nithiya kalyani 6
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா ஒரே நாளில் சக்கரை வியாதி, புண்களை குணமாக்கும் நித்திய கல்யாணி!

நித்திய கல்யாணி செடி அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டது. நித்திய கல்யாணி சர்க்கரை அளவை குறைக்க கூடிய தன்மை உடையது. புற்றுநோய்க்கு மருந்தாக அமைகிறது. உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கவல்லது. புண்களை விரைவில் ஆற்றும் தன்மை கொண்டது.

நித்திய கல்யாணி பூவை பயன்படுத்தி சர்க்கரை நோயாளிகளுக்கான மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
நித்திய கல்யாணி பூக்கள்,சீரகம்

5 முதல் 10 நித்திய கல்யாணி பூக்களை எடுக்கவும். இதனுடன் கால் ஸ்பூன் சீரகம் சேர்க்கவும். ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர சர்க்கரையின் அளவு குறையும். ரத்த அழுத்தம் சீராகும். நாள்பட்ட புண்கள் சீக்கிரம் ஆறும்.நித்திய கல்யாணி இலை, பூ ஆகியவற்றில் இருந்து புற்றுநோய்க்கான மருந்துகள் தயாரிக்கப்படுகிறது. மார்பக புற்றுநோய்க்கு மருந்தாகிறது. நெறிக்கட்டிகளை கரைக்கும் தன்மை உடையது.

நித்திய கல்யாணி பூக்களை பயன்படுத்தி புற்றுநோயாளிக்கான மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
நித்திய கல்யாணி பூக்கள்,
நித்திய கல்யாணி பூக்கள் 10 வரை எடுக்கவும். இதனுடன் கால் ஸ்பூன் கருஞ்சீரகம் சேர்க்கவும். ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர சீல் பிடித்த புண்கள், ஆறாத புண்கள் விரைவில் குணமாகும். புற்றுநோயாளிகள் இந்த தேனீரை எடுக்கலாம். பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட கருஞ்சீரகம் உடலினுள் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் புண்களை ஆற்றும்.

நித்திய கல்யாணி இலையை பயன்படுத்தி புண்களை ஆற்றும் மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
தேங்காய் எண்ணெய்,நித்திய கல்யாணி இலை

ஒரு பாத்திரத்தில் 2 பங்கு தேங்காய் எண்ணெய் எடுத்தால், ஒரு பங்கு நித்திய கல்யாணி இலை பசை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை ஆறவைத்து வடிகட்டி புண்கள் மேலே பூசுவதால் நல்ல பலன் கிடைக்கும். சீல் பிடித்த, புரையோடிய மற்றும் ரத்தம் கசிகின்ற புண்கள் விரைவில் குணமாகும்.தலையில் ஏற்படும் பொடுகுக்கான மருத்துவம் குறித்து பார்க்கலாம். பொடுகு இருந்தால் அரிப்பு ஏற்படும். தலையில் உள்ள அதிகமான வியர்வையால் மாசு படிந்து பூஞ்சை காளான்கள் உண்டாகிறது. இதனால் பொடுகு ஏற்பட்டு தலையில் அரிப்பு உண்டாகிறது. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இலுப்பை புண்ணாக்கை வாங்கி பொடித்து நீரில் இட்டு நன்றாக கலக்கவும். இதை தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளிப்பதால் பொடுகு தொல்லை சரியாகும்.nithiya kalyani 6

Related posts

ஆண்கள் பெண்களை கட்டிப்பிடிக்கும் விதங்களும் அதன் அர்த்தங்களும் -தெரிஞ்சிக்கங்க…

nathan

தோல் நோய்களை குணப்படுத்தும் புங்கை

nathan

எடையைக் குறைக்க கேரள ஆயுர்வேத வைத்தியம் கூறும் சில வழிகள்!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மார்பக புற்றுநோயில் இருந்து தப்பிக்க சில மகத்தான வழிகள்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா கற்றாழையின் அரிய வைத்திய முறைகள்?

nathan

சூப்பர் டிப்ஸ்! நினைவுத் திறனை அதிகரிக்கும் சில இயற்கை மருத்துவ குறிப்புகள்…!

nathan

சர்க்கரை அளவை குறைக்கும் கோவைக்காய்

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! காய்ச்சல் மற்றும் சளியில் இருந்து விலகி இருக்க அவசியம் பின்பற்ற வேண்டியவைகள்!

nathan

தெரிஞ்சிக்கங்க…நகம் கடிப்பதற்காக அல்ல

nathan