26.2 C
Chennai
Saturday, Dec 21, 2024
ld3817
ஃபேஷன்

இனி பெண்களும் லுங்கி அணியலாம்!

ஃபேஷன்

‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தின் ‘லுங்கி டான்ஸ்’ பாடல், ‘மான் கராத்தே’ படத்தின் ‘டார்லிங்கு டம்பக்கு’ பாடலில் ஹன்சிகாவின் லுங்கி டான்ஸ்… இதோ அடுத்தகட்ட விளைவு. திருப்பூர் நிஃப்ட் காலேஜ் ஆஃப் நிட்வேர் ஃபேஷன் மாணவிகளின்
முயற்சியில் லுங்கிக்கு இப்போது யுனிவர்சல் அங்கீகாரம்!

ஆண்களால் ரிலாக்ஸாக மட்டுமே அணியப்பட்டு வந்த லுங்கி, இப்போது பெண்களின் கைகளில் எக்கச்சக்க அவதாரங்கள் எடுத்துள்ளது. லுங்கியில் விதம் விதமான பேன்ட், டாப்பாக அணிந்து ெகாள்ள அந்தக்கால சல்வார் முதல் இந்தக்கால ஷார்ட் டாப் வரை விதம் விதமாக வடிவமைத்து அசரடித்து இருக்கிறார்கள். ‘அதுக்கும் மேலே’ யோசித்து லுங்கியில் ஃபிஷ் கட் உள்ளிட்ட பார்ட்டி வியர், பிரைடல் கார்மென்ட்ஸ் என லுங்கியில் இவ்வளவு டிசைன்களா என மெய்சிலிர்க்க வைத்திருக்கின்றனர்!

‘லுங்கி தயாரிப்பு நிறுவனங்கள் முன்வந்தால், சர்வதேச அளவில் புதிய உடை வகைகளை உருவாக்கி மார்க்கெட்டிங் செய்யலாம். இது மிகப்பெரிய சாதனைப் பயணத்துக்கான ஸ்டார்ட்டிங் பாயின்ட்’ என்கின்றனர் லுங்கியைப் பிரித்து மேய்ந்து கிறுக்குத்தனமான கிரியேட்டிவிட்டிக்கு சவால் விட்டு சாதித்திருக்கும் இந்த ஃபேஷன் பிசாசுகள்!

‘லுங்கியில் எதையாச்சும் புதுசா யோசிக்கலாமே’ என்று கொளுத்திப் போட்டது டிசைனிங் எக்ஸ்பெர்ட் பூபதி விஜய். ஏன் இந்த கொலவெறி என பூபதியிடம் கேட்டோம். ”நம்ம ஊரைப் பொறுத்தவரை லுங்கி இரவு உடை. இரவை மட்டுமே பார்த்த லுங்கி இனி பகலிலும் வலம் வரும் பார்ட்டி வேராக மாறப் போகுது. தென்னிந்திய அளவில் தேடிப் பிடித்ததில் லுங்கியில் பல டிசைன்கள் கிடைத்தன. ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாடர்ன் உடைகளை லுங்கியில் யோசிக்கச் சொன்னேன்.

அப்படிக் கிடைத்ததுதான் இந்த வெற்றி. லுங்கியை வைத்து புதுவிதமாக உடைகள் தயாரிக்கும் போது அதன் மதிப்பு கூடுகிறது. மிகக்குறைந்த செலவில் புதிய உடைகளை உருவாக்கலாம். அணியவும் சாஃப்டாக இருக்கும். பராமரிப்பதும் எளிது. இன்றைய இளைஞர்களின் விருப்பத்துக்கும் ஈடுகொடுக்கும். இதற்கு சர்வதேச அளவில் மார்க்கெட் உருவாக்கலாம். லுங்கி மார்டன் உடையாக அவதாரம் எடுக்கும் வரை கடக்கும் பயணத்தில் பல பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க முடியும். லுங்கி டிசைனர் உடைகள் அறிமுகப்படுத்தப்பட்ட உடனே, பலதரப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. விரைவில் லுங்கி பெண்கள் உடையாக எங்கும் அவதரிக்க உள்ளது” என்கிறார் பூபதி.

”லுங்கி ரொம்ப சாஃப்ட். அணிந்து கொள்ள இதமானது. டாப்புடன் வேஸ்ட் கோட் சேர்த்து அணிவது போல வடிவமைத்தேன். இதுபோன்ற லுங்கி மிக்சிங் உடைகளுக்கு வரவேற்பு நன்றாகவே இருக்கும். தயாரிப்புச் செலவு குறைவு. யாரும் எளிதில் வாங்கி அணிந்து கொள்ள முடியும். யூத் டிரெண்டையே அலேக்காக மாற்றும் அற்புத வித்தை லுங்கிக்கு இருக்கு. உள்நாட்டில் மட்டும் இல்லாம சர்வதேச அளவில் அந்தந்த நாடுகளில் கலாசாரத்துக்கு ஏற்ற புது வித உடைகளில் புதுமை செய்யலாம். புதுசா யோசிக்கிறவங்களுக்கு நிறைய கான்செப்ட் கிடைக்கும்” என்கிறார் அர்ச்சனா.

லுங்கியில் கேதரிங் பேன்ட் வடிவமைத்திருக்கிறார் நந்தினி. ”இப்படியொரு கலக்கல் ஐடியா பயங்கர எனர்ஜிடிக்கா இருக்கு. இப்போ எதையும் கிறுக்குத்தனமா யோசிக்கணும்… சீக்கிரம் போரடிச்சிடாம இருக்க மறுபடி மறுபடி புதுமைகள் செய்யணும். டிசைனிங்கில் புதுசா யோசிக்க லுங்கி வசமாக சிக்கியது எங்கள் கையில். இது நம்ம நேட்டிவிட்டியோட அடையாளம். ஈசியா உற்பத்தி செய்யவும் முடியும். குழந்தைகள், சிறுவர்கள், டீன் ஏஜ், சீனியர் சிட்டிசன்… இப்படி வயதுக்கு ஏற்ற புதுவித உடைகள் லுங்கியில் பின்னியெடுக்கப் போறோம்” என்கிறார் நந்தினி. லுங்கியை வைத்து பிரித்வி செய்திருப்பது பிரைடல் டிரஸ்.

”பிரெஞ்சு பிரைடல் டிரஸ்ஸில் லுங்கியை அங்கங்கே டிசைன் செய்தேன். இன்டர்நேஷனல் லெவல் பார்ட்டி வேர்களை இதில் டிசைன் செய்ய முடியும். கண்டிப்பாக ஹிட் ஆகும். இதுவரை கிராமப்புற உடையாகவே பார்க்கப்பட்ட லுங்கி பத்தின மைண்ட்செட்டையே மாற்றி விட்டது இந்த கான்செப்ட். வித்தியாசமான வண்ணங்கள் மற்றும் டிசைன்களை லுங்கியில் கொண்டு வர முடியும். இது இன்னும் பல உயரங்களை கண்டிப்பா எட்டும். லுங்கி நிறுவனங்களுக்கும் புது வாய்ப்பு கிடைக்கும்” என்கிறார் பிரித்வி.

”எனக்கென்னவோ காலம் காலமா ஆணுக்கான உடையாகவே பார்க்கப்பட்ட லுங்கியில், பெண்களுக்கான உடைகளை உருவாக்கியிருப்பது ஆணாதிக்கத்தையே உடைத்த மாதிரி இருக்கு” என்று தொடங்குகிறார் அபிநயா, ”முதலில் நான் அழகா இருக்கணும்… என்னைச் சுற்றியிருக்கும் உலகமும் அழகாயிருக்கணும். இதுதான் என்னோட சிம்பிள் கான்செப்ட். லுங்கியை எங்க கையில் கொடுத்தப்போ அதில் ஃபெமினிசத்தோட அடையாளத்தையும் பார்த்தேன். ஆண்மைக்குள்ளும் பெண்மை இருக்குன்னு கவிதைல சொல்வாங்களே. அதுபோலத்தான் இதுவும். லுங்கியை ஆண்கள் மட்டும்தான் அணியணுமா? லுங்கி பெண்கள் கைக்கு மாறினால் கிராமப்புற பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இதில் எம்ராய்டரி உள்ளிட்ட கை வேலைப்பாடுகளை சேர்க்கும் போது ரிச் லுக் கொடுக்க முடியும். பெண்கள் உலகத்தை உள்ளும் புறமும் மாற்றிப் போடும் வித்தை இந்த கான்செப்ட்ல இருக்கு” என்கிறார் அபிநயா. ”லுங்கி என்பது இரவு மற்றும் ஆண்கள் சம்பந்தப்பட்ட உடையாகத்தான் இருந்து வந்தது. லுங்கியில் மாடர்ன் டிரஸ் வடிவமைத்தாலும் மிகக்குறைந்த விலையில் கிடைக்கக்கூடியதாக இருக்கும். எல்லாப் பெண்கள் உடையிலும் லுங்கியை கலந்து கட்டி டிசைன் பண்ணலாம். ெதாழில் முனைவோர் அவதாரம் எடுக்கிற பெண்களுக்கும் இது வரமா அமையும்” என்கிறார் ரம்யா. உடுத்தித்தான் பார்ப்போமே!ld3817

Related posts

எப்போதும் மவுசு குறையாத காட்டன் சர்ட்டுகள்

nathan

டிசைனர் சேலையை வேறு பயன்பாடுக்கு மாற்ற முடியுமா?

nathan

சேலை…சல்வார்…சிருங்காரம்!

nathan

ஜீன்ஸிற்கு ஏற்ற பொருத்தமான டாப்சை தேர்ந்தெடுப்பது எப்படி?

nathan

ஆடைக்கேற்ற அழகான காலணிகள்

nathan

மருதாணி அதிகம் சிவப்பாக பிடிக்க சூப்பர் டிப்ஸ்….பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

‛புடவை எப்பவும் பெஸ்ட் சாய்ஸ்!’ – ராதிகாவின் ஸ்டைல் சீக்ரெட்

nathan

உங்க ராசிக்கு எந்த ராசிக்கல் போட்டா அதிர்ஷ்டம் தெரியுமா?இதை படியுங்கள்

nathan

ஹேண்ட்பேக் பயன்படுத்தும் பெண்களுக்கு ஆரோக்கிய அறிவுரைகள் இவை…

sangika