வாழ்க்கையில் நம்பிக்கை என்பது மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நம்பிக்கை இல்லாவிட்டால் நம் மனதில் எதிர்மறை சிந்தனைகள் குடியேற ஆரம்பித்து விடும். இதனால் மன அழுத்தம், பயம் போன்ற பல இன்னல்கள் வர ஆரம்பித்து விட வாய்ப்பு உள்ளது. எனவே உங்க வாழ்க்கையின் தரத்தை உயர்த்த வேண்டும் என்றால் அதற்கு நேர்மறையான சிந்தனைகள் இருக்க வேண்டியது அவசியம். நேர்மையாக சிந்திக்கும் போது மட்டுமே வாழ்க்கை இன்பகரமாகவும் திருப்தியாகவும் இருக்கும். நேர்மறை ஆற்றல் நீங்கள் நினைக்கும் அனைத்தையும் நடத்தி வைக்க கூடியது. நேர்மறை எண்ணம் உங்களுக்கு நோயெதிரிப்பு சக்தியை கொடுப்பதிலிருந்து மன அழுத்தத்தை போக்கும் வரை நமக்கு கை கொடுக்கிறது.
இது உங்க சமாளிக்கும் திறனை மேம்படுத்த உதவும். கடந்த கால சவால்களை நகர்த்துவதற்கு உதவும். சவால்களை எதிர்கொள்ளும் மன நிலையை கொடுக்கும்.
அதுவும் கொரோனா கால கட்டத்தில் நேர்மையாக சிந்திப்பது உங்களுக்கு தேவையற்ற பதட்டத்தை குறைக்க உதவும். எனவே இந்த தொற்று நோய் கால கட்டத்தில் எப்படி நம் எதிர்மறை சிந்தனைகளை விரட்டி நேர்மையாக சிந்திக்கலாம். வாங்க தெரிஞ்சுப்போம்.
நேர்மறை வாய்ப்புகளை அடையாளம் காணுங்கள்
கடந்த கால சவால்களை நகர்த்தி செல்ல உங்களுக்கு நேர்மறையான நம்பிக்கை கை கொடுக்கும். அவற்றை மாற்றக்கூடியதாகவும் வெளிப்புறமாக அணுகவும் உதவுகிறது. எங்கே இருந்து எதிர்மறை எண்ணங்கள் வருகிறது என்பதை கவனியுங்கள். இது நேர்மறைக்கான வாய்ப்புகளை அடையாளம் காண உதவுகிறது.
சுறுசுறுப்பாக இருங்கள்
வழக்கமான உடற்செயல்பாடு உங்க மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்க உதவுகிறது. இதன் மூலம் பிரச்சினையின் பிரகாசமான பக்கத்தை கண்டு நீங்கள் எளிதாக தீர்வு காணலாம். எனவே ஒவ்வொரு நாளும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய முயற்சி செய்யுங்கள். உங்க மனதையும் உடலையும் வளர்க்கும் ஆரோக்கியமான உணவில் கவனம் செலுத்துங்கள்.
தவறாமல் தியானியுங்கள்
ஒவ்வொரு நாளும் 10 நிமிடங்கள் தியானம் செய்வது உங்க மன அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், பதட்டத்தை குறைக்கவும், உங்க ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. எனவே உங்க மன ஆரோக்கியத்தை மேம்படுத்த தவறாமல் தியானம் செய்யுங்கள்.
நேர்மறை சிந்தனை உடைய நபர்களையே சுற்றி வைத்து கொள்ளுங்கள்
எதிர்மறை நபர்கள் உங்கள் அருகில் இருந்தால் தேவையில்லாத பிரச்சினைக்கு மன அழுத்தம் அதிகமாகி அவர்களின் அவநம்பிக்கை உங்களுக்கு ஒரு தொற்றுநோயாக மாறும். இது உங்களுக்கு மன அழுத்தத்தை மாறி மாறி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே நேர்மறையான சிந்தனையை பெற உங்களைச் சுற்றி நேர்மறையான எண்ணங்கள் உடைய நபர்களையே வைத்துக் கொள்ளுங்கள்.
நன்றியுணர்வை பயிற்சி செய்யுங்கள்
நன்றியுணர்வு உங்க மன அழுத்தத்தை குறைக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் சிறந்த தூக்கத்தை உங்களுக்கு வழங்கவும் உதவுகிறது. உங்க வாழ்க்கையை சிறப்பானவராக மாற்றும் நபர்கள் மீது நன்றியுணர்வை வைத்து இருங்கள். அவர்கள் செய்கின்ற செயலுக்கு பாராட்டுங்கள், நன்றி தெரிவியுங்கள்.
சில நேரங்களில் வாழ்க்கை எளிதில் பயணிக்க முடியாத வளைகோல்களை வீசுகிறது. நேர்மறை பயிற்சி எப்போதும் எளிதானது அல்ல என்றாலும் உங்க உடல் நலம் மற்றும் நீண்ட ஆயுளுக்கான முயற்சிக்கு இது மதிப்புள்ளது.