உலர்ந்த இஞ்சியின் சுக்கு எனப்படும். இஞ்சியைத் தேனில் ஊற வைத்து அந்தத் தேனைத் தினமும் அருந்தி வந்தால். செரிமானப் பிரச்சனைகள் ஏதும் வராது.
சுக்கு மற்றும் தனியாவைத் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, பால், சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து தயாரிக்கப்படும் காபியை குடித்தால் களைப்புகள் நீங்கும். பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படுகிற தலைவலியினை நீக்க சுக்குப் பொடியைத் தேனில் கலந்து 2 வேளை சாப்பிட்டால் குணமாகும். இரைப்பையில் இருக்கிற கிருமியை அழித்து, செரிமானத்தைச் சீராக வைத்துக்கொள்ள உதவுதல், வீக்கத்தைக் குறைத்தல் மற்றும் வலி நிவாரணியாக செயல்படல் ஆகிய அனைத்திற்கும் சுக்கு பயன்படுகிறது.