27.8 C
Chennai
Tuesday, Nov 5, 2024
1908173 827527357306704 8339767830521320085 n
ஆரோக்கிய உணவு

இதய நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கும் மத்தி மீன்

நாகை, : விலை மலிவாக கிடைக்கும் மத்தி மீன்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் என்று நாகை மீன்வள பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
மனிதனின் உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் புரதச்சத்து மிகவும் அவசியம். தாவரம், விலங்குகளிலிருந்து புரதம் நமக்கு கிடைக்கிறது. மாமிச புரதங்களில் மிக சிறந்தது மீன் புரதமாகும். இவற்றில் முக்கியமான ஒன்று மத்தி மீன்கள். ஆண்டுதோறும் ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை மத்தி மீன்கள் கிடைக்கிறது. ரூ.15 முதல் ரூ.20க்குள் மிக மலிவாக மத்தி மீன்கள் கிடைக்கும். மேலும் மத்தி மீன்களில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான கொழுப்பு, வைட்டமின்கள், தாதுச்சத்துக்கள் உள்ளது.
100 கிராம் மத்தி மீனில் புரதச்சத்து 20.9 கிராம், கொழுப்பு சத்து 10.5 கிராம், சாம்பல் சத்து 1.9 கிராம், நீர்ச்சத்து 66.70 கிராம் உள்ளது. மத்தி மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகம் உள்ளதால் ட்ரைகிளிசரைடுகள் அளவை குறைத்து இதய நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது. மேலும் தோல்நோய், மூளை மற்றும் நரம்பு நோய்கள், வயதானவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், ஆஸ்துமா, முடி உதிர்தல் ஆகிய நோய்கள் வரும் வாய்ப்பை குறைக்கும்.
மத்தி மீனில் வைட்டமின் டி என்ற உயிர்ச்சத்து உள்ளது. இந்த சத்து செல்களின் செயல்பாட்டிற்கு உதவுகிறது. மத்தி மீன் பல்வேறு புற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது.
நீரிழிவு நோய்கள் உள்ளவர்கள், மத்தி மீனை உணவாக எடுத்து கொண்டால் நோய் எதிர்ப்பு திறன் அதிகரித்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம். மத்தி மீன்களில் கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. பாஸ்பரஸ் சத்தும் இருப்பதால் எலும்புகளுக்கு வலிமை கிடைக்கிறது. மத்தி மீனில் வைட்டமின் பி 12 உள்ளது. இது உடலில் ஹோமோசைஸ்டீனின் அளவை சமநிலைப்படுத்தி இதய சுவர்களில் பாதிப்பு ஏற்படுவதை குறைக்கிறது. அயோடின் என்ற தாதுச்சத்தும் உள்ளதால் முன் கழுத்துகழலை நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது. மத்தி மீன் செல்களில் இருந்து கால்சியம் மாத்திரைகள் தயாரிக்கப்படுகிறது.
இந்த மாத்திரைகளை உட்கொள்பவர்களின் தோல்கள் பளிச்சென்றும், நகங்கள் உறுதியாகவும், கண் பார்வை தெளிவாக இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இத்தகைய மருத்துவப்பயனுள்ள, விலை மலிவான மத்தி மீன்களை பொதுமக்கள் உண்ணும் வழக்கத்தை அதிகப்படுத்தி நோயின்றி வாழலாம். இவ்வாறு நாகை மீன்வள பல்கலைக்கழக மீன்வளத் தொழிலில் நுட்ப நிலைய இயக்குனர் முனைவர் நாகூர் மீரான், பேராசிரியர் கணேசன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.1908173 827527357306704 8339767830521320085 n

Related posts

சுவையான பசலைக்கீரை பக்கோடா

nathan

தெரிஞ்சிக்கங்க…உடல் எடையை குறைக்க உதவும் மிகவும் சிறப்பான இந்திய காலை உணவுகள்!!!

nathan

சூப்பர் டிப்ஸ்! நீண்ட காலம் நோயின்றி வாழ ஆசை வேண்டுமா? இதோ எளிய 10 பாட்டி வைத்திய முறைகள்

nathan

கோதுமையால் தீவிர வாய்வுத் தொல்லையும், வயிற்று வலியும் ஏற்படுமா?

nathan

பலரும் அறிந்திராத பூண்டு பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!

nathan

இவற்றை உட்கொள்வதன் மூலம், இதய நோயில் இருந்து பாதுகாப்புடன் இருக்கலாம்.

sangika

நீங்கள் வாங்கும் கருப்பட்டி ஒரிஜினல்தானா..?

nathan

மறதி நோய் வராமல் தடுக்கும் வால்நட்

nathan

நீங்கள் இளமை, ஆரோக்கியத்துடன் வாழ உதவும் காப்பர் உணவுகள்!முயன்று பாருங்கள்

nathan