இரத்த சோகை உள்ளவர்கள் இரத்தம் விருத்தியாக்க போதிய ஊட்டம் மிகுந்த உணவுகளை உண்டாலே போதும். அவை எந்தவகை உணவுகள் என்று பார்க்கலாம்.
இரத்த சோகையை குணப்படுத்தும் உணவுகள்
இரத்தம் குறைவது போதிய அளவு ஊட்டச்சத்து சாப்பிடாததும் வளர்சிதை மாற்றக் கோளாறுகளும் காரணமாகும். இரத்தம் சுத்தகரிக்காமல் இருந்தாலும் இரத்த உற்பத்தி குறைந்து போகும்.
இதனால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக்கோளறுகள் போன்றவை உண்டாகலாம். இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி? இரத்தத்தை விருத்தி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.
முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.
இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது.
இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமாகும். இரத்த சிவப்பணுக்கள் அதிகமாகும்.
நாவல் பழத்தை தினமும் சாப்பிட்டால் இரத்தம் விருத்தி உண்டாகும். நினைவாற்றல் பெருகும்
தக்காளிப்பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.
வாரம் இருமுறை பீட்ரூட் ஜூஸ் மற்றும் பொரியல் சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.
அடிக்கடி உணவில் மட்டன் மண்ணீரலை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் விருத்தியாகும்.
தேனில் பேரீச்சம்பழத்தை ஊறவைத்து அதை தினமும் காலையில் 3 அல்லது 4 பழங்களை சாப்பிட்டு வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம். அல்லது தினமும் வெறும் பேரீச்சம்பழத்தை 10 எண்ணிக்கையில் சாப்பிட்டு வந்தாலும் நல்ல பலனை காணலாம்.