும் சமயத்தில் ஒரு தே.கரண்டி சர்க்கரையை வாயில் போட்டு., சர்க்கரை கரையும் வரை காத்திருந்தால் விக்கலானது குறையும். இதன் மூலமாக விக்கல் எளிதில் சரியாகும். விக்கல் ஏற்படும் சமயத்தில் குளிர்ந்த அல்லது அரை வெப்ப நிலையில் இருக்கும் நீரை குடித்தால்., உடலின் செயல்பாட்டில் ஏற்பட்ட அதிர்ச்சியை சரி செய்து விக்கல் நிற்கும்.
விக்கல் ஏற்படும் நேரத்தில் ஒரு குவளை நீரில் தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இந்த முறையி தயார் செய்யப்பட்ட நீரை தொண்டையில் படும் படி குடித்து வந்தால் விக்கல் உடனடியாக நிற்கும். இதுமட்டுமல்லாது ஒரு சிறிய அளவிலான ஐஸ் கட்டியை எடுத்து வாயில் வைத்து சிறிது நேரம் காத்திருந்தால் விக்கலானது உடனடியாக நிற்கும்.
இதுமட்டுமல்லாது விக்கல் ஏற்பட்ட உடனேயே எலுமிச்சம்பழ சாறை எடுத்து ஒரு குவளை நீரில் சேர்த்து குடித்து வந்தால் விக்கலானது நிற்கும். எலுமிச்சை பழத்தில் இருக்கும் மருத்துவ குணத்தின் மூலமாக நரம்புகள் தூண்டப்பட்டு., விக்கல் ஏற்படும் பிரச்சனையானது குறைக்கப்படும்.