23.7 C
Chennai
Wednesday, Dec 18, 2024
1 153
சரும பராமரிப்பு

உங்களுக்கு தெரியுமா எல்லோரையும் கவர கூடிய அழகை தரும் அற்புத பூக்கள்…!

உலகில் உள்ள பல வித ஜீவ ராசிகளை காட்டிலும் பூக்கள் சற்றே அதிக பிரசித்தி பெற்றது. மலர்களின் பயன்கள் இந்த பூமிக்கு மிகவும் தேவைப்படுகிறது. ஒவ்வொரு பூக்களும் பல்வேறு நன்மைகளை கொண்டது. பூக்கள் இல்லையென்றால் அது தேனீக்களின் இனத்தையே அழித்து விடும். தேனீக்கள் இல்லாத உலகம் இருள் கொண்ட உலகமாக மாறிவிடும். இவ்வளவு சிறப்பு பெற்ற இந்த பூக்கள் மனிதனுக்கு பெரிதும் உதவுகின்றன.

ஒவ்வொரு பூக்களும் எண்ணற்ற நலன்கள் கொண்டவை. இவை உடல் ஆரோக்கியம் முதல் முக அழகு வரை பராமரிக்க பயன்படுகின்ற. இந்த பதிவில் பூக்கள் எவ்வாறு முக அழகை இளமையாக வைக்க உதவுகிறது என்பதை பற்றி அறிந்து கொள்வோம்.

அதிசய உயிரினம்..!

எல்லா உயிரினத்தை போன்றுதான் மலர்களும். ஆனால், இவற்றிற்கென்று சில அற்புத குணங்கள் உள்ளன. ஒவ்வொரு பூக்களும் பலவித அழகு குறிப்புகளை தனக்குள்ளே கொண்டுள்ளது. பூக்களில் ஏராளமான வைட்டமின்கள், பிளவனோய்ட்ஸ், ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளன. இவற்றை முகத்தில் தடவினால் முகம் இளமையாக மாறுவதோடு, மினுமினுப்பாகவும் பொலிவு தரும்.

சாமந்தி பூ :-

இந்த மலர்களை இறை வழிபாட்டிற்கு பெரிதும் பயன்படுத்துவர். மஞ்சள் மற்றும் ஆரஞ்ச் நிறத்தில் கண்ணை கவரும் விதத்தில் உள்ள இந்த மலர்கள் அதிக நன்மைகளை கொண்டது. இவை வெயிலினால் கலை இழந்த முகத்தை முற்றிலுமாக அழகும்பெற செய்கிறது.

தேவையனவை :-

சாமந்தி பூக்கள் 3

பால் 1 டீஸ்பூன்

யோகர்ட் 1 டீஸ்பூன்

துருவிய கேரட் 2 டீஸ்பூன்1 153

 

செய்முறை :- முதலில் துருவிய கேரட்டையும், சாமந்தி இதழ்களையும் ஒன்று சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் பால் மற்றும் யோகர்ட் சேர்த்து முகத்தில் பூசவும். பின் 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால் முகம் மினுமினுக்க செய்யும். அத்துடன் கலை இழந்த முகத்தில் புது பொலிவு கிடைக்கும்.

லாவெண்டர் பூ :- மலரில் மிருதுவான வண்ணத்தை கொண்டது இந்த லாவெண்டர் பூ. பார்ப்பதற்கு ஊதா நிறத்தில் உள்ள இந்த பூக்கள் முகத்தை வெண்மையாக மாற்ற வழி செய்கிறது. சிறிது இந்த பூக்களின் இதழ்களை நீரில் மிதமான சூட்டில் 5 நிமிடம் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளவும். பின் இதனை தூளாக்கிய ஓட்ஸில் கலந்து முகத்தில் தடவி வந்தால் முகம் வெண்மையாக பளபளப்பாகும்.

ரோஜா பூ :- காதல் சின்னமாக விளங்கும் இந்த ரோஜா பூக்கள் ஒரு அற்புதமான இயற்கையின் படைப்பு. இவை காதலுக்கு மட்டும் பயன்பட கூடியவை அல்ல. அத்துடன் உங்கள் முகத்தையும் சேர்த்தே இவை பராமரிக்கிறது. இந்த அழகு குறிப்பை செய்து பாருங்கள். உங்கள் காதலன் அல்லது காதலி உங்கள் அழகில் மெய்மறந்து போய்விடுவார். தேவையானவை :- ரோஜா பூ 1 பால் 1 டீஸ்பூன் கோதுமை தவடுகள் 1 டீஸ்பூன்

செய்முறை :- முதலில் ரோஜா பூவின் இதழை நன்கு அரைத்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் கோதுமை தவடுகளையும் சேர்த்து அரைத்து கொண்டு பால் சேர்க்கவும். இந்த கலவையை முகத்தில் பூசி மசாஜ் செய்யவும். பின் 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் முகம் மிகவும் அழகு பெரும்.

தாமரை பூ :- தேசிய மலரான தாமரையில் அதிக படியான ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளன. இது உடலில் செல்களை மறு உற்பத்தி செய்து என்றும் இளமையாக வைக்கிறது. அத்துடன் முகத்தை மிகவும் அழகாக மாற்றுகிறது. தாமரை மலரின் இந்த பலனை பெற… தேவையானவை :- ஆலிவ் எண்ணெய் 2 டீஸ்பூன் தாமரை மலர் 1 பால் 2 டீஸ்பூன்

செய்முறை :- வெள்ளை தாமரை இதழ்களை முதலில் தனியாக நறுக்கி கொள்ளவும். பிறகு அவற்றுடன் பால், ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து கொண்டு முகத்தில் பூசி மசாஜ் செய்யவும். 20 நிமிடம் கழித்து முகத்தை வெது வெதுப்பான நீரில் கழுவவும். இந்த குறிப்பை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் முகம் இளமை பெரும்.

செம்பருத்தி பூ :- பொதுவாக செம்பருத்தி பூ முடி பிரச்சினையை போக்கும் என்பதுதான் நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அவற்றுடன் முகத்தின் அழகையும் இது பராமரிக்க பெரிதும் பயன்படுகிறது. தேவையானவை :- 1 செம்பருத்தி பூ 1 டீஸ்பூன் தயிர் 2 டீஸ்பூன் முல்தானி மட்டி 1 ரோஜா பூ

செய்முறை :- முதலில் ரோஸ் மற்றும் செம்பருத்தி இதழ்களை சேர்த்து அரைத்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் தயிர் மற்றும் முல்தானி மட்டி கலந்து முகத்தில் தடவவும். 20 நிமிடம் கழித்த இந்த முக பூச்சை குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் மிருதுவாகும். அத்துடன் கரும்புள்ளிகள், அழுக்குகள் போன்றவற்றையும் நீக்கி விடும்.

மல்லிகை பூ :- வறண்ட சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்து கொள்ள இந்த மல்லிகை உதவுகிறது. மல்லிகை பூக்கள் சிறிது எடுத்து கொண்டு அவற்றை நன்கு அரைத்து கொள்ளவும். பின் அவற்றுடன் தயிர் சேர்த்து முகத்தில் தடவி வந்தால் முகம் மிகவும் மென்மையாகும். அத்துடன் முகத்தில் உள்ள சொரசொரப்புகளை நீக்கி விடும். இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் முக ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

 

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…இந்த சோப்பு உங்களுக்கு வயதாவதை தள்ளிப்போட்டுக்கொண்டே இருக்குமாம்…

nathan

உங்க சருமம் புதுசா ஜொலிக்கனுமா? இந்த ஒரு ரெசிபி ட்ரை பண்ணுங்க!!

nathan

அழகு வேண்டுமா? ஆரோக்கியம்…

nathan

உபயோக அழகு‌க் கு‌றி‌ப்புக‌ள்

nathan

தூய்மையான சருமத்தை பெற இயற்கை வழிகள்

nathan

உங்கள் குளியல் சோப் பற்றி தெரியுமா?

nathan

உங்கள் சருமம் எப்பொழுதும் எண்ணெய் பசையுடன் காணப்படுகிறதா?.. அப்ப தினமும் செய்யுங்க…

nathan

முடி உதிர்வு, தலை அரிப்பை போக்கும் பலாக்கொட்டை

nathan

கழுத்தில் உள்ள கருமையை சீக்கிரமாக போக்க சூப்பர் டிப்ஸ்!

nathan