129195 adu milk
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா மாட்டுப்பாலை விட ஆட்டுப் பால் சிறந்தது

பெரும்பாலான நாடுகளில் ஆட்டுப்பாலின் சிறப்புகள் பற்றி பெரிதாக யாரும் அறிந்தில்லை. ஆட்டுப்பால் தாய்ப்பாலுக்கு மிகச்சரியான மாற்று என்று தற்போதைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆட்டுப்பாலில் உள்ள பீட்டாகேசின் என்ற புரத அமைப்பு தாய்ப்பாலில் காணப்படும் புரத அமைப்பினை ஒத்ததாக உள்ளது.

ஒலிகோசேர்க்ரைடு என்னும் சர்க்கரையின் அமைப்பும் தாய்ப்பாலில் உள்ளது போன்றே காணப்படுவதால், பச்சிளங்குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு மிகச்சிறந்த மாற்று ஆட்டுப்பால் மட்டுமே.

இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் ஆட்டுப்பால்……!

இதில் காணப்படும் கொழுப்பமிலங்கள் உடலின் கொழுப்பின் அளவை சமநிலைப் படுத்துவதுடன், பக்க வாதம், மாரடைப்பு, போன்ற இருதய நோய்கள் வராமல் தடுக்கும்.

அத்துடன் இதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கு உதவுகிறது.

இதில் புரோட்டின், மாபொருட்கள், குலுக்கோஸ், சோடியம், கல்சியம், பொஸ்பரஸ், பொட்டாசியம், விட்டமின் ஏ, பி2, சி மற்றும் டி போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

மெட்டபோலிசத்தை தூண்டும்…..!

பசுப் பாலை விட ஆட்டுப்பாலில் அதிகளவான ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

ஆட்டுப்பாலில் இரும்புச்சத்து…!

ஆட்டுப்பாலில் இரும்புச்சத்து இருப்பதால் குழந்தைகளுக்கு போதிய இரும்புச்சத்து கிடைத்து விடுகிறது.

ஆட்டுப்பாலுக்கு வயிற்று புண்ணை ஆற்றும் சக்தி உண்டு. ஆட்டுப்பால் அருந்தும் குழந்தைகள் நன்றாக தூங்குவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்….!

ஆட்டுப்பாலில் உள்ள நன்மை தரும் கொழுப்பு அமிலங்கள் ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதை தடுக்கின்றன.

ஆட்டுப் பாலில் உள்ள ஒமேகா 3 வகை கொழுப்பு அமிலங்கள் நீரிழிவு, இதயம் தொடர்பான நோய்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கின்றன.

சீரான ரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகின்றன. ஆட்டுப்பால் அருந்துவதால் அனைவருக்கும் பொதுவான நோய் எதிர்ப்புச் சக்தியை பெற்று ஆரோக்கியத்தை பெறலாம்.

இதில் உள்ள செலினியம் தொற்றுக்களால் நோய்கள் வராமல் தடுப்பதுடன், இதில் காணப்படும்.

கனியுப்புக்கள் நோய் எதிர்ப்பு சக்தி தொகுதியை சிறப்பாக செயற்படச் செய்து, நோய்கள் வராமல் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்

மூளையின் ஆரோக்கியத்திற்கு உதவும….!!.

இதில் காணப்படும் கொழுப்பு படபடப்பை குறைப்பதுடன், மூளை வளர்ச்சி அடைவதை அதிகப்படுத்துவதுடன், ஞாபக சக்தியை கூர்மைப்படுத்தும் ஆற்றல் உள்ளது.129195 adu milk

Related posts

சூப்பர் டிப்ஸ் முளைக்கட்டிய வெந்தயத்தை தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்.!

nathan

நுங்கு சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

சூரியகாந்தி எண்ணெய் சமையலுக்கு நல்லதா?

nathan

புதினா சர்பத்

nathan

சுவையான சிம்பிளான… தேங்காய் சாதம்

nathan

ருசியான சத்தான வாழைப்பழ தோசை!

nathan

ஆண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்

nathan

சாதம் மீதி இருக்கா? சூப்பரா கட்லெட் செய்யலாம்!

nathan

எந்த உணவுகளை சாப்பிட்டால் ஃபுட் பாய்சன் ஏற்படும்?

nathan