26.2 C
Chennai
Saturday, Dec 21, 2024
1 1535539416
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா ஆண்களின் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்யும் ஜாதிக்காய்…!

உங்களுக்கு தெரியுமா ஆண்களின் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்யும் ஜாதிக்காய்…! சிறிய விதை முதல் பெரிய காய் வரை இந்த பூமியில் உள்ள எல்லா வித உயிரினத்திற்கும் ஒரு பயன்பாடு இருக்கத்தான் செய்யும். பயன்பாடு இல்லாத எந்த ஒரு ஜீவ ராசியும் பூமியில் உயிர் வாழ இயலாது. மனிதன்தான் பெரும்பாலும் பல உயிரினத்தின் பயன்பாட்டை அனுபவித்து கொண்டிருக்கின்றான். உதாரணத்துக்கு ஒரு மரத்தை எடுத்து கொண்டால், அந்த மரத்தின் வேர், இலை, பூ, காய், கனி, விதை, பட்டை, தண்டு இப்படி எல்லாவற்றையும் பயனுள்ள முறையில் மனிதன் பயன்படுத்தி வருகின்றா

அந்த வகையில் அதிக மருத்துவ குணம் மற்றும் அழகு குறிப்புகள் நிறைந்துள்ள இந்த ஜாதிக்காயும் அப்படிதான். இந்த பதிவில் ஜாதிக்காயில் ஒளிந்துள்ள ஆண்களுக்கான முழு பயன்பாட்டை பற்றி தெரிந்து கொள்வோம்.

நலம் தரும் ஜாதிக்காய்..! மற்ற காயை போன்றே ஜாதிக்காயிலும் எண்ணற்ற நன்மைகள் உள்ளது. உடல் ஆரோக்கியம் முதல் முக ஆரோக்கியம் வரை எல்லாவற்றிற்கும் இது நன்மை தருகிறது. பெண்களை காட்டிலும் ஆண்களுக்கே இது பெரிதும் பயன்படுகிறது. விந்தணு குறைபாடு போன்ற பிரச்சினை முதல் முக அழகு வரை ஆண்களின் அனைத்து தேவைக்கும் இது தீர்வாக உள்ளது.

முக அழுக்கை நீக்க… ஆண்கள் எப்போதும் அதிகமாக வெளியில் சுற்றுவதால் அவர்களின் முகம் மிகவும் பாதிக்கப்படுகிறது. வெளியில் உள்ள ஏராளமான தூசுகள், அழுக்குகள் முகத்தில் ஒட்டி கொண்டு முக அழகை பாதிக்கும். இதனை நீக்க இந்த முறையை செய்து பாருங்கள்.

தேவையானவை :- 1 டீஸ்பூன் தேன் 1 டீஸ்பூன் ஜாதிக்காய் தூள் 2 சொட்டு எலுமிச்சை சாறு 2 சொட்டு கிராம்பு எண்ணெய் 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா

செய்முறை :- முதலில் பேக்கிங் சோடா,தேன், கிராம்பு எண்ணெய் ஆகியவற்றை கலந்து கொள்ளவும். அடுத்து அதனுடன் ஜாதிக்காய் தூள், எலுமிச்சை சாறு சேர்ந்து முகத்தில் பூசி 10 நிமிடம் மசாஜ் செய்து, வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். இந்த முறையை வாரத்திற்கு 1 முறை செய்து வந்தால் முகத்தில் அழுக்குகள் சேராமல் இருக்கும்

இளமையான சருமத்தை தரும் ஜாதிக்காய்..! பலருக்கு இளமையான சருமம் விரைவிலேயே போய்விடும். இதற்கு முழு காரணமும் அவர்கள் தங்கள் முகத்தை பராமரிக்காமல் இருப்பதாலேயே நடக்கிறது. முகத்தை இளமையாக வைக்க இந்த அழகு குறிப்பே போதும்.

தேவையானவை :- 1/2 டீஸ்பூன் ஜாதிக்காய் தூள் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு 1 டீஸ்பூன் தேன் 1 டீஸ்பூன் யோகர்ட்

செய்முறை :- ஜாதிக்காய் தூளை முதலில் எலுமிச்சை சாறுடன் கலக்க வேண்டும். அடுத்து அதனுடன் தேன் மற்றும் யோகர்ட் சேர்த்து முகத்தில் பூசி மசாஜ் செய்யவும். முக்கியமாக கண் மற்றும் வாயிற்குள் போகாதவாறு பார்த்து கொள்ளுங்கள். பிறகு குளிர்ந்த நீரில் 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கி தோல் இறுக செய்யும்

முக பருக்களை போக்க… முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் முகத்தில் முகப்பருக்களை உருவாக்குகின்றன. இது ஆண்கள் பெண்கள் என இருவருக்கும் பொதுவாகவே இருக்கும். ஆனால், ஹார்மோன்களின் அதிக படியான மாற்றங்கள் இவற்றை முகத்தில் அதிகமாக ஏற்படுத்தும். இதனை குணப்படுத்த…

தேவையானவை :- 1/2 டீஸ்பூன் ஜாதிக்காய் தூள் 1 டீஸ்பூன் தேன் 1 டீஸ்பூன் பால்

செய்முறை :- முதலில் பால் மற்றும் தேனை நன்றாக கலக்கி கொள்ளவும். அடுத்து அதனுடன் இந்த ஜாதிக்காய் தூளை கலந்து முக பருக்கள் உள்ள இடத்தில பூசவும். 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். இந்த குறிப்பை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் பருக்கள் வந்த இடம் தெரியாமல் மறைந்து போகும்.

முடியின் போஷாக்கிற்கு ஜாதிக்காய்..! நன்றாக முடி வளர வேண்டும் என விரும்புவர்களுக்கு இந்த ஜாதிக்காய் அருமையான தீர்வு. இது முடி கொட்டும் பிரச்சினை முதல் பொடுகு தொல்லை வரை குணப்படுத்த கூடியது. இதனை பெற…

தேவையானவை :- 1/2 டீஸ்பூன் ஜாதிக்காய் தூள் 1 டீஸ்பூன் தேன் 1 டீஸ்பூன் யோகர்ட்

செய்முறை :- ஜாதிக்காய் தூளுடன் முதலில் தேனை கலந்து கொள்ளவும். அடுத்து அவற்றுடன் யோகர்ட் சேர்த்து தலையின் அடி வேரில் நன்கு தேய்த்து மசாஜ் செய்யவும். 15 நிமிடத்திற்கு பிறகு மிதமான சுடு தண்ணிரீலில் சிறிது ஷாம்பு பயன்படுத்தி தலையை அலசினால் முடியின் வளர்ச்சி அதிகரிக்கும். அத்துடன் முடி உதிர்வும் நின்று போகும்.1 1535539416

 

Related posts

உங்களுக்கு தெரியுமா சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் அற்புத பழம்!

nathan

தும்மல் வந்தால் ஒருபோதும் அடக்காதீங்க. : அது இவ்வளவு பிரச்சினைகளைக் கொடுக்குமா…!

nathan

குழந்தை எடை குறைவாக பிறக்க இதெல்லாம் ஒரு காரணமா?…

nathan

தொரிந்து கொள்ளுங்கள்! மெட்டபாலிசத்தை மேம்படுத்தி உடல் எடையை குறைக்க சில எளிய டிப்ஸ்…

nathan

இதயத்தை பலப்படுத்தும் செம்பருத்தி தேனீர்

nathan

மூளைப் புற்றுநோய் பற்றி அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டியவை

nathan

உங்களுக்கு தொியுமா கர்ப்ப காலத்தில் பெண்கள் உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

சு கர் ஃப் ரீ மா த்திரைகளை சாப்பிடும் சர்க்கரை நோயாளிகளே! தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

nathan

மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு வரும் எலும்பு பலவீனம் நோய் – தடுக்கும் வழிகள்

nathan