30 cook pic
ஆரோக்கிய உணவு

இதோ அற்புதமான எளிய தீர்வு! சளிக்கு இதமாக இருக்கும் மைசூர் ரசம்

தற்போது மழை நன்கு பெய்து கொண்டிருப்பதால், தொண்டை கரகரவென்றும், சளி பிடிப்பது போன்றும் இருக்கும். அப்போது நன்கு காரமாகவும், உடலுக்கு இதமாகவும் இருக்கும்படியான உணவுகளை உட்கொள்ள நினைப்போம். அப்படி நினைக்கும் போது, மைசூர் ரசம் செய்து சாதத்துடன் சாப்பிட்டால், மிகவும் நன்றாக இருக்கும்.

இங்கு அந்த மைசூர் ரசத்தின் செய்முறை மற்றும் வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்த்து செய்து சுவைத்து மகிழுங்கள்.

 

தேவையான பொருட்கள்:

மல்லி – 2 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன்
வரமிளகாய் – 2
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
துருவிய தேங்காய் – 2 டீஸ்பூன்
துவரம் பருப்பு – 100 கிராம்
புளி – 50 கிராம் (நீரில் ஊற வைத்து சாறு எடுத்தது)
தக்காளி – 1-2 (நறுக்கியது)
ரசம் பொடி – 2 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி- சிறிது
கறிவேப்பிலை – சிறிது
பூண்டு – 2 பல் (தட்டியது)
நெய் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், மல்லி, மிளகு, கடலைப் பருப்பு, வரமிளகாய், பெருங்காளத் தூள் மற்றும் தேங்காய் ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் துவரம் பருப்பை நன்கு கழுவிப் போட்டு, தண்ணீர் ஊற்றி, 1-2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி, பின் தக்காளி மற்றும் புளிச்சாறு சேர்த்து, பச்சை வாசனை போக கொதிக்க விட வேண்டும்.

பிறகு அதில் உப்பு, வேக வைத்துள்ள துவரம் பருப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து கிளறி விட வேண்டும்.

கலவையானது சற்று கெட்டியாக இருந்தால், அதில் வேண்டிய அளவு தண்ணீர் ஊற்றி, பின் அதில் ரசப் பொடி சேர்த்து கிளறி, 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

இறுதியில் மற்றொரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய்/நெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை மற்றும் சிறிது பூண்டு தட்டி சேர்த்து தாளித்து, பின் ரசத்தில் ஊற்றி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், மைசூர் ரசம் ரெடி!!!

Related posts

உங்களுக்கு தெரியுமா மாதுளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

அடங்கப்ப முட்டைக்கோஸ் சாப்பிட்டால் இவ்வளவு நோய் குணமாகுமா.?

nathan

உங்களுக்கு தெரியுமா? சிறந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பாசிப்பயறின் பலன்கள்..!

nathan

தினமும் காலையில் சூடான நீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதால் உடல் எடை குறையுமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… வயிறு தட்டையா ஸ்லிம்மா இருக்கணும்னா இந்த இஞ்சி-சீரகத் தண்ணி குடிங்க!

nathan

ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிடுவது நல்லது? தெரிந்துகொள்வோமா?

nathan

வெண்டைக்காய் பற்றி தெரியுமா..?அப்ப இத படிங்க!

nathan

பல பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கும் மாதுளை இலைகள்-தெரிஞ்சிக்கங்க…

nathan

பாகற்காய் சாப்பிட கசக்கிறதா ?… இப்படி சாப்பிடுங்க கசக்கவே கசக்காது

nathan