உடலின் சீரான இயக்கத்திற்கு பல வகைகளில் பணிபுரியும் முதன்மை உடல் உறுப்புகளில் ஒன்று கல்லீரல். மனித உடல் உறுப்புகளிலேயே மிகப் பெரிய உடலுறுப்பும் கல்லீரல் தான். உடலில் உணவு செரிமானமாக இது பெருவாரியாக உதவுகிறது.
பித்தநீர் சுரக்கவும், ஏனைய சில தனிமங்கள், உயிர்ச்சத்துக்கள், கொழுப்பு, சில இயக்குநீர்கள் போன்றவற்றைச் சேமித்து வைக்கவும், உட்கொள்ளும் உணவைச் செரித்து ஆற்றலை உருவாக்கவும், சுரப்பிகளைச் செயல்பட வைக்கவும், காயங்களை ஆற்றவும், இரத்தத்தை உறைய வைக்கவும் தேவையான புரதங்களையும், வேறு பல நொதியங்களையும் உற்பத்தி செய்யவும் கல்லீரல் உதவுகிறது.
இவ்வளவு முக்கியமான உடல் உறுப்பான கல்லீரலை, நீங்கள் சாமானியமாக நினைக்கும் சில உணவுகள் சீர்குலைத்து விடுகிறது…
குளிர் பானங்கள் குளிர் பானங்களில் சேர்க்கப்படும் செயற்கை இனிப்பூட்டிகள் மூலமாக தான் பிரச்சனை ஆரம்பிக்கிறது. பெரும்பாலான குளிர் பானங்களில் கார்பனேற்றப்பட்டவையும் ஆகும் (கார்பன்டை ஆக்சைடு). இவை இரண்டுமே கல்லீரலின் நலனுக்கு தகுந்தது அல்ல. அதிலும் சில செயற்கை இனிப்பூட்டிகள் உடலில் நச்சுத்தன்மையை அதிகரிக்கும் வல்லமை கொண்டதாகும்.
பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகள் பேக்கேஜ் செய்து விற்கப்படும் பெரும்பாலான உணவுப் பொருட்களில் ட்ரான்ஸ் கொழுப்பு இருக்கிறது. இது, கல்லீரலுக்கு மட்டுமின்றி மனிதர்களின் உடல் நலத்திற்கும் நல்லது அல்ல. நீங்கள் அன்றாடம் சாப்பிடும் சிப்ஸ் உங்களது கல்லீரலுக்கு பகைவன் என்பதை நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
உப்பு உப்பு அதிகமாக உட்கொள்வது கல்லீரலில் கொழுப்பு சார்ந்த நோய்கள் உருவாக காரணம் ஆகிவிடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஜங்க் ஃபுட்ஸ் இன்றைய சமுதாயம் இந்த ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிடுவதை கௌரவமாக கருதிகிறது. ஆனால், அவை நமது உடல்நலத்திற்கு கேடு விளைவிப்பவை என அறிந்துக்கொள்ள மறுக்கிறது. பெரும்பாலும் ஜங்க் ஃபுட்ஸ் நமது உடலில் கல்லீரலை தான் அதிகம் பாதிக்கிறதாம்.
உடல் பருமன் பெரும்பாலும் உடல் எடை அதிகமாக இருப்பவர்களுக்கு கல்லீரல் பாதிப்பு அதிகமாக வைப்புகள் இருக்கிறதாம். எனவே, உடல் எடை அதிகமாக இருப்பவர்கள், ஆரோக்கியமான மற்றும் கொழுப்பு குறைந்த உணவுகள் உட்கொண்டு உடல் எடையை குறைக்க வேண்டியது அவசியம்.
வைட்டமின் ஏ வைட்டமின் ஏ சத்து உடலில் அதிகப்படியாக சேர்வதாலும் கூட கல்லீரல் பாதிப்படையும். எனவே, அனைத்து ஊட்டச்சத்தும் கிடைப்பது போன்று உணவு சாப்பிட வேண்டியது அவசியம்.
சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை நன்கு வெள்ளையாக வேண்டும் என்று நாம் இப்போது சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை தான் காசு, பணம் பாராமல் வாங்கி உணவில் சேர்க்கிறோம். ஆனால், நிபுணர்கள் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கை செய்கின்றனர். பால், காபி, தேநீர் போன்றவற்றில் இதை கலந்து பருகும் போது கல்லீரலுக்கு பாதிப்பு ஏற்படுகிறதாம்.