காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது.
இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.
காளானில் உடலுக்கு மிக அவசியமான பொட்டாசியம் சத்து நிறைந்ததுள்ளது. ஆறாத புண்களைக் குணப்படுத்தும். மேலும் காளானில் வைட்டமின் – ஏ அதிக அளவில் இருக்கிறது. வைட்டமின் பி, டி , இ ஆகியவை உள்ளன.
காளான் எரிட்டினைன் என்னும் கொழுப்புப் பொருட்களை எந்தவித பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை ஆரோக்கியமாக்குகிறது. இவ்வாறு உடலில் அதிகம் தேவையில்லாமல் சேரும் கொழுப்பை கட்டுப்படுத்துகிறது. இதனால் இரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் பலம் அடைந்து நன்கு சீராக செயல்படுகிறது.
காளான் seithipunal
இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம். காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணம் அளிக்கும்.
தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுகிறது. 100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது. மேலும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டசத்தாக அமைகிறது.
கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் சீராகும். காளானை முட்டைக்கோஸ், பச்சைப் பட்டாணியுடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண், ஆசனப்புண் போன்றவை குணமாகும்.
காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டதால் பாலுட்டும் பெண்கள் காளான் உண்பதைத் தவிர்ப்பது நல்லது.