27.8 C
Chennai
Tuesday, Nov 5, 2024
6 coverimagealcoholandbloodsugar
ஆரோக்கியம் குறிப்புகள்

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…அல்கஹோல் மற்றும் இரத்த சர்க்கரை பற்றி நீங்கள் அறிந்துக்கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்!

மது அருந்துவதனால் ஆண்மைக்குறைவு ஏற்படும், புற்றுநோய் வரும், உடல் எடை அதிகரிக்கும் என அறிந்திருப்பீர்கள். இதற்கான காரணம் என்னவென்று நம்மில் யாரும் அறிந்திருக்க மாட்டோம். மது அருந்துவதனால் நமது உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இதனால் தான் பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதிலும் சிலர் மது மட்டும் தான் அருந்துவார்கள், தண்ணீரோ அல்லது சோடாவோ கலக்க மாட்டார்கள், ஏனெனில் அது அவர்களது கௌரவத்திற்கு இழுக்கு. இன்னும் சிலர் சாப்பாடு கூட சரியாக சாப்பிட மாட்டார்கள். இவையெல்லாம் தான் ஓர் நாள் திடீரென உடல்நல குறைவு ஏற்பட காரணமாக இருக்கிறது.

கல்லீரலையும் கொஞ்சம் கவனிங்க!

உங்களுக்கு தெரியுமா இந்நாட்களில் ஏற்படும் உயிரழப்புகளுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் விபத்துகளினாலும் என அனைத்து வழிவகைகளிலும் காரணமாக இருப்பது மதுப்பழக்கம் தான். நம் மாநிலத்திலோ, நாட்டிலோ மற்றும் அல்ல, இது உலகளாவிய கருத்து. அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் கூட இதற்கு விதிவிலக்கல்ல. சரி இனி, அல்கஹோல் மற்றும் இரத்த சர்க்கரை பற்றி நீங்கள் அறிந்துக்கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் பற்றி தெரிந்துக்கொள்ளலாம்….

கல்லீரல் பிரச்சனைகளை தவிர்க்க சில யோசனைகள்!

வெறும் வயிறில் குடிப்பதனால்

நீங்கள் தினமும் குடிப்பவரா? ஆம்! ஆனாலும் நான் குறைவாக தான் குடிக்கிறேன் என கூறினாலும். வெறும் வயிற்றில் நீங்கள் குடித்தால் உங்களது உடலில் இரத்த சர்க்கரை மிக அதிகமாக உயரும். இதனால் பின்னாட்களில் நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.

கேக்

நீங்கள் மது அருந்தும் போது, ஒரு இனிப்பான கேக்கில் இருக்கும் சர்க்கரை ஏற்படுத்துவதை விட அதிகமாக மது உங்களது இரத்த சர்க்கரை அளவை மிகுதியாக உயர்த்துகிறது. எனவே, நீங்கள் மது அருந்துவதை கட்டாயம் குறைத்துக்கொள்ள வேண்டும்.

உணவின் அளவு

சிலர் இதை சொல்லி நீங்கள் முன்பே கேட்டிருக்கலாம், நீங்கள் குடித்தாலும் சரி… அதன் பிறகு நீங்கள் குடித்ததற்கு ஏற்றார் போல் உணவை உட்கொள்ளுதல் அவசியம். மூக்கு முட்ட குடித்துவிட்டு இனி எங்கு சாப்பிட இடம் என கேள்வி கேட்பவருக்கு மேலோகத்தில் விடை காத்திருக்கிறது.

உடலுறவு
மது அருந்தியவுடன் உடலுறவுக்கொள்வதை தவிருங்கள். உடலில் மதுவும், உச்சமடைய உதவும் ஹார்மோனும் அதிகரிக்கும் போது, உங்கள் உடலில் இருக்கும் இரத்த சர்க்கரை அளவு மிகக்குறையவாக வாய்ப்புகள் இருக்கின்றன.

நீரிழிவு

நீரிழிவு நோய் உழவர்கள் கட்டாயம் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது உங்களுக்கு உயரழுத்த இரத்தக்கொதிப்பும், சர்க்கரை அளவையும் அதிகரிக்கவல்லது.

அளவு

மது அவரவர் உடல்நிலத்தை பொறுத்து ஆப்பு வைக்கும். நீரிழிவு நோய் உள்ளவர்கள், இரத்தக்கொதிப்பு உள்ளவர்கள் என அதற்கென சில பிரிவுகள் இருக்கின்றன. அதை தவிர்த்து, தினமும் சிறிதளவு மது அருந்துவது உடல்நலத்திற்கு நல்லது எனவும் கூறுகின்றனர்.

சரியான முறை

சிலர் தினமும் மது அருந்துவார்கள் ஆனால், அவர்களுக்கு எந்த ஒரு உடல்நல பாதிப்பும் ஏற்படாது அதற்கு காரணம். அவர்கள் சரியான அளவு மட்டும் மது அருந்துவது மற்றும். உணவு உட்கொள்ளும் முறை. நீங்கள் மது அருந்தும் போது அதற்கு ஏற்ற அளவு உணவு எடுத்துக்கொண்டால் எந்த பாதிப்பும் ஏற்படாது. இது அனைவருக்கும் பொருந்துமா என்றால் இல்லை. உடல்நல கோளாறுகள், ஏதேனும் நோய் பாதிப்புகள் உள்ளவர்கள் கட்டாயம் மது அருந்துவதை நிறுத்ததான் வேண்டும்.

Related posts

குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள் -தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

என்னென்ன சரும பிரச்சினைகள் கர்ப்ப காலத்தில் ஏற்படும் தெரியுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா ஊட்டச்சத்து நிபுணர்கள் தவிர்க்க சொல்லும் ஏழு உணவுப் பொருட்கள்!!!

nathan

நீங்கள் காய்கறி வாடாம இருக்க பிளாஸ்டிக் கவர்ல போட்டு வைக்கறீங்களா?அப்ப இத படிங்க!

nathan

தெரிஞ்சிக்கங்க…கார்ட்டூன்கள் குழந்தைகள் மீது ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகள்!!!

nathan

தெரிஞ்சிக்கங்க…மனமானது சோர்ந்து போயிருக்கும் போது செய்ய வேண்டிய விஷயங்கள்!!!

nathan

கர்ப்பத்தை தடுக்கும் நீர்க்கோவைக்கு தீர்வு..

nathan

தெரிஞ்சிக்கங்க…பூனை குறுக்கே போனால் இது தான் அர்த்தமாம்.. ! !

nathan

சளி , காய்ச்சல் , இருமல் குணமாக இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan