நம் உடலை ஆரோக்கியமாக வைப்பதில் வைட்டமின்கள், தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில் வைட்டமின் சி, ஏ, டி, ஈ போன்ற வைட்டமின்களைப் பற்றி அடிக்கடி கேள்விப்பட்டு இருப்போம். வைட்டமின் F மற்றும் கே பற்றி நீங்கள் கேள்விப்பட்டது உண்டா? இதுவும் நம் உடலுக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்து தான் என்கிறார்கள் மருத்துவர்கள்.
உண்மையில் பார்க்க போனால் வைட்டமின் F ஒரு வைட்டமின் அல்ல. அது இரண்டு கொழுப்புகள் ALA (ஆல்பா-லினோலெனிக் அமிலம்) மற்றும் LA (லினோலிக் அமிலம்) ஆகும். இந்த இரண்டு அமிலங்களும் மனித உடலுக்கு அத்தியாவசியமான ஒன்றாகும். இதில் ALA ஒமேகா-3 கொழுப்பு அமிலத்திலும், LA ஒமேகா-6 கொழுப்பு அமில குடும்பத்தையும் சார்ந்தது.வைட்டமின் F பற்றி கேள்விபட்டதுண்டா? இதுவும் நம் உடலுக்கு மிகவும் முக்கியமான ஊட்டச்சத்தாம்..
வைட்டமின் F செயல்பாடுகள்
இந்த ALA மற்றும் LA கொழுப்பு அமிலங்கள் மனித வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இது உடலுக்கு ஆற்றலை அளிப்பதோடு உயிரணுக்களுக்கு செல் கட்டமைப்பை தருகிறது. இதர செயல்பாடுகளையும் கீழே அறியலாம்.
கலோரிகளை வழங்குதல்
இந்த அமிலங்கள் நமது உடலில் உள்ள செல்களுக்கு கட்டமைப்பையும் நெகிழ்வுத் தன்மையையும் அளிக்கிறது. மேலும் இது கொழுப்புகளை எளிதாக மாற்றி மற்ற கொழுப்புகளாக நம் உடல் பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலும் கண் பார்வை, அறிவாற்றலை அதிகரிக்கிறது. அதே மாதிரி நரம்புகளுக்கு சிக்னலை கடத்த பயன்படும் வேதிப் பொருளுக்கு இந்த கொழுப்புகள் அவசியம். இது போக நோயெதிப்பு மண்டல செயல்பாடுகள், இரத்த அழுத்தம் மற்றும் இரத்த ஓட்டம் போன்ற பல முக்கிய செயல்பாடுகளுக்கும் இந்த வைட்டமின் F உதவுகிறது.
இதய ஆரோக்கியம்
இந்த ALA அமிலம் இதயம் தொடர்பான பிரச்சனைகளை குறைக்கிறது. 1% ALA உடம்பில் இருந்தால் நீங்கள் 10 % வரை மாரடைப்பு அபாயத்தை குறைக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
டைப் 2 சர்க்கரை நோய்
200,000 பேரைக் கொண்டு ஒரு ஆராய்ச்சி நடத்தப்பட்டது. இதில் LA என்ற லினோலிக் அமிலம் கொண்ட நபர்களுக்கு சர்க்கரை நோயைக் கட்டுபடுத்த உதவி புரிகிறது என்பது தெரிய வந்துள்ளது. எனவே உணவில் நீங்கள் சேர்த்து கொள்ளும் சாச்சுரேட்டட் கொழுப்புக்கு பதிலாக இந்த அமில கொழுப்பை உணவில் சேர்த்துக் கொண்டால் 14 % வரை சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
மூளைத்திறன்
ஒமேகா கொழுப்பு அமிலங்களை எடுப்பது உங்க மூளைத் திறனை அதிகரிக்கிறது. தேவையில்லாத பயம் மற்றும் மன அழுத்தத்தை விரட்டுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
மூட்டுகளில் ஏற்படும் வீக்கம், நுரையீரல், மூளை மற்றும் ஏன் வயிற்றில் ஏற்படும் அழற்சி தொற்றை கூட ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மூலம் குறைக்கலாம். அந்தளவுக்கு இதன் பயன் ஏராளம்.
தீங்கு விளைவிக்கும் சாச்சுரேட்டட் கொழுப்புகளை உணவில் இருந்து நீக்கி விட்டு வைட்டமின் Fயை எடுத்துக் கொள்ளுங்கள். இது 21 % இதய நோய் ஆபத்தில் இருந்து உங்களை காக்கிறது.
கருவில் வளரும் குழந்தை வளர்ச்சிக்கு
கருவுற்ற பெண்கள் இந்த வைட்டமின் F உணவுகளை எடுத்துக் கொண்டு வந்தால், அது குழந்தையின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
வைட்டமின் F உள்ள உணவுகள்
நீங்கள் வைட்டமின் F நன்மைகளை பெற நினைத்தால் முதலில் வைட்டமின் F உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். பாதாம் பருப்பு, வால்நட்ஸ், ஆலிவ் ஆயில், சோயாபீன் ஆயில், ஆளி விதைகள், சூரிய காந்தி எண்ணெய், சியா விதைகள், ஆளி விதை எண்ணெய் மற்றும் மக்காச் சோள எண்ணெய் இவற்றில் வைட்டமின் F கொழுப்பு அமிலங்கள் அடங்கியுள்ளன. எனவே இந்த உணவுகளை அன்றாட உணவுப் பழக்கவழக்கங்களில் சேர்த்து வந்தால் நோயின்றி வாழலாம்.