இது நமக்கு மட்டும் பிரச்னை ஏற்படுத்தாது, சுற்றியுள்ளவர்களுக்கும் தொந்தரவை ஏற்படுத்தும். அவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி முகம் சுளிக்க வைக்கும்.
பெர்பியூம் போட்டும் வாசனை இல்லையே என்ன செய்ய?
பெர்பியூம் போட்டுக் கொண்டாலும் வாசனை சில மணி நேரம் மட்டும் தான் நீடிக்கிறது என்கிறீர்களா? பெர்பியூம் வாசம் ஒரு நாள் முழுவதும் நீடிக்க சில டிப்ஸ்…
குளித்து முடித்தவுடன் பெர்பியூம் போட்டுக் கொள்ளுங்கள். குளித்த உடன் உங்கள் உடல் ஈரமாக இருக்கும். அப்போது பெர்பியூம் போட்டுக் கொண்டால் நீண்ட நேரம் நீடித்து இருக்கும்.
சருமத்தில் ஈரப்பதம் இருந்தால் பெர்பியூம் வாசனை நீண்ட நேரம் நீடிக்கும். உடலுக்கு தேவையான மாய்ஸ்சரைசர்களை நீங்கள் பயன்படுத்துவீர்கள் என்றால் அதை தடவிய பிறகு பெர்பியூம் அடித்துக்கொள்ளுங்கள்.
சட்டை போன்ட்டில் பெர்பியூமை தெளித்துக் கொள்வதைவிட உடலில் பயன்படுத்துவது நல்ல பலனைத் தரும்.
ஒரே இடத்தில் மொத்தமாக அடிப்பதைவிட அடுக்கடுக்காக அடித்தால் அதன் நறுமணம் நீண்ட நேரம் இருக்கும். முதலில் உடலில் பின் சட்டையிலும் அடித்துக் கொண்டால் நல்ல பலன் தரும்.
உங்கள் உடலில் பெர்பியூம்களை அடிப்பதைவிட உங்கள் தலைமுடியில் பெர்பியூம் அடித்தால் நீண்ட நேரம் நீடித்திருக்கும். அதற்காக தலையில் நேரடியாக அடிக்க வேண்டாம். ஏனென்றால் பெர்பியூம்களில் இருக்கும் ஆல்கஹால் உங்கள் தலைமுடிக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். பெர்பியூமை காற்றியில் அடித்துவிட்டு அங்கு உங்களை தலையை நீட்டி நின்றால் போதும்.
அப்படியும் இல்லையென்றால் நீங்கள் பயன்படுத்தும் சீப்பில் பெர்பியூமை அடித்துக் கொண்டு அதன்பின் அதில் தலை சீவுங்கள். அது நாள் முழுவதும் நீடித்து இருக்கும்.
நீங்கள் உங்கள் உடலுக்கு ஏற்ற பெர்பியூமை தேர்தெடுப்பது மிகவும் மிக்கியமானது. சிலருக்கு உடலில் நிறைய வியர்வை வெளிவரும், சில உடலில் வியர்வை வராவிட்டாலும் துர்நாற்றம் ஏற்படும். அதற்கு ஏற்றது போல வாசனை திரவியங்களை பயன்படுத்த வேண்டும்.
நல்ல பெர்பியூம்களை பயன்படுத்தினால் நாள் முழுவதும் நல்ல நறுமனம் வீசி உங்களை உற்சாகமாக வைத்திருக்கும்.