பொதுவாக இதயப் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு மிக முக்கியக் காரணமே கொலஸ்ட்டிரால் ரத்தத்தில், ரத்தக் கூழாய்களில் படிவது தான் காரணம்.
இதற்கு முக்கிய காரணம் உடலில் தேங்கியிருக்கின்ற அதிக அளவிலான கெட்ட கொலஸ்டிரால் நம்முடைய தவறான உணவுப் பழக்கத்தால் உண்டாகிறது.
உடலில் தேங்கியிருக்கும் அதிகப்படியான கெட்ட கொலஸ்டிராலை ஹைப்பர் கொலஸ்ட்ரோலெமியா என்று அழைப்பார்கள்.
ரத்தக்குழாய்களில் படியும் கொழுப்பினால் உடலில் ரத்த ஓட்டம் குறைந்து விடுகிறது. அதனால்தான் திடீரென்று நெஞ்சு வலி, வலிப்பு நோய் போன்றவை உண்டாகின்றன. இதனை உணவின் மூலமாகவே செய்து கொள்ள முடியும். தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வொம்.
- உங்களுடைய உணவில் அரிசிக்குப் பதிலாக ஓட்ஸ், தினையரிசி, சிறுதானியங்கள், பார்லி போன்றவற்றை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள்.
- நம்முடைய தினசரி உணவில் பருப்பு வகைகளான பட்டாணி, பீன்ஸ், பருப்பு போன்றவற்றை நிறைய சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- பாதாம், வால்நட் போன்ற நட்ஸ் வகைகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதுமட்டுமின்றி வேர்க்கடலையை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் வறுத்த வேர்க்கடலைக்கு பதிலாக பச்சை வேர்க்கடலையைச் சேர்த்துக் கொள்ளலாம். அதில் நிறைய புரதங்கள் உள்ளன.
- உங்களுடைய இதயத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்றால் நீங்கள் உங்களுடைய தினசரி உணவில் பூண்டை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
- ராஸ்பெரிஸ், ப்ளூபெரி, ஸ்ட்ராபெர்ரி ஆகியவை உடலில் உள்ள நல்ல கொலஸ்டிராலை அதிகரித்து கெட்ட கொலஸ்டிராலை குறைக்கும் தன்மை கொண்டது. இந்த பெர்ரி வகைகளில் அதிக அளவில் ஆன்டி – ஆக்சிடண்ட் நிறைந்திருப்பதால் அது உடலில் நல்ல கொழுப்பை அதிகரித்து சமநிலைப்படுத்துகிறது.