சமையலில் வாசனைக்காக சேர்க்கப்படும் ஒரு முக்கியப் பொருள் ஏலக்காய் இது சிறந்த மருத்துவத்துக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.ஈரப்பதம், புரதம், மாவுப்பொருள், நார்ச்சத்து மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற முக்கிய தாது உப்புக்களும் கலந்துள்ளன.
குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டால், இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி, அந்தப் பொடியை தேனில் குழைத்து, குழந்தையின் நாக்கில், மூன்று வேளை தடவினால், வாந்தி நின்று விடும்.
மூக்கடைப்பால் அவதிப்படும் குழந்தைகளுக்கும், ஏலக்காய் நிவாரணம் தருகிறது. நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை குழந்தைகள் சுவாசித்தால், மூக்கடைப்பு நீங்கும்.
வெயிலில் அதிகம் சுற்றித்திரிந்தால், தலைசுற்றல், மயக்கம் ஏற்படும். இதற்கு நான்கைந்து ஏலக்காய்களை நசுக்கி, அரை தம்ளர் நீரில் போட்டு காய்ச்சி, சிறிது பனை வெல்லம் போட்டு குடித்தால், தலைசுற்றல் உடனே நீங்கும்.
சிறிதளவு ஏலக்காய்பொடியை, அரை தம்ளர் நீரில் கொதிக்க விட்டு, உணவு உட்கொள்வதற்கு முன் குடித்தால், வாயுத்தொல்லை நீங்கி விடும்.நெஞ்சில் சளி கட்டிக் கொண்டு மூச்சு விட சிரமப்படுபவர்களுக்கும், சளியால் இருமல் வந்து, அடிக்கடி இருமி வயிற்றுவலி வந்தவர்களுக்கும் கூட ஏலக்காய் நல்ல மருந்தாக அமையும்.
ஏலக்காயை வாயில் போட்டு மென்றால் வயிற்றுப் பசியை அதிகரித்து நன்கு சாப்பிட வைக்கும். நெஞ்சில் சளி உள்ளவர்கள் அடிக்கடி இருமி அவதிப்படாமல் இருக்கவும் உதவும். ஜீரணமாகாதபோது வரும் தலைவலியை ஏலக்காய் சேர்ந்த ஒரு கப் தேநீர் விடுவிக்கும்.
ஏலக்காய் மணத்திற்கு மட்டுமல்ல மருந்துக்கும் உதவுகிறது. சிகரெட் எரியும்போது கசியும் “நிக்கோட்டின்” நஞ்சு, தொண்டை, ஈறு, நாக்குகளில் படியும்போது கறை உண்டாவதுடன், அங்கிருக்கும் பூந்தசைகளை அரித்துப் புண்களை உண்டாக்கும்.
ஏலக்காய்” இந்தப் புண்களை ஆற்றுவிப்பதுடன், நிக்கோட்டின் கறைகளையும் படியாமல் அப்புறப்படுத்துகிறது.சிகரெட் பிடிக்கும் எண்ணம் வரும்போதெல்லாம், ஒரு ஏலக்காயினை வாயிலிட்டுச் சுவைக்க, புகைக்கும் எண்ணம் விலகும்.