26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
மருத்துவ குறிப்பு

இவ்வளவு விஷயத்திற்கு பயன்படுத்த முடியுமா முடக்கற்றான் இலையையும், வேரையும் ?????

பயன் தரும் பகுதிகள்: முழுத்தாவரம் உட்பட குறிப்பாக இலை, வேர் என அனைத்துமே பயன்தரும் பகுதிகள் தான்.

பொதுவான தகவல்கள் : முடக்கொத்தான் (முடக்கறுத்தான் Cardiospermum halicacabum) ஒரு மருத்துவ மூலிகைக் கொடியாகும். இது உயரப் படரும் ஏறுகொடி. இலைகள் மாற்றடுக்கில் அமைந்திருக்கும். மலர்கள் சிறிய வெள்ளை நிற இதழ்கள் கொண்டவை. இக்கொடியின் வேர், இலை, விதை ஆகிய அனைத்துமே மருத்துவப் பயன்பாடுடையவை தான்.

முடக்கறுத்தான் என்பது நாம் அன்றாடம் காணுகின்ற ஒரு அற்புதமான மூலிகையாகும். இது வேலியோரம் படர்ந்து வளரும் ஒரு கொடியினத்தை சேர்ந்தது. நாம் அனைவரும் கண்டிருப்போம் ஆனால் அதன் பெயர் தெரியாமல் நிறைய பேர் இருப்பார்கள். இதன் தாவரவியல் பெயர் cardiospermum helicacabum , ஆகும்.

இதன் பெயரிலேயே இது எந்த நோயை குணப்படுத்தும் என்று அறியலாம். ஆம். இது மூட்டு வலி , முடக்கு வாதம் , கைகால் குடைச்சல் ஆகியவற்றை தீர்க்கும். இதன் இலைகளை பறித்து ரசம் வைத்து சாப்பிடலாம். இதன் இலைகளை பறித்து தோசை மாவில் கலந்து தோசையாக ஊற்றி சாபிடலாம்.

இது எளிமையாக நம் கைஅருகில் கிடைக்க கூடிய ஒரு அற்புதமான மூலிகை. நாம் மூட்டு வலி , கை கால் வலி என்று டாக்டரிடம் போவதை விட வாரம் ஒரு முறை இதை சாப்பிட்டாலே எந்த மூட்டு சம்பந்தப்பட்ட நோயும் நம்மை அணுகாது என்பது நிச்சியம்.

முடக்கற்றான் கொடி வகையைச் சேர்ந்தது. இது இந்தியாவிலும், இலங்கையிலும் அதிகமாகக் காணப்படுகிறது. குளிர்ந்த ஈரச்சத்துள்ள இடத்தில் தான் முடக்கற்றான் பயிராகும். தோட்டங்கள், வீட்டு வேலி இவைகளிலுள்ள பெரிய செடிகளின் மேல் படர்ந்து வளரும். உஷ்ண பிரதேசங்களில் முடக்கற்றான் கொடியைப் பார்க்க முடியாது. வளமான இடங்களில் இந்தக் கொடிசற்று பெரிய இலைகளுடன் செழிப்பாகப் படரும். இந்தக் கொடியின் தண்டும் இலைக் காம்பும் மெல்லியதாகவே இருக்கும். இது ஏறுகொடியாக சுமார் 3.5 மீ. அளவு படரும்.

இதன் தண்டு, இலை, காம்பு எல்லாம் நல்ல பச்சை நிறமாகவே இருக்கும். இதன் பூ வெண் நிறமாக இருக்கும். இதன் காய் மூன்று பிரிவாகப் பிரிந்து உப்பலான மூன்று தனித் தனி அறைகளைக் கொண்டதாக இருக்கும். ஒவ்வோர் அறையிலும் ஒரு விதை வீதம் ஒரு காயில் மூன்று விதைகள் இருக்கும்.

காயைப் பறித்துத் தோலை உறித்தால் உள்ளே மிளகளவு, பச்சை நிறமான விதைகள் இருக்கும். அதன் ஒரு பகுதியில் நிலாப்பிறைபோல் ஒரு வெண்ணிறக் குறி தோன்றும்.

இதன் காய் முற்றிய பின் பழுப்பு நிறமாக மாறிக் காய்து விடும். இதை மற்ற கீரைகளுடன் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடலாம். இதை தனியாக மருந்தாகவும் பயன் படுத்தலாம்.

இதன் இலையில் அடங்கியுள்ள சத்துக்கள்:-

ஈரப்பதம்-83.3, புரதச்சத்து-4.7, கொழுப்புச் சத்து 0.6, மாவு சத்து 9.1, தாது சத்து 2.3, சக்தி-6 கலோரி முதலியவை உள்ளது. விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப் படுகிறது.

மருத்துவப் பயன்கள்:

* முடக்கற்றான் இலையைத் தேவையான அளவுகொண்டு வந்து அதைக் காரமில்லாத அம்மியில் வைத்து மை போல்அரைத்து, பிரசவிக்கக் கஷ்டப்படும் பெண்களின் அடிவயிற்றில் கனமாகப் பூசிவிட்டால் கால் மணி நேரத்திற்குள் சுகப் பிரசவம் ஏற்படும். கஷ்டமோ, களைப்போ தோன்றாது. மருத்துவமனை அருகிலில்லாத கிராமங்களில் உள்ள மருத்துவம் பார்க்கும் பெண்களும், பாட்டி மார்களும் இந்த முறையையே கையாண்டு வருகின்றனர். இது கை கண்ட முறையாகும்.

* மூன்று நாட்களுக்கு ஒருமுறை முடக்கற்றான் இரசம் வைத்துச் சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள வாய்வு கலைந்து வெளியேறி விடும். வாய்வு, வாதம்,மலர்ச்சிக்கள் சம்பந்தப் பட்ட எல்லாக் கோளாறுகளும் நீங்கும்.

* கைப்பிடியளவு முடக்கற்றான் இலையைக்கொண்டு வந்து நைத்து ஒரு சட்டியில் போட்டு இதே அளவு வேலிப்பருத்தி இலையையும், சூரத்து ஆவரையிலையையும் இத்துடன் சேர்த்துஇரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு டம்ளராக வடிகட்டிக் காலைவேளையில் மட்டும் தொடர்ந்து மூன்று நாட்களுக்குக் கொடுத்து வந்தால்பாரிச வாய்வு குணமாகும். தேவையானால் மூன்று நாட்கள் இடைவெளிவிட்டு, மறுபடி 3 நாளாக மூன்று முறை கொடுத்து வந்தால், பாரிசவாய்வு பூரணமாகக் குணமாகும்.

* சுக பேதியாக : ஒரு கைப்பிடியளவு முடக்கற்றான் இலையை ஒரு சட்டியில் போட்டு, வெள்ளைப் பூண்டு பற்களில் ஐந்து நைத்து இதில் போட்டு அரைத் தேக்கரண்டி அளவு மிளகை ஒன்றிரண்டாக உடைத்து அதையும் சேர்த்து, இரண்டு டம்ளர் அளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து ஒரு டம்ளர் அளவிற்கு சுண்டக் காய்ச்சிய கஷாயத்தை வடிகட்டி விடியற் காலையில் சாப்பிட்டு விட்டால் பலமுறை பேதியாகும். ஒரு வேளை அதிகமாக பேதியினால் ஒரு எலுமிச்சை பழச்சாறு சாப்பிட்டால் பேதி உடனே நின்று விடும். இரசம் சாதம் மட்டும் சாப்பிடலாம். இரவு தேவையான பதார்த்தம் சாப்பிடலாம். முடக்கற்றான் இலைகளை எண்ணெயில் இட்டுக் காச்சி மூட்டு வலிகளுக்குப் பூசினால் மூட்டு வலி உடனே நீங்கும். இதன் இலையை இடித்துப் பிழிந்து எடுத்த சாற்றினை இரண்டு துளிகள் காதில் விட்டு வர காது வலி,காதில் இருந்து சீழ் வடிவது முதலியவை நீங்கும்.

* முடக்கற்றான் இலையையும், வேரையும் குடி நீரிட்டு மூன்று வேளையாக அறுபது மில்லி வீதம் தொடர்ந்து அருந்தி வர நாள்பட்ட இருமல் குணமாகும்.

* சில பெண்களுக்கு மாதந்தோறும் ஒழுங்காக மாதவிலக்கு ஏற்படாது. இவர்கள் முடக்கற்றான் இலையை வதக்கி அடி வயிற்றில் கட்டிவந்தால் மாத விலக்கு ஒழுங்காக வரும்.

* முடக்கற்றான் கொடி மல மிளக்கி செய்கை உடையது. இதன் கொடியை முறைப்படி குடிநீரிட்டு அத்துடன் ஆமணக்கு எண்ணெய் சேர்த்து அருந்த மலத்தைக் கழிக்கச் செய்யும்.

* முடக்கற்றான் வேரை உலர்த்தி பின்னர் முறைப் படி குடி நீர் அருந்தி வர நாள் பட்ட மூல நோய் குணமாகும்.

* முடக்கற்றான் இலைகள் தடவப்பட்ட இடத்தில் இரத்த ஓட்டத்தினை தூண்டுகிறது. நச்சுப் பொருள்கள் வெளியேறுவதிலும் உதவும். முழுத் தாவரமும் துயில் தூண்டுவியாகும்.

* முடக்கற்றான் இலையின் சாறு தோல் நோய்களுக்கு மேல் பூச்சாக தடவப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி

Related posts

சேர்ந்து வாழ்ந்து இன்பம் காண்பதே இல்வாழ்க்கை

nathan

வீடுகளுக்கு அவசியமான மின்சார பாதுகாப்பு உபகரணம்

nathan

எச்சரிக்கை காலை எழுந்தவுடன் இதை மட்டும் பண்ணீடாதீங்க!

nathan

மூட்டு வலிக்கு உடனடி நிவாரணம் – A home remedy for joint pain

nathan

இரட்டைக் குழந்தைகள் வேண்டுமா? அப்ப இதை முயன்று பாருங்கள்

nathan

வைரஸ் காய்ச்சலை எதிர்கொள்ளும் சில எளிய கிராமத்து வைத்தியங்கள்!

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! உணவுகளால் அலர்ஜி ஏற்பட்டிருப்பதை வெளிப்படுத்தும் சில அறிகுறிகள்!!!

nathan

பன்றி காய்ச்சலின் அறிகுறிகளைப் பற்றி உங்களுக்கு தெரியுமா? தெரிந்து கொள்ள வேண்டிய 15 தகவல்கள்!!!

nathan

இதோ எளிய நிவாரணம்! இந்த அற்புத மூலிகை தேநீர் குடிச்சு பாருங்க…

nathan