முருங்கைக்காய் சாப்பிடுவதால் கடுமையான மலச்சிக்கலால் உண்டாகும் தலைவலி குணமாகும் என்றால் ஆச்சரியமாக உள்ளதா? அதுவும் முற்றின முருங்கையின் பலன் அறிய தொடர்ந்து படிக்கவும்.
மண்டலம் – சுவாச மண்டலம்
காய் – முருங்கை
பஞ்சபூதம் – காற்று
மாதம் – ஐப்பசி
குணம் – பணிவு
சத்துக்கள் : நார்ச் சத்து , புரதச் சத்து, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றும் வைட்டமின்களும் மிக அதிக அளவில் உள்ளன.
தீர்வு : முற்றின முருங்கை விதையை(4) எடுத்து தண்ணீரில் ஊற வைத்து பின்பு விதையை நன்றாக நசுக்கி அந்தத் தண்ணீரோடு சேர்த்து குடிக்க வேண்டும்.
தினந்தோறும் ஒரு வேளை உணவில் முருங்கைக் கீரையை ஒன்றிரண்டாக ஆய்ந்து நன்றாக கழுவி நீராவியில் வேக வைத்து பின்பு வாணலியில் போட்டு மிளகு, சீரகம் சேர்த்து பொறியலாக செய்து அளவு அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.