பப்பாளி பழத்தின் மகத்துவத்தை நாம் அறிவோம்., அதே போல் இஞ்சியின் மகத்துவத்தையும் நாம் அறிவோம். இவை இரண்டையும் சூப் செய்து குடித்தால் உடலுக்கு பல்வேறு விதமான நன்மைகள் ஏற்படும்.
மேலும் வீட்டில் சிறுகுழந்தைகள் இருந்தால் அவர்கள் சிலருக்கு பப்பாளி என்றால் பிடிக்காது., நான் சாப்பிடமாட்டேன் என்று கூறுவார்கள். அந்த பிரச்சனைக்கு இந்த ஆரோக்கியம் நிறைந்த சூப் என்ற முறையில் ஜூஸ் என்று வழங்கினால் நமது குழந்தைகள் எளிதில் அந்த சூப்பை பருகும்.
பப்பாளி – இஞ்சி சூப் செய்ய தேவையான பொருட்கள்:
பப்பாளிப்பழம் – சிறிய அளவில்.,
இஞ்சி – சிறிய அளவிலான துண்டு.,
பெரிய வெங்காயம் – தேவையான அளவிற்கு.,
காய்கறிகள் வேகவைத்த நீர் – 3 கப்.,
மிளகுத்தூள் – காரத்தின் தன்மைக்கேற்ப.,
கொத்தமல்லி தழை – தேவையான அளவு மற்றும்
உப்பு – தேவையான அளவிற்கு..
பப்பாளி – இஞ்சி சூப் செய்யும் முறை:
முதலில் வெங்காயம்., கொத்தமல்லி தழை., இஞ்சி மற்றும் பப்பாளி பழத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும்.
பின்னர் வானெலியில் எண்ணெயினை ஊற்றி எண்ணெய் சூடானதும்., வெங்காயம்., இஞ்சி மற்றும் பப்பாளியை ஒன்றன் பின் ஒன்றாக வதக்கி எடுக்கவும்.
அனைத்தும் சூடு குறைந்த பின்னர்., மிக்ஸியில் அரைத்து அதனை தனியாக எடுத்துக்கொள்ளவும்.
அதற்கு அடுத்த படியாக வேகவைத்த காய்கறி நீருடன்., பப்பாளி – இஞ்சி – வெங்காயத்தின் கலவையை சேர்ந்து தேவையான அளவிற்கு உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவை சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவைத்து சூடாக பருகவும்.