பேரிச்சம் பழத்தில் ஏராளமான சத்துக்கள் நிறைந்திருப்பது அனைவருக்குமே தெரியும். அத்தகைய பேரிச்சம் பழத்தை மருத்துவ குணம் நிறைந்த தேனுடன் கலந்து சாப்பிட்டால், எவ்வளவு நன்மை கிடைக்கும் என்று சற்று யோசித்துப் பாருங்கள்.
இக்கட்டுரையில் ஒருவர் தேனில் ஊற வைத்த பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வருவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து, இனிமேல் தினமும் சாப்பிட்டு நன்மைகளைப் பெறுங்கள்.
செய்முறை: ஒரு கண்ணாடி பாட்டிலில் விதையில்லாத பேரிச்சம் பழத்தைப் போட்டு, பேரிச்சம் பழம் மூழ்கும் அளவு தேன் ஊற்றி மூடி வைத்து, 3 நாட்கள் கழித்து சாப்பிட வேண்டும்.
சாப்பிடும் முறை: தேனில் ஊற வைத்த பேரிச்சம் பழத்தை தினமும் காலை மற்றும் மாலையில் என ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலினுள் மாற்றம் ஏற்பட்டிருப்பதைக் காண்பீர்கள்.
நன்மை #1 பேரிச்சம் பழத்தை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால், இரத்த நாளங்களில் உள்ள அடைப்புக்கள் நீக்கப்பட்டு, உடலினுள் இரத்த ஓட்டம் ஆரோக்கியமான அளவில் இருக்கும்.
நன்மை #2 பேரிச்சம்பழத்தில் இரும்புச்சத்து அதிகளவில் உள்ளது. இந்த பேரிச்சம்பழத்தை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால், உடலில் இரத்தத்தின் அளவு அதிகரித்து, இரத்த சோகையில் இருந்து விரைவில் விடுபடலாம்.
நன்மை #3 குடலியக்க பிரச்சனையால் அதிகம் அவஸ்தைப்படுபவர்கள், தேனில் ஊற வைத்த பேரிச்சம்பழத்தை சாப்பிடுவதன் மூலம், மலச்சிக்கல் நீங்கி, குடலியக்கம் சீராக்கப்படும். முக்கியமாக இதனால் குடல் புற்றுநோய் வரும் அபாயம் தடுக்கப்படும்
நன்மை #4 உடல் எடையைக் குறைக்க நினைப்போர், பேரிச்சம் பழத்தை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால், அடிக்கடி பசி ஏற்படுவது தடுக்கப்பட்டு, உடல் எடையை வேகமாக குறைக்கலாம்.
நன்மை #5 தேனில் ஊற வைத்த பேரிச்சம்பழம், இதய செயல்பாட்டை ஆரோக்கியமாக வைத்து, இதய நோயின் அபாயத்தைக் குறைக்கும். எப்படியெனில் இதில் உள்ள பீட்டா-டி-க்ளூக்கான், உடலின் கொலஸ்ட்ரால் உறிஞ்சும் அளவு குறைந்து, கொலஸ்ட்ரால் பிரச்சனையால் இதய நோய் வருவது தடுக்கப்படும்.