நாகரீக வளர்ச்சியின் காரணமாக இன்று வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய படுகின்ற காய்கறிகளை நமது மக்கள் விரும்பி உண்கின்றனர்.
ஆனால் ஆண்டாண்டு காலமாக நமது மண்ணில் விளைகின்ற உடலுக்கு பல சத்துக்களை அளிக்கும் கீரை வகைகளை இன்று குறைந்த அளவிலான மக்களே உண்ணும் நிலை ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. மருத்துவ மூலிகையாக கருதக்கூடிய கீரை வகைகளில் ஒன்று தான் மணத்தக்காளி கீரை. இந்த மணத்தக்காளி கீரையை உண்பதால் ஏற்பட்டும் நன்மைகள் என்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.
மணத்தக்காளி கீரை பயன்கள் :
கருத்தரித்தல் :
திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியும் சில பெண்களுக்கு கருத்தரிக்க முடியாத நிலை இருக்கும். இத்தகைய பெண்கள் தங்கள் உணவில் வாரம் இரண்டு அல்லது மூன்று முறையாவது மணத்தக்காளி கீரையை பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் அவர்களின் கருப்பை பலம் பெரும். அவற்றின் உள் தங்கியிருக்கும் நச்சுக்கள் எல்லாம் வெளியேறி சீக்கிரம் அப்பெண்களை கருத்தரிக்கும் நிலையை உண்டாக்கும்.
மலட்டு தன்மை:
ஆண்கள் பலருக்கும் குழந்தை பிறக்காத நிலை ஏற்பட காரணம் அவர்களின் உயிரணுக்கள் வலிமையின்றி இருப்பதே ஆகும். மணத்தக்காளி கீரையை அவ்வப்போது சாப்பிட்டு வரும் ஆண்களுக்கு உடலில் ஓடும் நரம்புகள் மற்றும் இனப்பெருக்க உறுப்புகளை வலுப்படுத்தி ஆண்களின் மலட்டுத்தன்மையை போக்குகிறது.
புற்றுநோய்:
பல வகையான புற்று நோய்களில் வயிற்று புற்று நோயும் ஒன்று. இந்த புற்று நோய் வயிறு மட்டுமல்லாமல் அதனுடன் தொடர்புடைய குடல், கணையம் போன்றவற்றையும் பாதிக்கும் தன்மை கொண்டது. மணத்தக்காளி கீரையை அதிகளவில் சாப்பிட்டு வருபவர்களுக்கு வயிற்றில் புற்று நோய் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் குறைகிறது.