நம்மில் பலர் பச்சை மிளகாயை காரத்திற்கும் சுவைக்கும் மட்டுமே பயன்படுத்துகின்றனர். ஆனால் பச்சை மிளகாய் சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது.
நோய் எதிர்ப்பு சக்தி – பச்சை மிளகாயில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் அது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, நோய் தொற்று ஏற்படாமலும் தடுக்கிறது.
ஜீரண சக்தி – பச்சை மிளகாயை மென்று சாப்பிட்டால் எச்சில் அதிகமாக சுரக்கும். இதன் மூலம் உண்ணும் உணவு எளிதில் ஜீரணமாகும்.
இரும்புச்சத்து – இதில் அடங்கியிருக்கும் வைட்டமின் சி இரும்புச்சத்தை கிரகித்து கொள்ள உதவுவதோடு, அனீமியாவை எதிர்த்தும் போராடுகிறது.
சர்க்கரை நோய் – சர்க்கரை நோய் உள்ளவர்கள் பச்சை மிளகாய் சாப்பிட்டால் உடலில் உள்ள சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருக்கும்.
எலும்பு பலமாகும் – பச்சை மிளகாயில் அதிகப்படியான வைட்டமின் கே மற்றும் கால்சியம் உள்ளதால் அதை சாப்பிடுபவர்களுக்கு காயம் ஏற்ப்பட்டால் அதிக ரத்தம் வெளியேறாது. இதோடு எலும்புகளும் வலு பெறும்.
உடல் எடை – பச்சை மிளகாய் கொழுப்பை குறைக்கும். இதில் கலோரி இல்லை என்பதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இதை சாப்பிடலாம்.
இதயம் – பச்சை மிளகாயில் மினரல்ஸ், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் உள்ளது. இவை சீரான இதயத்துடிப்பிற்க்கும், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.