178840978bfe7e2add93ecce43526e995f67aff8c
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்.!!

நல்லெண்ணெயில் உள்ள தாமிரம், கால்சியம், மெக்னீசியம் போன்ற தாது உப்புகள் உடல் நலத்திற்கு பயன்படுகிறது. மன அழுத்தத்தையும் போக்குகிறது.

நல்லெண்ணைய்யை உணவில் அதிகம் சேர்க்கும் போது, அது இதயத்திற்கு சரியான பாதுகாப்பு அளித்து, இதய நோய் வராமல் தடுக்கிறது.

நல்லெண்ணெய் குளியலின் மூலம், முடியின் வளர்ச்சி அதிகரிப்பதோடு, முடி அடர்த்தியாகவும் இருக்கும்.

நல்லெண்ணெய் கொண்டு வாரம் ஒருமுறை தலைக்கு மசாஜ் செய்து குளித்தால், உடலில் உள்ள அதிகப்படியான வெப்பம் வெளியேறும்.

வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் குளியல் எடுத்து வந்தால், உடலில் உள்ள நரம்புகள் ரிலாக்ஸ் ஆகி, உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

பொடுகுத் தொல்லை இருந்தால், வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் குளியலை மேற்கொண்டால், பொடுகுத் தொல்லை காணாமல் போய்விடும்.

தூக்கமின்மையால் அவஸ்தைப்படுபவர்கள், வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வந்தால், தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து விடுபட்டு, நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.

கம்ப்யூட்டர் முன்பு நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டே வேலை செய்வதால், கண்கள் சிவப்பாகி, அதன் ஆரோக்கியம் பாழாகும். எனவே வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் குளியல் மேற்கொள்வதன் மூலம், கண்களின் ஆரோக்கியம் மேம்படும்.

நல்லெண்ணைய்யை தினமும் இரண்டு அல்லது மூன்று தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால் உடல் பூரிக்கும். கோழிமுட்டை வெண்கருவுடன் நல்லெண்ணைய் கலந்து பருக்களின் மீது பூசி வந்தால் கட்டிகளின் வலி நீங்கும்.

நல்லெண்ணைய் தேய்த்துக் குளித்து வந்தால், கண் வலி, கண்ணில் நீர் வடிதல், மண்டைக் குத்தல் போன்றவை நீங்கும் என்று பாரம்பரிய மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தினமும் காலையில் எழுந்து நல்லெண்ணெயால் வாயை கொப்பளித்தால் (ஆயில் புல்லிங்) பற்களில் தங்கியிருக்கும் சொத்தைகள் நீங்குவதோடு, பற்கள் நன்கு பளிச்சென்று ஆரோக்கியமாக இருக்கும்.

மூட்டுகளில் பிரச்சனை உள்ளவர்கள், தினமும் நல்லெண்ணையில் மசாஜ் செய்து வந்தால் அது மூட்டுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியை குணமாக்கும்.

ஒற்றைதலை வலியால் அவஸ்தைப் படுபவர்கள், தினமும் நல்லெண்ணையில் மசாஜ் செய்து வந்தால், அந்த தொல்லையில் இருந்து விடுபடலாம்.

தைராய்டு உள்ளவர்கள், ஆயில் புல்லிங்செய்து வந்தால், தைராய்டு ஹார்மோனை சீராக சுரக்க செய்து, தைராய்டு பிரச்சனையைக் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.

வாரத்திற்கு ஒருமுறையாவது தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளித்தால் உடல் சூடு குறையும். தலைமுடி வறட்சி நீங்கும். பொடுகு முற்றிலும் நீங்கும். நல்லெண்ணெய் புத்திக்கு தெளிவு, கண்ணுக்கு குளிர்ச்சி, உடல் பூரிப்பு, வலிமை ஆகியவற்றை தருகிறது. கண் நோய், தலைக் கொதிப்பு, சொரி, சிரங்கு, புண் முதலியவற்றை தணிக்கிறது.

நல்லெண்ணெயை தினமும் 2 இல்லது 3 தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் உடல் பூரிக்கும். கோழி முட்டையின் வெள்ளைக் கருவுடன் நல்லெண்ணெய் கலந்து பருக்களின் மேல் பூசி வந்தால் கட்டிகளின் வலி நீங்கும். நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வந்தால், கண் சிவப்பு, கண் வலி, கண்ணில் நீர் வடிதல் மண்டைக் குத்தல் போன்றவை நீங்கும என்று பாரம்பரிய மருத்துவர்கள் கூறுகிறார்கள்

உடலை மசாஜ் செய்வதில் நல்லெண்ணெயின் பங்கு முக்கியமானது.

178840978bfe7e2add93ecce43526e995f67aff8c 970699446

Related posts

கண்ணின் ஆரோக்கியத்திற்கு உதவும் பப்பாளி…!அப்ப இத படிங்க!

nathan

இந்த மூன்று உணவுகளை பிரிட்ஜில் மட்டும் வைக்காதிங்க..

nathan

சத்து பானம்

nathan

பெண்களின் நோய் தீர்க்கும் கீரைத்தண்டு!

nathan

ஆப்பிளுக்கு ஈடான சத்து கொய்யாவில்..

nathan

லெமன் டீ சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

nathan

காலைச் சிற்றுண்டியை தவிர்க்கிறீர்களா?

nathan

சுவையான மட்கா லஸ்ஸி ரெசிபி

nathan

உளுந்தங்களி பெண்களுக்கு கர்பப்பை மிகவும் வலுப்பெறும்.

nathan