சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று தான் பிரியாணி. இன்று எல்லோருடைய விருப்ப உணவாகவும் பிரியாணி மாறிவிட்டது.
காலை, மதியம், இரவு, நடு ராத்திரி என எப்போது பிரியாணி கொடுத்தாலும் சாப்பிடும் அளவுக்கு பிரியாணியின் மீது பிரியம் கொண்டவர்கள் ஏராளம். இருப்பினும் இதனை இரவு நேரத்தில் சாப்பிட கூடாது என்று பலரும் கூறுவதுண்டு.
ஏனெனில் இது சில பக்கவிளைவுகளை ஏற்படுத்துகின்றது. தற்போது அவை என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
அதிக கலோரிகள் கொண்ட பிரியாணியை இரவில் சாப்பிடும் போது உயர் ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.
அரிசி, இறைச்சி ஆகிய அனைத்தும் சேர்த்து வயிறு நிறைய சாப்பிடும்போது ஜீரணம் மிக மெதுவாக நடக்கும். இதனால் அஜீரணக் கோளாறு ஏற்படுவதோடு அடுத்த நாள் காலை வரை உடலும் மிகச் சோர்வாகவே இருக்கும்.
இரவு நேரங்களில் பிரியாணி போன்ற ஹெவியான உணவுகளைச் சாப்பிடுவதனால் அடுத்த நாள் காலையில் உடலும் சோர்வாக இருக்கும். வயிறும் காலியாக இருக்காது. அதனால் பசியின்மை பிரச்சினை உண்டாகும். பசியின்மை பிரச்சினையால் காலை நேர உணவு தவிர்க்கப்படும்.
இரவு நேரத்தில் இறைச்சி, நெய், கார்போஹைட்ரேட் நிறைந்த அரிசி ஆகியவற்றைச் சேர்த்து சமைக்கப்படுகிற பிரியாணி இயல்பாகவே கலோரிகள் அதிகமாக இருக்கும். அதிக கலோரி அளவை எடுத்துக் கொள்ளும் போது உடலில் கெட்ட கொலஸ்டிராலின் அளவும் அதிகரிக்கும்.
இரவில் தொடர்ந்து பிரியாணி சாப்பிட்டால் ஜீரண சக்தி குறைந்து மெட்டபாலிசம் பாதிக்கப்படும். இதனால் வயிறு உப்பசம், ஃப்ளோட்டிங், பெருங்குடலில் அழற்சி. இரைப்பை அழற்சி போன்ற பிரச்சினைகள் உண்டாகும்.
பிரியாணி சேர்க்கப்படும் அதிகப்படியான மசாலாவால் வயிற்றுப்புண் போன்ற குடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
இரவில் பிரியாணி போன்ற அதிக கலோரி நிறைந்த கொலஸ்டிரால் அதிகமுள்ள உணவுகள் எடுத்துக் கொள்வதைத் தவிர்த்திடுங்கள்.