இன்றுள்ள காலகட்ட நிலையில் நமது உடலை பாதுகாக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும். இவ்வாறு உடல்நலத்தை பராமரிக்காமல் இருந்தால் பல உடல் நல பிரச்சனை ஏற்படும். இதனை தவிர்ப்பது குறித்த ஆலோசனையும்., உடல்நலத்திற்கு முக்கியமான இயற்கையான தீர்வையும் காண்போம்.
வெங்காயம் இரத்த விருத்திக்கும் இரத்த சுத்திக்கும் நல்ல வகையில் பயன்பட கூடியதாகும். இரத்த விருத்திக்காக இன்று புட்டி புட்டியாக டானிக்குகளை சாப்பிடுவோர் ஒரு நாளைக்கு ஒரு வெங்காயத்தை பட்சையாக சாப்பிட்டு வந்தால் போதும். மிகவும் குறைந்த செலவிலேயே அது நல்லதொரு இரத்த விருத்தி டானிக்காக பயன்படும்.
தொடர்ந்து புகைக்கும் காரணத்தால் நுரையீரல் பாதிக்கப்பட்டிருந்தால், வெங்காயத்தின் சாறு எடுத்து வேளைக்கு அரை அவுன்ஸ் வீதம் ஒரு நாளைக்கு நான்கு வேளை கொடுத்து வந்தால் நல்ல குணம் தெரியும். மற்றும் இருமல், கப வாந்தி, இரத்த வாந்தி, நாட்பட்ட சளி போன்றவற்றையும் வெங்காயச் சாறு குணமாக்கும்.
வெங்காயச் சாற்றுடன் கடுகெண்ணை கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுகளில் வலி தோன்றும் போது உபயோகிக்கலாம். நல்ல குணம் தெரியும். திடீரென்று மயக்கமடைந்து விழுந்து விட்டவர்களின் மூக்கில் இரண்டொரு துளி வெங்காயச் சாறு விட மயக்கம் தெளிந்து உட்காருவார்கள்.