மருத்துவ குணங்கள் நிறைந்த பட்டை பழங்காலத்தில் இருந்தே சமையலிலும் மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பட்டையானது இலவங்கப்பட்டை, அல்லது கருவாப்பட்டை என அழைக்கபடுகிறது. பட்டை சேர்த்த உணவு பொருள்கள் அதிக நறுமணத்துடனும், மருத்துவ குணங்கள் நிரம்பியும் இருக்கும். நல்ல உயர்தரமான பட்டை இலங்கையில் தான் அதிகம் விளைகிறது.
இலவங்கபட்டை என்று அழைக்ககூடிய இது மரத்தின் பட்டைகளிலிருந்து எடுக்கப்படுகிறது. இலவங்க மரத்தின் தண்டுகளை வெட்டுவதன் மூலம் உள்பட்டை பிரிக்கப்பட்டு அவை காய்ந்ததும் இலவங்கப்பட்டை சுருள்களாக குச்சிகளாக உடைக்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது. அதிக வாசனை கொண்ட இதை உணவு பொருள்களில் சேர்க்கும் போது உணவுக்கு சுவை கொடுக்கிறது. மருத்துவ ரீதியாக இவை வளர்சிதை மாற்றத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்று சொல்லலாம்.
வயிற்று பிரச்சனைகளை தீர்க்கும்
பட்டையிலுள்ள பினால் என்ற வேதிப் பொருள் வாய்துர்நாற்றத்தை போக்குகிறது. பட்டையை சளி மற்றும் ப்ளூ காய்ச்சலின்போது மருந்தாகப் பயன்படுத்துகின்றனர். இலவங்கப் பட்டை, வயிறு சம்பந்தமான வயிற்றுப் பொருமல், அஜீரணம், நெஞ்செரிச்சல், வயிற்று வலி என அனைத்துவித நோய்களுக்கும் நிவாரணம் தருகிறது.
வாதம் மற்றும் மூட்டுவலி குணமாகும்
பட்டை இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மேலும் கீல்வாதம், மூட்டுவலி, தசைவலியை சரி செய்யும். அதுமட்டுமல்ல மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும்.
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக்கும்
டைப் 2 சர்க்கரை நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க இலவங்கப் பட்டை உதவுகிறது. மேலும் உடலில் உள்ள இன்சுலின் போதுமான அளவு சுரக்க உதவுகிறது.
ஆன்டிஆக்சிடன்டுகள் நிறைந்தது
ஆன்டிஆக்சிடன்டுகள் ஆக்சிஜனேற்றத்தால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க உதவுகிறது. இலவங்கப்பட்டையில் உள்ள பாலிஃபீனால்களின் ஆக்சிஜனேற்ற எதிர்ப்புப் பண்பில் இது பூண்டை விட அதிக செயல்திறன் கொண்டதாகத் திகழ்கிறது.
உடல் எடை குறைய உதவும்
உடல் எடை குறைவதற்கு இலவங்கப்பட்டை உதவுகிறது. இலவங்கப்பட்டையில் சிறிதளவு நார்ச்சத்து உள்ளது, இது செரிமானத்திற்கும் உடலில் உள்ள நச்சுப்பொருள்களை வெளியேற்றவும் உதவுகிறது.