உலக அளவில் 30 கோடி பேர் ஆஸ்துமா நோயினால்பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் பேர்இறக்கின்றனர். 2025ல் மேலும் 10 கோடி பேர் இந்நோயினால்பாதிக்கப்படுவர் என கணக்கிடப்பட்டுள்ளது.
ஆஸ்துமாவை குறைக்க நாம் அன்றாட பயன்படுத்தும் உணவுகளை கொண்டே சரிசெய்யலாம் அவை என்னென்ன என்பதை பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்
அதிமதுரம் இந்தியாவின் பாரம்பரிய மருத்துவமுறைகளில் மிக முக்கியமான இடம் வகிப்பது. இந்தியா மட்டும் இல்லாமல் சீன மருத்துவத்திலும் ஆஸ்துமாவுக்கு எதிரான மிகச்சிறந்த மருந்தாக அதிமதுரம் கருதப்படுகிறது.
நுரையீரலின் நுண் துளைகளிலும் மூச்சுக் குழாயிலும் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு ஆஸ்துமா பிரச்சனையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில் அதிமதுரம் மிகச் சிறந்தது.
மாதுளை சாறு மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து குடிக்கலாம். முசுமுசுக்கை என்ற இலையை நன்றாக வதக்கி பின்பு உண்ணலாம்.
கொஞ்சம் உணவில் மாற்றம் செய்யலாம். தூதுவளை இலைகளில் ரசத்தை வைத்து சாதத்தில் பிசைந்து உண்ணலாம். வில்வ இலையுடன், மிளகை சேர்த்து மென்று உண்ணலாம். இதன் பிறகு நன்றாக தண்ணீர் குடித்துக் கொள்ள வேண்டும்.
மிளகு மூன்று, கற்பூரவல்லி இலை மூன்று, வெற்றிலை இரண்டு எடுத்துக் கொள்ளவும். இவை மூன்றையும் நீரில் கொதிக்க வைக்க வேண்டும். பின்பு வற்றியவுடன் அந்த நீரை குடிக்கலாம்.
ஏலக்காய் பொடியை நெய்யில் கலந்து கொள்ள வேண்டும். பின்பு காலை மற்றும் மாலை வேளைகளில் வெறும் வயிற்றில் உண்டு வந்தால் சளிப் பிரச்சனைகள் நீங்கிவிடும்.
கடுகை அரைத்து அதனுடன் தேன் கலந்து உண்டால் காலை வேலைகளில் வரும் வறட்டு இருமல் குறைந்து விடும். ஆடாதோடா இலையை கீரைபோல சாதத்திலும் பிசைந்து உண்டு வரலாம்.
மஞ்சள் தூள்1 ஸ்பூன், தேன் 1 ஸ்பூன் ஆகியவற்றை கலந்து உண்டு வரலாம். எலுமிச்சை சாற்றுடன் தேன் கலந்து சாப்ப்பிட்டால், இருமல் போன்ற பிரச்சனைகள் நின்றுவிடும்.