பலருக்கு சாதாரண பாலை விட, பாதாம் பால் மிகவும் பிடிக்கும். அப்படி பாதாம் பால் குடிப்பதாலும் பல நன்மைகள் கிடைக்கும் என்பது தெரியுமா? ஆம், பாதாம் பாலில் சாதாண பாலை விட கால்சியம் மற்றும் புரோட்டீன் குறைவாக இருந்தாலும், ஒரு கப் பாதாம் பாலில் ஒரு நாளைக்கு ஒருவருக்கு வேண்டிய கால்சியம் மற்றும் புரோட்டீன் சத்துக்கள் உள்ளன.
சிலருக்கு பால் என்றால் அலர்ஜி ஏற்படும். அத்தகையவர்கள் பாதாம் பாலை தினமும் குடிப்பது நல்லது. ஏனெனில் இதனால் பாலினால் கிடைக்கும் சத்துக்கள் இதன்மூலம் பெற முடியும். இங்கு பாதாம் பாலை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா!!!
எடையை கட்டுப்பாட்டுடன் வைக்கும்
ஒரு கப் பாதாம் பாலில் 60 கலோரிகளும், அதே சாதாரண பாலில் 146 கலோரிகளும் உள்ளன. ஆகவே இதைப் பருகினால் உடலில் கலோரிகள் அதிகரிக்காமல் இருக்கும். இதனால் உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைக்க முடியும்.
ஆரோக்கியமான இதயம்
பாதாம் பாலில் கொலஸ்ட்ரால் அதிகம் இல்லை. ஆகவே இதனை குடித்தால் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். மேலும் இதில் சோடியம் குறைவாகவும், நல்ல கொழுப்புக்கள் அதிகமாகவும் இருப்பதால், இது உயர் இரத்த அழுத்தத்தை குறைத்து, இதய நோயில் இருந்து பாதுகாக்கும்.
ஆரோக்கியமான மூளை
பொதுவாக பாதாம் சாப்பிட்டால் ஞாபக சக்தி நல்ல நிலையில் இருக்கும். அதிலும் தினமும் இரவில் படுக்கும் போது, காலையில் எழுந்ததும் பாதாம் பாலை அருந்தினால், அது மூளைக்கு ஆரோக்கியத்தை வழங்கி, ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
வலுவான எலும்புகள்
பாதாம் பாலில் கால்சியம் குறைந்த அளவில் இருந்தாலும், இதனை தினமும் இரண்டு கப் குடித்து வந்தால், எலும்புகளில் எந்த பிரச்சனையும் வராமல் தடுப்பதுடன், நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க முடியும்.
வலிமையான தசைகள்
பாதாம் பாலில் புரோட்டீன் மற்றும் இரும்புச்சத்து, ரிபோஃப்ளேவின் போன்ற தசைகளை வலுவாக்கும் சத்துக்கள் இருக்கிறது. எனவே நல்ல கட்டுக்கோப்பான உடலைப் பெற நினைத்தால், பாதாம் பாலை அருந்துங்கள்.
குறிப்பு
பாதாம் பால் சாதாரண மாட்டுப் பாலை விட மிகவும் சுவையுடன் இருப்பதால், எந்த ஒரு பயமும் இல்லாமல் இதனை தினமும் இரண்டு வேளை குடிக்கலாம்.