28.6 C
Chennai
Tuesday, Nov 5, 2024
14 4india
ஆரோக்கியம் குறிப்புகள்

இந்தியனாக இருப்பதில் பெருமை கொள்ளச் செய்யும் 10 முதன்மையான விஷயங்கள்!!!தெரிஞ்சிக்கங்க…

ஆம், நம்மிடம் அனைத்து மதங்களும் உள்ளன! ஆம் நம்மிடம் மிகவும் அதிகமான மக்கள் தொகை உள்ளது! ஆம் நமக்கு தீவிரவாதம் என்பது மிகவும் பரிச்சயமான அனுபவ வார்த்தை தான்! ஆனால், இவையெல்லாம் தான் இந்தியாவா!? இந்தியனாக நான் இருக்க பெருமைப்படும் சிறப்புகள் வேறு ஏதேனும் உள்ளனவா? 68-வது சுதந்திர தினத்தை கொண்டாடப் போகும் இந்த பொன்னான தருணத்தில் மேற்கண்ட கேள்விகள் ஏன் எழுகின்றன? இவற்றுக்கெல்லாம் என்னென்ன பதில்கள் உள்ளன நம்மிடம்!

 

அவநம்பிக்கைவாதிகள் வேண்டுமானால் இந்தியா ஒரு பிரச்சனைகளின் தேசம் என உங்களை நம்பச் செய்யலாம்! ஆனால், இந்தியா நாடு இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது. இது உண்மைக்கு மாறான கருத்தாகத் தோன்றினாலும், இவ்வாறான பிரச்சனைகளுக்கெல்லாம் மீறிய ஒரு அபாரமான சக்தியாக உள்ளது என்றால் – அதை யாராலும் மறுக்க முடியாது! இப்படி இந்தியாவின் மீது நம்பிக்கை வைக்கச் செய்யும் 10 விஷயங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் – இந்தியனாக இருப்பதில் பெருமை கொள்ளுங்கள்.

மிகப்பெரிய ஜனநாயகம்

உலகிலேயே மிகவும் பெரிய ஜனநாயக நாடு எது என்றால் அதற்கு பதில் இந்தியா என்பது தான். உலகின் மிகவும் சக்தி வாய்ந்த நாடுகளில் ஒன்றாக அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அதிபரை தேர்ந்தெடுக்க ஓட்டளிப்பவர்களின் எண்ணிக்கையை விட, இந்தியப் பிரதமரை தேர்ந்தெடுக்க ஓட்டளிப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமானது. இங்கு வசிக்கும் 18 வயது வந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் தனக்கான அரசாங்கத்தை தேர்தெடுக்கும் உரிமையும், அதை ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் மாற்றியமைக்கும் உரிமையும் உள்ளது.

தகவல் தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் பொருளாதார சக்தி

சில பல ஆண்டுகளாகவே, பல்வேறு துறைகளில் இந்தியா ஒரு உலகளாவிய ‘சூப்பர் பவர்’ நாடாக வளர்ந்து வருகிறது. அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இந்தியா அடைந்துள்ள வளர்ச்சியும், அதன் மூலம் இந்தியாவின் நடுத்தர மக்கள் அடைந்துள்ள பயன்களும் இந்தியாவை இவ்வகையில் பெருமை கொள்ளச் செய்துள்ளன. இந்த துறைகளில் பல்வேறு சாதனைகளையும் உடைத்தெறிந்து உச்சத்திற்கு சென்றுள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.

மாறுபட்ட இயற்கையமைப்பு

மிகச்சிறந்த சுற்றுச்சூழலை இயற்கை அன்னை இந்தியாவிற்கு வழங்கியிருக்கிறாள் என்றால் அது மிகையாகாது. இந்தியாவின் நிலப்பகுதிகளில் மலைகள், கடற்கரைகள், காடுகள், பாலைவனங்கள் ஆகியவை காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும் பரந்து கிடக்கின்றன. நமது தமிழ் நாட்டிலும் கூட குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை ஆகிய ஐவகை நிலங்களும் உள்ளன. இந்தியாவின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு பயணம் மேற்கொள்வது இந்த பல்வகை இயற்கையமைப்புகளையும் காண உதவும்.

கலாச்சாரங்களும், மொழிகளும்

இந்தியாவின் கலாச்சார பாரம்பரியம் மற்ற எல்லா நாடுகளையும் விட மிஞ்சியது மற்றும் விஞ்சியது என்றால் அது மிகவும் குறைவான பாராட்டு எனலாம். இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திற்கு ஒரு பாரம்பரியமும், பழக்க வழக்கங்களும் உள்ளன. இந்தியாவின் இந்த மாறுபாட்ட கலாச்சாரங்களுக்குள் சென்று வரும் பயணம் ஒரு ஆத்மார்த்தமான ஆன்மீக பயணமாகவே இருக்கும்.

இந்திய உணவுகள்

உலகின் பல்வேறு நாடுகளிலுள்ள உணவு வகைகளைப் போலவே இந்தியாவிலும் தனித்தன்மையான பல உணவு வகைகள் உள்ளன. இந்தியா கலாச்சாரங்களின் தொடர்ச்சியாகவே இந்த உணவுப் பழக்கங்கள் உள்ளன. மாறுபட்ட கலாச்சாரங்களை உடைய மக்கள் அனைவருக்கும் தனியான உணவு வகைகளும், பதார்த்தங்களும் உள்ளன இந்தியாவில்!

இந்திய இராணுவம்

உலகின் மூன்றாவது பெரிய இராணுவப் படையைக் கொண்டுள்ள நாடாக இந்தியா உள்ளது. இந்தியா இராணுவத்தில் 10 இலட்சம் பேர் பணி புரிகின்றனர். எந்தவிதமான அரசியல் சக்திகளுக்கும் அப்பாற்பட்ட இந்திய இராணுவ அமைப்பு, உண்மையான தொழில்முறைத்துவத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

கூட்டுக் குடும்பம்

உலகின் மற்ற பகுதிகளிலிருந்து இந்தியாவை வேறுபடுத்திக் காட்டும் அம்சமாக இது உள்ளது. முதன்மையான மெட்ரோபாலிடன் நகரங்களிலும் கூட கூட்டுக் குடும்ப முறை இன்னும் நடைமுறையில் உள்ளது. இந்த குடும்பங்களில் பெரியவர்கள் இல்லாமல் வாழ்வது இன்னும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இதன் காரணமாகவே இந்தியக் குடும்பங்களின் பிணைப்பு மிகவும் அதிகமாக உள்ளதாக உலகளவிலும் பேசப்படுகிறது.

கல்விக்கு முக்கியத்துவம்

மிகவும் அரிதான தொலைதூர பிரதேசங்களிலும் கூட அரசு பல்வேறு நிறுனங்களை ஏற்படுத்தி கல்வியளித்து வருகிறது. இந்திய அரசின் கொள்கைகள் வறிய நிலையில் உள்ள மக்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இலவசக் கல்வியை அளித்து வருகிறது.

அதிதி தேவோ பவா

“இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு” என்னும் திருக்குறள் தான் இந்தியாவின் பண்பாடு. இந்தியாவில் பல்வேறு மதத்தினரும் வாழ்ந்து வந்தாலும், விருந்தோம்பல் என்பது இந்நாட்டின் சிறப்பான அம்சமாகும். விருந்தினர்களை முகமலர்ந்து உபசரிக்கும் ‘அதிதி தேவோ பவா’ என்ற கருத்து இந்தியாவின் அனைத்து மக்களின் இதயங்களிலும், மத, இன வேறுபாடுகளைக் கடந்து நின்று கொண்டுள்ளது.

இந்தியப் பெண்கள்

நவீன இந்தியாவின் பெண்கள் வேட்கை மிக்கவர்களாகவும், வேலை செய்யும் குறிக்கோளைக் கொண்டவர்களாகவும் உள்ளார்கள். ஆனால், தங்களுடைய குடும்பத்தையும், திருமண உறவின் சாராம்சத்தையும் மதிப்பவர்களாகவும் உள்ளார்கள்.

இந்தியாவின் பட்டிதொட்டியெங்கும் பரவியிருக்கும் ஊழலைக் கொண்டு மட்டும் அதை மதிப்பிடுவதென்பது சரியான அளவீடாக இருக்காது. இந்தியாவின் குடிமகனாக நாம் பெருமை கொள்வதற்கு, எண்ணற்ற விஷயங்களை இந்தியா நமக்கு அளித்துள்ளது என்பது உண்மை.

இதுப்போன்று சுவாரஸ்யமான வேறு தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்…

Related posts

மூலிகை ரகசியம் – 20.. ஆரோக்கியம் தரும் ஆலமரம்… பற்களின் வலிமைக்கு உரம்…

nathan

சுவையான ஆப்பிள் பஜ்ஜி

nathan

எந்த ராசிக்கல் போட்டா நல்லது நடக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? தெரிஞ்சிக்கங்க…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…30 வயது ஆகியும் திருமணம் செய்யாமல் இருக்கீங்களா? ஆண்கள் படிக்க வேண்டாம்!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மற்றவர்களிடம் இதெல்லாம் கடனா வாங்காதீங்க!

nathan

பற்களில் உள்ள கறைகள் நீங்க வேண்டுமா?அப்ப தினமும் செய்யுங்க…

nathan

முகத்தில் உள்ள கருமையை நீக்க வேண்டுமா? இதோ எளிய நிவாரணம்

nathan

சளி , காய்ச்சல் , இருமல் குணமாக சூப்பர் டிப்ஸ்….

nathan

useful tips.. மருதாணியை இப்படி பயன்படுத்தினால் இத்தனை நன்மைகளை அளிக்குமா?

nathan