சாமை அரிசி புலாவ் உடலுக்கு ஆரோக்கியமானது மட்டுமில்லாமல் மிகுந்த சுவையுடையது. இன்று சாமை அரிசியை வைத்து புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
ஆரோக்கியமான சாமை அரிசி புலாவ்
தேவையான பொருட்கள் :
சாமை அரிசி – 2 கப்
வெங்காயம் – 2
பச்சைமிளகாய் – 3
இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
பச்சை பட்டாணி – 1/4 கப்
மிளகுதூள் – 2 டீஸ்பூன்
கேரட், பீன்ஸ் – 1 கப்
பிரியாணி இலை – 1
ஏலக்காய் 2
பட்டை, கிராம்பு -2
எண்ணெய் – தேவையான அளவு
தேங்காய்ப்பால் – 1 கப்
உப்பு – சுவைக்கேற்ப
கொத்தமல்லி, புதினா – சிறிதளவு
செய்முறை :
* சாமை அரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
* காய்கறிகள், வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய், கிராம்பு போட்டு தாளித்த பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
* வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதக்கவும்.
* பிறகு, நறுக்கிய கேரட், பீன்ஸ் போட்டு வதக்கிய பின், சாமை அரிசியை சேர்த்து தேங்காய்ப்பாலை அதில் ஊற்றி கடாயை மூடி 15 நிமிடங்கள் வேக வைக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.
* சாமை அரிசி வெந்தபின் அதன் மேலாக புதினா, கொத்தமல்லி இலையைத் தூவி சிறிது நேரம் மூடி வைத்த பின் இறக்கி பரிமாறலாம்.
* ருசியான சாமை அரிசி புலாவ் ரெடி!