பொதுவாக ஜிம் சென்று உடலை ஏற்ற நினைக்கும் போது, தசைகளின் வளர்ச்சிக்கு புரோட்டீனை போதிய அளவில் எடுத்து வர வேண்டும். முக்கியமாக புரோட்டீன் பவுடரை எடுக்கும் போது, அதை எப்போது எடுத்துக் கொள்ள வேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தில் தவறாமல் எடுத்து வர வேண்டும். முக்கியமாக கடைகளில் விலைக் குறைவில் விற்கப்படும் புரோட்டீன் பவுடரை வாங்கிப் பருகினால், பல பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.
அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சாகும் என்ற பழமொழிக்கு ஏற்ப, தசைகள் வேகமாக வளர்ச்சி அடைய வேண்டுமென்று புரோட்டீன் பவுடரை அதிகம் எடுத்து வந்தால், தீவிரமான பக்க விளைவுகளை சந்திக்கக்கூடும். அதுமட்டுமல்லாமல், புரோட்டீன் பவுடரை உட்கொண்டு வரும் போது, ஒரு நாளைக்கு பருக வேண்டிய நீரின் அளவை விட, அதிகமாக தண்ணீரைக் குடிக்க வேண்டும். இது மிகவும் முக்கியம்.
இங்கு புரோட்டீன் பவுடரை அளவுக்கு அதிகமாக எடுத்து வந்தால் சந்திக்கும் பக்க விளைவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
உடல் பருமனாகும்
புரோட்டீன் பவுடரில் சர்க்கரை வடிவில் கார்போஹைட்ரேட் உள்ளது. மேலும் கொழுப்புக்களும் உள்ளது. எனவே இதனை அளவுக்கு அதிகமாக எடுத்துமு வந்தால், உடலில் கொழுப்புக்கள் தேங்கி, உடல் பருமனாகிவிடும். எனவே இதனை அளவுக்கு அதிகமாக எடுப்பதை தவிர்த்திடுங்கள்.
சிறுநீரக கற்கள்
புரோட்டீன் பவுடரை அளவுக்கு அதிகமாக எடுத்து வந்தால், சிறுநீரக கற்கள் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அதிலும் தண்ணீர் போதிய அளவில் இல்லாமல், அதற்கு குறைவாக குடித்து வந்தால் நிச்சம் சிறுநீரக கற்கள் விரைவில் உருவாகிவிடும். அதுமட்டுமின்றி, சில நேரங்களில் சிறுநீரக செயலிழப்பையும் ஏற்படுத்தும்.
செரிமான பிரச்சனைகள்
புரோட்டீன் பவுடரில் லாக்டோஸ் உள்ளது. இது சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். அப்படி லாக்டோஸ் சகிப்புத்தன்மை உள்ளவர்கள் இதனை எடுத்தால், தீவிரமான செரிமான பிரச்சனைகனை சந்திக்கக்கூடும்.
கீல்வாதம்
புரோட்டீன் பவுடர் கீல்வாதத்தை ஏற்படுத்தாது. ஆனால் கீல்வாதம் உள்ளவர்கள், இதனை அளவுக்கு அதிகமாக எடுத்து வந்தால், கீல்வாதத்தை மோசமாக்கும். எனவே இதனை எடுத்துக் கொள்ளும் முன், மருத்துவரிடம் ஆலோசித்துக் கொள்ள வேண்டும்.
கல்லீரல் பிரச்சனைகள்
புரோட்டீன் பவுடரை அதிகம் எடுத்து வந்தால், கல்லீரல் பிரச்சனைகள் வரக்கூடும். எனவே புரோட்டீன் பவுடரை குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தில் மட்டும் எடுத்து வர வேண்டும். முக்கியமாக இதனை எடுக்கும் முன், மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்.
இதய நோய்கள்
அளவுக்கு அதிகமாக புரோட்டீன் பவுடர் சாப்பிட்டு வந்தால், இதய நோயால் பாதிக்கப்பட நிறைய வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் நம்புகின்றனர். அதிலும் மாரடைப்பு, இதய செயலிழப்பு போன்றவை ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
இரத்தத்தில் அமிலத்தன்மை அதிகமாகும்
புரோட்டீன் பவுடரை அளவுக்கு அதிகமாக எடுத்து வந்தால், இரத்தத்தின் pH அளவு அதிகமாகும். முக்கியமாக இரத்தத்தில் புரோட்டீன் அளவு அதிகம் இருந்தால், அது சிறுநீரகத்தில் பிரச்சனையை ஏற்படுத்தும்.
சோர்வு
புரோட்டீன் பவுடரை அதிகம் எடுப்பதால் ஏற்படும் செரிமான பிரச்சனை, உடலில் சோர்வையும் அதிகமாக்கும். அதுமட்டுமின்றி, வயிற்று உப்புசம், வாய்வுத் தொல்லை, வயிற்றுப் பிடிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு அதிகம் உள்ளாக்கும்.
வயிற்றுப்போக்கு
புரோட்டீன் பவுடரினால் ஏற்படும் மற்றொரு பக்க விளைவு தான் வயிற்றுப் போக்கு. செரிமான மண்டலத்தில் புரோட்டீன் அதிகம் சேரும் போது, அது இரத்தம் கலந்த மலத்தை வெளியேற்றும்.
மூச்சுத்திணறல்
லாக்டோஸ் சகிப்புத்தன்மை கொண்டவர்களுக்கு புரோட்டீன் பவுடர் அலர்ஜியை ஏற்படுத்தும். அதிலும் மூச்சு விடுவதில் சிரமத்தை ஏற்படுத்தும். எனவே இந்த பிரச்சனை வந்தால், உடனே மருத்துவரை சந்திக்கவும்.
குமட்டல்
சிலருக்கு புரோட்டீன் பவுடரை அதிகம் எடுத்து வந்தால், குமட்டல் ஏற்படும். உடலில் புரோட்டீன் அளவு அதிகமானால், குமட்டல் வரும். ஆகவே இந்த அறிகுறி தெரிந்தால், உடனே புரோட்டீன் பவுடர் எடுக்கும் அளவைக் குறைக்கவும்.