milk 1
ஆரோக்கிய உணவு

இந்த பிரச்சனை இருக்குறவங்களாம் பால் குடிக்கக்கூடாதாம்..

பால் குடிப்பது நமக்கு நல்லது என்றும், தினமும் பால் குடித்தால் பலம் கிடைக்கும் என்றும் சிறுவயதிலிருந்தே பெற்றோர்கள் சொல்லிக் கொண்டிருப்பது பற்கள் உருவாக உதவுகிறது. பாலில் வைட்டமின் ஏ, வைட்டமின் கே, வைட்டமின் பி12, தயாமின் மற்றும் நிகோடினிக் அமிலம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன, இவை அனைத்தும் உடலுக்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்கள்.

இது மலச்சிக்கல், மன அழுத்தம், தூக்கமின்மை, உடல் சோர்வு மற்றும் பலவீனம் போன்ற பிரச்சனைகளை போக்க கூடியது.இருப்பினும், இது போன்ற சத்துக்கள் நிறைந்த பால் சிலருக்கு தீங்கு விளைவிக்கும்.எனவே பால் குடிக்கவும்.யாரை தவிர்க்கலாம் என்று பார்க்கலாம்.

கொழுப்பு கல்லீரல் பிரச்சனை
கொழுப்பு கல்லீரல் பிரச்சனையைக் கொண்டவர்கள் பால் குடிக்கக்கூடாது. ஏனெனில் இத்தகையவர்களால் பாலை எளிதில் செரிமானம் செய்ய முடியாது. மேலும் கொழுப்பு கல்லீரல் பிரச்சனையைக் கொண்டவர்கள் குறைவான அளவிலேயே புரோட்டீன் உணவுகளை உண்ண வேண்டும். பாலில் புரோட்டீன் அதிகளவில் இருப்பதால், இது அஜீரண கோளாறு, அசிடிட்டி, உடல் சோர்வு, உடல் பருமன் போன்ற பிரச்சனைகளையும் உண்டாக்கும்.

வாய்வு தொல்லை

பாலில் லாக்டோஸ் உள்ளது. இது சில சமயங்களில் செரிமானத்தை பாதிக்கலாம். இதன் காரணமாக, அதிகளவு பால் குடிப்பதால் சிலருக்கு வயிற்றுப்போக்கு, வயிற்று உப்புசம் அல்லது வாய்வு தொல்லை போன்றவற்றை உண்டாக்கலாம். ஆகவே ஏற்கனவே வாய்வு பிரச்சனையால் சிரமப்படுபவர்கள் பால் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

அலர்ஜி

பாலில் உள்ள லாக்டோஸ் காரணமாக சிலருக்கு அலர்ஜி பிரச்சனைகள் ஏற்படும். இது நோயெதிர்ப்பு மண்டலத்தையும் பாதிக்கும். இதன் காரணமாக சருமத்தில் அரிப்பு, சொறி சிரங்கு, சுவாசிப்பதில் சிரமம் அல்லது உடலில் வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். ஆகவே யாருக்காவது அலர்ஜி பிரச்சனை இருந்தால், பால் குடிப்பத்தை தவிர்ப்பதே நல்லது.

உடல் பருமன்

உடல் பருமனால் அவதிப்படுபவர்கள், குறைவான அளவிலேயே பாலை குடிக்க வேண்டும். ஏனெனில் பாலில் கொழுப்பு அதிகமாக உள்ளது. அதிகளவு பாலைக் குடித்தால் உடலில் கொழுப்புக்கள் அதிகம் தேங்கி, உடல் பருமனை இன்னும் அதிகரிக்கும்.

சரும பிரச்சனைகள்

அதிகளவிலான பாலைக் குடிப்பது சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதுவும் இது முகப்பருக்கள் அதிகம் வருவதற்கான வாய்ப்பை அதிகரித்து, முக அழகையே பாழாக்கும். எனவே உங்களுக்கு ஏற்கனவே அதிக முகப்பருக்கள் வருமாயின், பால் அதிகம் குடிப்பதைத் தவிர்ப்பதே நல்லது.

பிற பிரச்சனைகள்

மேற்கூறிய பிரச்சனைகளைத் தவிர, மஞ்சள் காமாலை, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளைக் கொண்டவர்கள் அல்லது மூட்டு வீக்க பிரச்சனையைக் கொண்டவர்கள், பால் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். அதிகளவிலான பால் குடிப்பதால், சிலர் கல்லீரலில் வீக்கம் ஏற்படுவதாக கூறுகின்றனர். அதோடு நார்த்திசு கட்டி பிரச்சனைகளையும் சந்திக்கலாம் என்று கூறுகின்றனர். ஆகவே அதிகளவில் பால் குடிப்பதைத் தவிர்த்திடுங்கள்.

Related posts

தொப்பை வர காரணமே காலையில் செய்யும் இந்த விஷயங்களால் தான் தெரியுமா?

nathan

எதற்காக நண்டு சாப்பிட வேண்டும்? 10 காரணங்கள்

nathan

இது பல மருத்துவப்பலன்களை வழங்கக்கூடிய ஒன்றாகும்……

sangika

கேன் தண்ணீரில் இவ்வளவு ஆபத்தா? WHO ரெட் அலர்ட்

nathan

உங்களுக்கு தெரியுமா உணவை கையால் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

nathan

சுவையான மசாலா பிரட் உப்புமா

nathan

உங்களுக்கு ஒரே வாரத்தில் இரத்தத்தை சுத்தம் செய்ய வேண்டுமா?அப்ப தினமும் செய்யுங்க…

nathan

கர்ப்பிணிகளுக்கு உகந்த, கால்சியம் நிறைந்த தேங்காய் – பீட்ரூட் ஜூஸ்

nathan

செரிமானக் கோளாறுகளை சீராக்கும் வரகரிசி மோர் கஞ்சிtamil recipes

nathan